Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

பொதுமக்கள் சேவைக்காக நெல்லை மாநகராட்சியில் இணையதள வசதி அறிமுகம்

Print PDF

தினகரன் 30.06.2010

பொதுமக்கள் சேவைக்காக நெல்லை மாநகராட்சியில் இணையதள வசதி அறிமுகம்

நெல்லை, ஜூன் 30: நெல்லை மாநகராட்சியில் பொதுமக்கள் சேவைகளைப் பெறும் வகையில் இணையதளம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

மாநகராட்சியின் இணையதள முகவரி லீttஜீ://tவீக்ஷீuஸீமீறீஸ்மீறீவீநீஷீக்ஷீஜீ.tஸீ.ரீஷீஸ்.வீஸீ

என்பதாகும். இதில் மாநகராட்சி பற்றிய விவரங்களும், அதன் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. பொதுமக்கள் இந்த இணையதளம் மூலம் மாநகராட்சியின் சேவைகள் மற்றும் விண்ணப்பங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாநகராட்சியால் செயல்படுத்தப்படும் பல்வேறு பணிகள், திட்டங்கள் குறித்த விவரங்களையும் உடனுக்குடன் இந்த இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகள் மற்றும் புகார்களையும் தெரிவிக்கலாம். இணையதளத்தில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் முகவரி மற்றும் தொடர்பு எண்கள், தெருவிளக்கு புகார் எண்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற யாரை தொடர்பு கொள்வது உள்ளிட்ட விபரங்களும் இடம் பெற்றுள்ளன.

மாநகராட்சி இணையதளத்தை மேயர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். கமிஷனர் சுப்பையன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் அப்துல்வகாப், கோபி, பேபிகோபால், துரை, உதவி ஆணையர்கள் சுல்தானா, சாந்தி, சாமுவேல் செல்வராஜ், செயற்பொறியாளர் நாராயணன் நாயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

நெல்லை மாநகராட்சி இணையதளம் தொடக்கம்

Print PDF

தினமணி 30.06.2010

நெல்லை மாநகராட்சி இணையதளம் தொடக்கம்

திருநெல்வேலி, ஜூன் 29: திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய இணையதளத்தை மேயர் அ.லெ. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தார். இந்த இணையதளத்தில் மாநகராட்சி பற்றிய விவரங்களும், அதன் செயல்பாடுகள் குறித்த பல்வேறு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், பொதுமக்கள் இந்த இணையதளத்தின் மூலம் மாநகராட்சியின் சேவைகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் அதற்குரிய விண்ணப்பங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் விண்ணப்பங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவை தவிர, மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்த விவரங்களையும் இந்த இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளையும், புகார்களையும் இதில் தெரிவிக்கலாம்.

இணையதள தொடக்க விழாவில், ஆணையர் டாக்டர் சுப்பையன், மாமன்ற உறுப்பினர்கள் ஆ.துரை, பேபி கோபால், அப்துல் வகாப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, இம் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 179 பேருக்கு மானியத் தொகையாக ரூ.33.81 லட்சத்திற்கான காசோலைகளை மேயர் வழங்கினார்.

 

பிறப்பு சான்றிதழ் உட்பட அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் வழங்க அரசு திட்டம்

Print PDF

தினகரன் 28.06.2010

பிறப்பு சான்றிதழ் உட்பட அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் வழங்க அரசு திட்டம்

மும்பை, ஜூன் 28: பிறப்பு சான்றிதழ், நில ஆவணங் கள் மற்றும் பிற முக்கிய சான்றிதழ்களைப் பெற இனி மகாராஷ்டிரா மாநில மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்க வேண்டிய தில்லை. இந்த ஆவணங் களை இனி இன்டர்நெட் வழியாக ஆன்லைனிலேயே வழங்க மாநில அரசு திட்ட மிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி யடைந்து வரும் நிலையில் அனைத்து சேவை களையும் ஆன்லைனில் வழங்குவதற் காக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர மாநில தகவல் தொழில்நுட்ப இலாகா முடிவு செய்துள் ளது. இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறையாகும். இது குறித்து மாநில தகவல் தொழில் நுட்பத்துறை முதன்மை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே கூறிய தாவது:

பொது சேவைகளை மின்னணு பட்டுவாடா மூலம் வழங்குவதற்கான புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவிருக்கிறோம். இந்த சட்டம் இயற்றப்பட்ட தும் பிறப்பு சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஆன்லைனி¢ல் வழங்கப் படும்.

ஆன்லைன் சேவையு டன், கையினால் எழுதிக் கொடுக்கும் பழைய முறையும் தொடர்ந்து நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 28 of 41