Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி ஊழியர்களுக்கு கணினி பயிற்சி

Print PDF

தினமலர் 06.03.2010

மாநகராட்சி ஊழியர்களுக்கு கணினி பயிற்சி

சென்னை : மாநகராட்சி அனைத்து துறைகளிலும் கணினிமயமாக்க 150 அலுவலர் களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் அனைத்து பள்ளிகளையும் கணினிமயமாக்க வசதியாக அலுவலர் களுக்கு வேளச்சேரி, எச்.சி.எல்., நிறுவனத்தில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியை துவக்கி வைத்து மேயர் சுப்ரமணியன் பேசியதாவது: மாநகராட்சியில் அனைத்து துறைகளிலும் கணினிமயமாக்க ஊழியர்களுக்கு பயிற்சி அளிக் கப்படுகிறது. ஏற்கனவே அண்ணா மேலாண்மை கழகத்தின் மூலம் ஊழியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப் பட்டது. மாநகராட்சியில் அனைத்து அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு கம்ப்யூட் டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதை கையாள்வது குறித்து, எச்.சி.எல்., நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக் கப்படுகிறது. அலுவலக பணிகள் கணினி மயமாக்குவதற்கு 150 அலுவலர்களுக்கு 60 மணி நேரம் பயிற்சி தரப் படும். ஒரு மாதத்தில் பயிற்சி முடிக்கப்படும். இதற்கு மாநகராட்சி நான்கு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவிடுகிறது. அதுபோல் மாநகராட்சியில் இருக்கக் கூடிய கணினி பழுதடைந்தால் ரிப்பேர் செய்ய, சம்பந்தப் பட்ட நிறுவனத்தினர் வரும் வரை காத் திருக்காமல் மாநகராட்சி ஊழியர்களே ரிப்பேர் செய்யும் வகையில் மாநகராட்சி மின்சாரத் துறையில் அலுவலர்கள் 60 பேருக்கு கணினி ரிப்பேர் செய்யும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு, 120 மணி நேரம் பயிற்சி கொடுக் கப் படும். இரண்டு மாதத்தில் பயிற்சி முடிக்கப் படும். இந்த பயிற்சிக்கு, மாநகராட்சி, மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவிடுகிறது. இவ்வாறு மேயர் சுப்ரமணியன் பேசினார்.

நிகழ்ச்சியில், துணை கமிஷனர் பாலாஜி, எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி, எச்.சி.எல்., நிறுவன தலைவர் ஸ்ரீனிவாஸ் சக்கரவர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Last Updated on Saturday, 06 March 2010 09:44