Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.ஒரு கோடியில் பஸ் ஸ்டாண்ட், நகராட்சி அலுவலகம்: அனகாபுத்தூரில் நாளை திறப்பு விழா

Print PDF

தினமலர்        15.05.2010

ரூ.ஒரு கோடியில் பஸ் ஸ்டாண்ட், நகராட்சி அலுவலகம்: அனகாபுத்தூரில் நாளை திறப்பு விழா

பல்லாவரம்: அனகாபுத்தூர் நகராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்டமான நகராட்சி அலுவலக கட்டடமும், நவீன வசதிகளுடன் பஸ் ஸ்டாண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதை, நாளை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி., டி.ஆர்.பாலு திறந்து வைக்கிறார்.

அனகாபுத்தூர் நகராட்சி அலுவலகம் தற்போது வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பகுதி-2 திட்டம் மற்றும் நகராட்சி பொது நிதி உட்பட 50 லட்சம் ரூபாய் மதிப்பில், 2,453 சதுர அடியில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் பல்வேறு அறை கள், பொதுமக்கள் அமரும் வசதி உட்பட நவீன வசதிகளுடன் 2009ம் ஆண்டு, புதிய நகராட்சி அலுவலக கட்டடம் கட்டும் பணி துவங்கியது. மார்பிள் கற்கள் பதிப்பது, சுற்றுச் சுவர் அமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. அதேபோல, அனகாபுத் தூரில் 18 ஆயிரத்து 753 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா பஸ் ஸ்டாண்ட், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி., டி.ஆர்.பாலு தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 58 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது.

பஸ் ஸ்டாண்ட் முழுவதும் சிமென்ட் சாலை, பயணிகள் அமரும் இருக்கை, மேற்கூரை, நுழைவாயில், கிரில் கேட் என பல்வேறு வசதிகள் செய்யப்பட் டுள்ளன. இதற்கான பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி., டி.ஆர்.பாலு நாளை, இந்த புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் நகராட்சி அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறார். விழாவில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன், நகராட்சித் தலைவர் பாரதிகுமார், செயல் அலுவலர் முனியாண்டி, பொறியாளர் சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.