Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சியில் 'இ-ஆக்ஷன்' அறிமுகம் : முறைகேடுகளை ஒழிக்க புதிய முறை

Print PDF

தினமலர் 25.03.2010

கோவை மாநகராட்சியில் '-ஆக்ஷன்' அறிமுகம் : முறைகேடுகளை ஒழிக்க புதிய முறை

கோவை: வெளிப்படையான,நேர்மையான ஏலம் நடத்தவும், சிண்டிகேட் முறையை ஒழிக்கவும் கோவை மாநகராட்சியில் '-ஆக்ஷன்' முறை அமலுக்கு வந்தது.கோவை மாநகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்களில் சுங்கம் வசூலிக்கும் உரிமம், கட்டணகழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்கும் உரிமம், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலித்தல் போன்றவைக்கு, இதுவரை மூடிமுத்திரையிட்ட டெண்டர்கள் பெறப்பட்டன.

டெண்டரில், குறிப்பிட்டுள்ள அதிகபட்ச தொகை ஏலத்தொகையாக அறிவிக்கப்படும்.இதையடுத்து, நடைமுறை ஏலம் துவங்கும்; கூடுதலாக கேட்போருக்கு கான்ட்ராக்ட் கொடுக்கப்படும்.இதில் சிண்டிகேட் அமைத்தல், டெண்டர் பெட்டியை அலுவலகத்திற்குள் மறைத்து வைத்தல், ஏலத்தில் பங்கேற்க விடாமல் ஆட்களை தடை செய்தல், ஆட்களை கடத்துதல் என பல பிரச்னைகள் எழுந்தன.இப்பிரச்னைகளை சமாளிப்பது பெறும் சவாலாக இருந்தது. சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் தலைதூக்கியது.எனவே, மாநகாரட்சியின் அன்றாட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டதோடு, டெண்டர் பணியும் பாதிப்பிற்குள்ளானது. பல முறை மறு தேதி குறிப்பிட்டு ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில், மேற்குமண்டல அலுவலகத்தில் நடந்த ஏலத்தில் பிரச்னை ஏற்பட்டு ஏலம் நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டது.இப்பிரச்னைக்கு தீர்வு காண மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா இ-ஆக்ஷன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

'
- ஆக்ஷன்' முறையில் ஏலதாரர்கள் '-டெண்டர்' குறிப்பிடவேண்டும். அதிகபட்ச தொகை கோரியவர்களுக்கு உரிமம் கொடுக்கப்படும்.'-டெண்டர்' குறிப்பிடும் போது யாரும் எளிதில் பார்க்க முடியாதபடி மாநகராட்சி நிர்வாகம் புதிய சாப்ட்வேரை இணைத் துள்ளது. ஏலம் நடக்கும் நாளில்,'மல்டிமீடியா' உதவியோடு பெரிய ஸ்கிரீனில், ஏலதாரர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் டெண்டர் திறக்கப்படும். இத்திட்டத்திற்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இத்திட்டத்தை உடனடியாக கோவை மாநகராட்சி அமல் படுத்தியுள்ளது.'-ஆக்ஷன்' (மின்ஏலம்) திட்டத்தை, கோவை மேயர் வெங்கடாசலம் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:

கோவை மாநகராட்சியின் நான்கு மண்டலங்களில் உள்ள மார்க்கெட், கழிப்பிடம், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தம் ஆகிய 33 குத்தகை இனங்களுக்கான உரிமம் வழங்க இ-ஆக்ஷன் (மின் ஏலம்) அறிமுகம் செய்யப்பட்டு நடத்தப்பட்டது.காலை 11.30 மணி முதல் 1.30 மணி வரை ஆறு இனங்களுக்கான ஏலம் நடந்தது. மதியம் நான்கு இனங்களுக்கான ஏலம் நடந்தது. இன்று காலை 12 இனங்களுக்கும், மதியம் 11 இனங்களுக்கும் ஏலம் நடைபெறும். வெளிப்படையான நேர்மையான முறையில் ஏலம் நடத்தப்படுவது உறுதிப்படுத்தப்படும்.இவ்வாறு மேயர் வெங்கடாசலம் பேசினார்.துணை கமிஷனர் சாந்தா, துணை மேயர் கார்த்திக், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், ஏலதாரர்கள் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 25 March 2010 08:24