Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

மாநகராட்சி வரிவசூல் வாகனம் நிற்குமிடங்கள்

Print PDF

தினமணி 11.10.2010

மாநகராட்சி வரிவசூல் வாகனம் நிற்குமிடங்கள்

திருச்சி, அக். 10: திருச்சி மாநகராட்சியின் நடமாடும் கணினிமயமாக்கப்பட்ட வரிவசூல் வாகனம், அக். 11 முதல் 15-ம் தேதி வரை நிற்குமிடங்களை மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

அக். 11 (திங்கள்கிழமை): காலை 10 முதல் பகல் 12 மணி வரை- (வார்டு 30) விவேகானந்தா நகர், பகல் 12- பிற்பகல் 2 மணி- (வார்டு 31) பொன்னேரிபுரம், பிற்பகல் 2- மாலை 5- (வார்டு 36) அடைக்கலமாதா கோயில் தெரு.

அக். 12 (செவ்வாய்க்கிழமை): காலை 10 முதல் பகல் 12 மணி வரை- (வார்டு 34) என்எம்கே காலனி (டோல்கேட்), பகல் 12- பிற்பகல் 2 மணி- (வார்டு 43) இலுப்பூர் ரோடு கல்லுக்குழி, பிற்பகல் 3- மாலை 4 மணி- (வார்டு 35) ஜேகே நகர், மாலை 4- 6 மணி- (வார்டு 37) வயர்லஸ் ரோடு (திலகவதி மளிகைக் கடை எதிரில்).

அக். 13 (புதன்கிழமை): காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை- (வார்டு 38) சாத்தனூர் பிரதான சாலை (தேவி திரையரங்கம் அருகில்), பிற்பகல் 1- மாலை 5 மணி- (வார்டு 42) சுந்தர்நகர்.

அக். 14 (வியாழக்கிழமை): காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை- (வார்டு 39) பட்டி மெயின்ரோடு (கேஆர்எஸ் நகர்), பிற்பகல் 1- மாலை 5 மணி- பஞ்சப்பூர் மாநகராட்சிப் பள்ளி அருகில்.

அக். 15 (வெள்ளிக்கிழமை): காலை 10 முதல் பகல் 12 மணி வரை- (வார்டு 44) கீழப் பள்ளத்தெரு, காலை 11.30- பிற்பகல் 1 மணி- (வார்டு 46) செடல் மாரியம்மன் கோயில் எதிரில், பிற்பகல் 1- 2.30 மணி- (வார்டு 47) ராஜா காலனி, பிற்பகல் 2.30- மாலை 5 மணி- (வார்டு 48) கான்வென்ட் ரோடு. இந்த வாகனங்களில் அந்தந்த வார்டு மக்களைத் தவிர மற்றவர்களும் வரியினங்களைச் செலுத்தலாம்.

 

ஒப்பந்தப்புள்ளிகளை அளிக்க நேரில் வரத் தேவையில்லை: மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

Print PDF

தினமணி 27.09.2010

ஒப்பந்தப்புள்ளிகளை அளிக்க நேரில் வரத் தேவையில்லை: மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

திருச்சி, செப். 26: திருச்சி மாநகராட்சியில் ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை அளிக்க மாநகராட்சி அலுவலகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை என மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநகராட்சியில் மதிப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகளில் கலந்துகொள்ள முன்வரும் ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்தப்புள்ளி படிவங்களை இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள

ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் மின்னணு முறையில் மட்டுமே அளிக்க வேண்டும்.

அதன்படி, திருச்சி மாநகராட்சியில் கடந்த 2009 ஆக. 26-ம் தேதி முதல் இணையதளத்தில் மின்னணு முறையில் ஒப்பந்தப்புள்ளிகளை ஏற்றம் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது மேலரண் சாலை மேம்படுத்துதல், அண்ணா நகர் இணைப்புச் சாலை அமைத்தல் மற்றும் இணைப்புச் சாலைக்கான பாலம் கட்டுதல் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. மேலும், சிறப்புச் சாலைகள் திட்டம் 2010-11-ன் கீழ் மொத்தம் ரூ.25 கோடியில் மேற்கொள்ளவிருக்கும் சாலை மேம்படுத்தும் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படவுள்ளன.

இந்தப் பணிகளுக்கான மதிப்பீடுகள் அனைத்தும் ரூ.10 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ளதால், ஒப்பந்தப்புள்ளிகளில் கலந்து கொள்ள விரும்பும் ஒப்பந்தக்காரர்கள் இணையதளத்தில் மின்னணு முறையில் ஏற்றம் செய்த பிறகு தொழில்நுட்பத் தகுதிக்காக ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையதளத்திலேயே ஏற்றம் செய்யலாம். அசல் ஆவணங்களை அஞ்சல் மூலம் உரிய காலக்கெடுவுக்குள் மாநகராட்சி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்காக நேரில் வர வேண்டிய அவசியமில்லை.

மேலும், மாநகராட்சி வளாகத்தில் ஒப்பந்தக்காரர்கள் நேரில் வந்து சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொண்டு மாநகராட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

 

செங்கோட்டையில் தொடுதிரை தகவல் மையம் மேயர் திறந்து வைத்தார்

Print PDF

தினகரன் 21.09.2010

செங்கோட்டையில் தொடுதிரை தகவல் மையம் மேயர் திறந்து வைத்தார்

புதுடெல்லி, செப். 21: காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக செங்கோட்டையில் தொடு திரை தகவல் மையம்அமைக்கப்பட்டுள்ளது. அதை மேயர் பிருத்விராஜ் சகானி நேற்று திறந்து வைத்தார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியை காண வெளிநாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டெல்லியில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் எளிதில் கிடைக்க மாநகராட்சி தீர்மானித்தது. அதற்காக செங்கோட்டையில் சிறப்பு தொடு திரை தகவல் மையம்அமைக்கப்பட்டுள்ளது. இதை மேயர் பிருத்விராஜ் சகானி நேற்று திறந்து வைத்தார்.

தொடு திரையில், டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடக்கும் மைதானங்கள், அவை இருக்கும் இடம், அவற்றுக்கு செல்லும் வழிகள், போக்குவரத்து விவரம், இதற்கான கட்டண விவரம், ஓட்டல்கள் & கட்டண விவரங்கள், உணவு வகைகள், இரவு விடுதிகள், அங்கு இருக்கும் வசதிகள், காவல் நிலையங்கள், காப்பகங்கள், டெல்லியில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள், சுற்றுலா மையங்கள், நகரைச் சுற்றியுள்ள ஆக்ரா, ஜெய்ப்பூர் போன்ற முக்கிய நகரங்களின் வரலாறுகள், நகரில் இருக்கும் உடனடி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்) இருக்கும் இடம் போன்ற பல்வேறு தகவல்கள் இருக்கும்.

கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள இதில் எந்த தகவலை தெரிந்து கொள்ள விரும்பினாலும், கம்ப்யூட்டரின் திரையை தொட்டால் போதும்; அனைத்து தகவல்களும் வரிசையில் வந்து நிற்கும்.

அதுமட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான மொழியில் இந்த தகவல்களை தெரிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 8 மொழிகளில் இந்த தகவல்களை பெறலாம். இதுபோன்று மொத்தம் 40 தகவல் மையங்கள் முக்கிய இடங்களில் அமைக்கப்படுகின்றன.

 


Page 22 of 41