Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

ஆன்லைன் வரி வசூல் துவக்கம்

Print PDF

தினகரன் 30.07.2010

ஆன்லைன் வரி வசூல் துவக்கம்

பெ.நா.பாளையம், ஜூலை 30: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் பொது மக்களி டம் இருந்து வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உள் ளிட்ட இதர இனங்களை உடனுக்குடன் பெற்று கொள்ள ஏதுவாக ஆன் லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வரி வசூல் மையத் தை நரசிம்மநாயக்கன் பா ளையம் பேரூராட்சி தலைவர் பத்மாலயா சீனி வாசன் துவக்கி வைத்து ஒரு பெண்ணுக்கு முதல் ரசீதை வழங்கினார்.

இதில் செயல் அலுவலர் பால சுப்பிரமணியம், துணை தலைவர் வீரபத் ரன், இளநிலை உதவியா ளர் நடராஜன், ஆல்பர்ட், தியாகராஜன், விக்டோரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

நெல்லை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் இலவசமாகப் பெறும் முறை அறிமுகம்

Print PDF

தினமணி 21.07.2010

நெல்லை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் இலவசமாகப் பெறும் முறை அறிமுகம்

திருநெல்வேலி, ஜூலை 20: திருநெல்வேலி மாநகராட்சியில் கணினி மூலம் (ஆன்லைன்) இலவசமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறும் முறையை மேயர் அ.லெ. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தார்.

இதுகுறித்து மேயர் அ.லெ.சுப்பிரமணியன், ஆணையர் டாக்டர் சுப்பையன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

இம் மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் நான்கு வார்டு அலுலகங்கள் மற்றும் 17 அலகு அலுவலகங்கள் மூலம் உதவி நகர்நல அலுவலர், உதவி ஆணையர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் மூலம் பொதுமக்கள் மனு செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளும் நடைமுறை அமலில் உள்ளது. இதற்காக பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு வரவேண்டிய அவசியம் உள்ளது.

பொதுமக்களின் இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், முதல் கட்டமாக 2000ஆம் ஆண்டுமுதலான பிறப்பு, இறப்பு விவரங்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் அவற்றின் நகலை கணினி மூலம் (ஆன்லைன்) பெற்றுக் கொள்ளலாம். இதற்காக எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

இம் மாநகராட்சியின் இணையதளம் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்மூலம் பொதுமக்கள் பல்வேறு சேவைகளைப் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இப்போது பிறப்பு, இறப்பு சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரி இனங்களை கணினி மூலம் செலுத்தும் நடைமுறையையும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ. 25 கோடி வரி பாக்கி: இம் மாநகராட்சியில் நீண்டகால வரிபாக்கியாக ரூ.25 கோடி வரை உள்ளது. இவற்றை வசூல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது நடமாடும் வரிவசூல் வாகனம் மூலம் நடைபெற்று வரும் தீவிர வரிவசூல் முகாமிற்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்டநாள்களாக வரி செலுத்தாதவர்களை அடையாளம் கண்டு, வரியை வசூலிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.

மாநகராட்சிப் பகுதியில் கட்டப்பட்டு நீண்ட நாள்களாக வாடகைக்கு விடப்படாத கடைகளை வாடகைக்கு விடுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்பயனாக தற்போது ஐந்தாறு கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. எஞ்சி இருக்கும் சுமார் 15 கடைகளையும் வாடகைக்குவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

பேட்டியின்போது, மண்டலத் தலைவர்கள் விஸ்வநாதன் (திருநெல்வேலி), எஸ்.எஸ். மைதீன் (மேலப்பாளையம்), மாநகர பொறியாளர் ஜெயசேவியர், செயற்பொறியாளர் நாராயணநாயர் ஆகியோர் உடனிருந்தனர்.

 

நெல்லை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு:சான்றிதழ்களை ஆன்லைனில் பெற புதிய வசதி

Print PDF

தினமலர்    21.07.2010

நெல்லை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு:சான்றிதழ்களை ஆன்லைனில் பெற புதிய வசதி

திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன் லைனில் பெறும் புதிய வசதியை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் நேற்று துவக்கிவைத்தார்.நெல்லை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் 4 வார்டு அலுவலகங்கள் மற்றும் 17 யூனிட் அலுவலகங்கள் மற்றும் உதவி நகர் நல அலுவலகர், சுகாதார ஆய்வாளர்கள் மூலம் உரிய மனுச் செய்து சான்றுகள் பெறும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு ஒரு முறையும், அதற்கான சான்றிதழ் பெற ஒரு முறையும் அலையவேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை பிறப்பு, இறப்பு பதிவுகளுக்கு முதற்கட்டமாக 2000ம் ஆண்டு முதல் 2010 ஜூலை 20ம் தேதி வரை பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி குறித்த இணையதளம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் கம்ப்யூட்டர் மூலம் பல சேவைகளைப் பெற வசதி செய்யப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆன் லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறும் வசதியை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் நேற்று துவக்கிவைத்தார்.

இதில் கமிஷனர் டாக்டர் சுப்பையன், மண்டல தலைவர்கள் விஸ்வநாதன், முகம்மதுமைதீன், நகரப் பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர், உதவிக்கமிஷனர் சுல்தானா, பாஸ்கரன், கருப்பசாமி, சாந்தி, உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சங்கரலிங்கம், அரசகுமார், சாகுல்ஹமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.பொதுமக்கள் இந்த சேவையை டாõ://õடசஙைமநமெநடயவசன.கவö.டங என்ற இணைய தள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 21 July 2010 06:12
 


Page 27 of 41