Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இயந்திரம் மூலம் வரிகள் செலுத்தும் வசதி

Print PDF

தினமணி 20.04.2010

இயந்திரம் மூலம் வரிகள் செலுத்தும் வசதி

திண்டுக்கல், ஏப். 19: சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி மற்றும் வரி இல்லாத பிற இனங்களுக்கான தொகையை இயந்திரங்கள் மூலம் செலுத்தும் வசதியை திண்டுக்கல் நகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை அலுவலக நாள்களில், அலுவலக நேரங்களில் கணினிமயமாக்கப்பட்ட மையத்தின் மூலம் செலுத்தி வந்தனர். தற்போது 24 மணி நேரமும் எப்போது வேண்டுமானாலும் இவ்வரிகளை நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தின் மூலம் செலுத்தி அதற்கான ரசீதினை இயந்திரத்தின் மூலமே பெற்றுக் கொள்ளும் வசதியை நகராட்சி ஏற்படுத்தி உள்ளது.

பணம், காசோலை மூலம் வரியை செலுத்தலாம். செலுத்த வேண்டிய பணத்தினை ஒவ்வொன்றாக இயந்திரத்தில் வைக்கும்போது அது குறித்த விவரம் திரையில் தெரியும். செலுத்த வேண்டிய முழு தொகையையும் இயந்திரம் பெற்றுக் கொண்ட பின்னர், வரிதாரருக்கு அதற்கான ரசீதினை வழங்கும். ரொக்கமாக மட்டுமின்றி காசோலையையும் இயந்திரம் பெற்றுக்கொண்டு வரிதாரருக்கான ரசீதினையும் இயந்திரம் உடனடியாக வழங்கிவிடும்.

இயந்திரத்தினை திங்கள்கிழமை இயக்கி வைத்த நகர்மன்றத் தலைவர் ஆர். நடராஜன் கூறிகையில், நகரின் பல்வேறு மக்களுக்கும் பலனளிக்கும் வகையில் இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது; வரிதாரர் தனக்கு சௌகரியப்பட்ட நேரத்திலும், நாள்களிலும் வரி செலுத்தும் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளோம் என்றார்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் அர.லட்சுமி, நகராட்சிப் பொறியாளர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 20 April 2010 10:02