Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் 'பஸ் ஸ்டாப்' ஆனது : சுற்றுலா வாகனம், ஆம்னி பஸ்களுக்கு தனித்தனி 'பார்க்கிங்'

Print PDF

தினமலர்       17.05.2010

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் 'பஸ் ஸ்டாப்' ஆனது : சுற்றுலா வாகனம், ஆம்னி பஸ்களுக்கு தனித்தனி 'பார்க்கிங்'

மதுரை : மதுரை ஷாப்பிங் காம்ப் ளக்ஸ் பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பஸ்கள் தனித்தனியாக 'பார்க்கிங்' செய்ய இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இனி, பஸ் ஸ்டாண்டில் சிட்டி பஸ்கள் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு உடனே கிளம்பி விடும்.

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட், திண்டுக்கல் ரோடு ரவுண்டானா, ஷாப்பிங் காம்ப் ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட், டி.பி.கே., ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கூட்டம் நடந்தது.

துணை கமிஷனர் ராஜேந்திரன் , மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் தேவதாஸ், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தனித்தனி பார்க்கிங் வசதி: இதன்படி, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா வேன்கள் மட்டும் நுழைவு வாயிலின் வலதுபுறம் பார்க்கிங் செய்ய தனியாக இடம் ஒதுக்கப் பட்டு உள்ளது. சுற்றுலா பஸ்கள் கென்னட் ரோடு பகுதியில் பார்க்கிங் செய்ய வேண்டும். அங்கு இடம் இல்லாதபோது தெற்குவெளி வீதியில் பார்க்கிங் செய்யலாம். பஸ்கள் வெளியேறும் பகுதியின் வலது புறம் டிராவல்ஸ் அலுவலகங்கள் உள்ளன.

இப்பகுதி நெடுகிலும் ஆம்னி பஸ்களை மாலை 5 முதல் இரவு 10 மணி வரை நிறுத்தலாம். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டில் இருந்து 40 ஆம்னி பஸ்கள் வெளியூர்களுக்கு புறப்படுகிறது. 40 பஸ்களையும் பார்க்கிங் செய்ய இடவசதி இல்லை. எனவே, அடுத்தடுத்து வரும் பஸ்களை பார்க்கிங் செய்ய உதவிடும் பொருட்டு, உடனே புறப்படுவதற்கு ஏற்ப தயார் நிலையில் பஸ்களை நிறுத்தி வைக்கும்படி போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

உடனே கிளம்பும் டவுன் பஸ்:திருமங்கலம், மடப்புரம், திருப்புவனம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டில் பஸ்களை நிறுத்தி விட்டு 15 நிமிட ஓய்வுக்கு பின் மீண்டும் புறப்படுவது வழக்கம். இனி, பெரியார் பஸ் ஸ்டாண்டில் பஸ்களை நிறுத்தி, அங்கேயே ஓய்வெடுக்க வேண்டும். பின், அங்கிருந்து புறப் பட்டு திண்டுக்கல் ரோடு ரவுண்டானா வழியாக ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் வந்து, நுழைவு வாயிலின் இடது புறம் பஸ்களைஓரிரு நிமிடங்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி கொண்டு உடனே புறப்பட வேண்டும். இதன்படி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பஸ் ஸ்டாண்டிற்கு பதிலாக 'பஸ் ஸ்டாப்' போல் செயல்படும். பழைய திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ஹயத்கான் சாகிப் தெருவில் இருபுறமும் இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப் பட்டுள்ளது.