Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

இ.டோக்கன் பயிற்சி முகாம்:கான்ட்ராக்டர்கள் புறக்கணிப்பு

Print PDF

தினமலர் 28.04.2010

.டோக்கன் பயிற்சி முகாம்:கான்ட்ராக்டர்கள் புறக்கணிப்பு

புதுக்கோட்டை;புதுக்கோட்டை யில் கான்ட்ராக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி சார்பில் நடை பெற விருந்த இ டோக்கன் பயிற்சி முகாமை புறக்கணித்தனர்.புதுக்கோட்டை நகராட்சியில் கான்ட்ராக்டர்களுக்கும் நகராட்சி நிர்வாகம் உட்பட பலருக்கும் பல்வேறு பிரச்னைகள் நீர் பூத்த நெருப்பாக இருந்து வருகிறது. பல மாதங்களாக பணிகள் முடிவடைந்த பின்னரும் பில்கள் எழுதுவதில் பல்வேறு காரணங்களால் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் கான்ட்ராக்டர்களுக்கு டெண்டர் உட்பட அதன் தொடர்பான பணிகளை கம்ப்யூட்டர் மூலம் பெறுவதற்காக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நேற்று பயிற்சி அளிக்கப்பட இருந்தது. கான்ட்ராக்டர்களோ த ங்களுக்கு வர வேண்டிய தொகையினை தங்களுக்கு வழங்கிய பின்னர் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான கோரிக்கை விபரங்களை நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணணிடம் கான்ட்ராக்டர்கள் நேரில் வழங்கினர்.

Last Updated on Wednesday, 28 April 2010 06:26
 

வரி வசூல் மையம் துவக்கம்

Print PDF

தினமலர் 26.04.2010

வரி வசூல் மையம் துவக்கம்

திருப்போரூர் : திருப்போரூர் பேரூராட்சியில் வரி வசூல் கணினி மையம் துவக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் பேரூராட்சியில் குடிநீர் வரி, சொத்துவரி, தொழில்வரி ஆகியவற்றை பேரூராட்சி ஊழியர்கள் நேரில் சென்று வசூலித்து ரசீது கொடுத்து வந்தனர். பொதுமக்கள் சிலர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து வரி செலுத்தி, ரசீது பெற்று சென்றனர். இந்நிலையில், தற்போது பேரூராட்சி அலுவலகத்தில் வரி வசூலிப்பிற்கான கணினி மையம் ஏற்படுத்தப்பட்டு திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் செல்வி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் முன் னிலை வகித்தார். காஞ்சிபுரம் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சுந்தரம் மையத்தை துவக்கி வைத் தார். செயல் அலுவலர் கேசவன் நன்றி கூறினார்.

Last Updated on Tuesday, 27 April 2010 07:32
 

ஆன்-லைனில் வரி செலுத்தும் வசதி துவக்கம்

Print PDF

தினமலர் 26.04.2010

ஆன்-லைனில் வரி செலுத்தும் வசதி துவக்கம்

.வேலூர்: .வேலூர் டவுன் பஞ்சாயத்தில், ஆன்-லைன் மூலம் சொத்து வரி செலுத்தும் வசதி துவக்க விழா நடந்தது.டவுன் பஞ்சாயத்து சேர்மன் மணிமாரப்பன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் குருராஜன், கவுன்சிலர் ராமகிருஷ்ணன், துணை சேர்மன் சிவக்குமார், துப்புரவு ஆய்வாளர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆன்லைன் வசதியை பயன்படுத்தி, டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மக்கள் நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டிய வரியை எங்கிருந்து வேண்டுமானாலும் செலுத்தலாம்.

Last Updated on Tuesday, 27 April 2010 07:24
 


Page 30 of 41