Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பூர், எழும்பூர் வழியாக கொடுங்கையூர்- திருவான்மியூருக்கு புதிய பஸ் இயக்கம் ; பாடியநல்லூருக்கு 10 பஸ்கள்

Print PDF

மாலை மலர் 05.05.2010

பெரம்பூர், எழும்பூர் வழியாக கொடுங்கையூர்- திருவான்மியூருக்கு புதிய பஸ் இயக்கம் ; பாடியநல்லூருக்கு 10 பஸ்கள்

கொடுங்கையூரில் இருந்து திருவான்மியூருக்கு புதியவழித்தடத்தில் பஸ் விடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 155 வார்டுகள் உள்ளன. இவற்றில் 1-வது வார்டு கொடுங்கையூர், பார்வதிநகர் பகுதியை உள்ளடக்கியதாகும்.

பார்வதி நகரில் பஸ் டெர்மினல் உள்ளது. இந்த பகுதியில் இருந்து மிக குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கோயம்பேடு, பிராட்வே, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் இப்பகுதிமக்கள் ஷேர் ஆட்டோ என்று சொல்லக்கூடிய "அபே" ஆட்டோக்களையே நம்பி உள்ளனர்.

கொடுங்கையூரில் இருந்து மூலக்கடை வரை இத்தகைய ஆட்டோக்கள் அதிகமாக ஓடுகின்றன. பெர்மிட் இல்லாத ஆட்டோக்களும், வாடகைக்கு இயக்க தகுதியற்ற தனியார் ஆட்டோக்களும் ஏராளம் ஓடுகின்றன.

மூலக்கடையில் இருந்து கொடுங்கையூர், பார்வதி நகருக்கு செல்ல அடிக்கடி பஸ் வசதி இல்லாததால் ஆட்டோ டிரைவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு நபருக்கு ரூ.7 வீதம் 5 அல்லது 6 பேர் வரை ஏற்றிச் செல்கிறார்கள்.

பஸ் வசதி இல்லாததால் ஆட்டோக்களின் ஓட்டம் காலை முதல் இரவு வரை அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் புரசைவாக்கம் தொகுதி எம்.எல்.., வி.எஸ்.பாபு விடம் அப்பகுதி மக்கள் பஸ் வசதியை அதிகரித்து தரும்படி கோரிக்கை வைத்தனர். சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையம், வண்டலூர், திருவான்மியூர், தியாகராய நகர் பகுதிகளுக்கு கூடுதல் பஸ் வசதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

அவரது முயற்சியால் கொடுங்கையூரில் இருந்து திருவான்மியூருக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் மூலக்கடை, பெரம்பூர், ஓட்டேரி, டவுட்டன், எழும்பூர் வழியாக திருவான்மியூர் சென்று வருகிறது. இந்த பஸ்களுக்கு அப்பகுதி மக்கள் இடையே அதிக வரவேற்புள்ளது. மேலும் சில வழித்தடங்களில் புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று எதிர்பார்க் கிறார்கள்.

இதே போல பாடிய நல்லூரில் இருந்து புதிய 5 வழித்தடங்களில் 10 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா நேற்று முன் தினம் பாடிய நல்லூரில் நடந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்கள்.

பாடியநல்லூர்- பூந்த மல்லி (2 பஸ்கள்) பாடியநல்லூர்- தியாகராயநகர் (2), பாடியநல்லூர்- தாம்பரம் (2), பாடியநல்லூர்- கோயம் பேடு (2), கிண்டிக்கு (2) என 10 புதிய பஸ்கள் விடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் சிவாஜி எம்.எல்.., முன்னாள் எம்.எல்.. கிருஷ்ணசாமி, திருவான்மியூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர