Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.17 லட்சத்தில் நிழற்குடை கோத்தகிரி பேரூராட்சி ஏற்பாடு

Print PDF

தினமலர் 23.07.2010

ரூ.17 லட்சத்தில் நிழற்குடை கோத்தகிரி பேரூராட்சி ஏற்பாடு

கோத்தகிரி : கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட் வெளிப்பகுதியில், ரூ.17 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு நிலை அந்தஸ்து பெற்றது கோத்தகிரி பேரூராட்சி. தற்போது, மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நகரை மேம்படுத்த, பேரூராட்சி சார்பில் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நெடுஞ்சாலைத் துறை மூலம், கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட் - டானிங்டன் இடையே சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. சாலையின் அகலம் அதிகரித்து, வாகனங்களின் பயணத்துக்கு ஏதுவாக உள்ளது.பேரூராட்சி சார்பில், மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றி, சாலையோர நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் பெய்த மழையில், மண் சரிவு ஏற்பட்ட பஸ் ஸ்டாண்ட் வெளிப்பகுதியில், 20 லட்சத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இதே பகுதியில் 17 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படுகிறது; விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு வந்தால், போக்குவரத்துக்கு இடையூறு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

கோத்தகிரி பேரூராட்சி தலைவர் போஜன் கூறுகையில், ""கோத்தகிரி நகரை மேம்படுத்த, மன்ற ஒப்புதலுடன் படிப்படியாக பணிகள் நடத்தப்படுகின்றன. பஸ் ஸ்டாண்ட் பகுதியில், 17 லட்சத்தில் நிழற்குடை அமைக்கப்படுகிறது; 40 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு திறந்து விடப்படும்.பஸ் நிலைய உட்புறத்தில், 25 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைத்து சீரமைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் ஷீட்கள் மூலம், பஸ் ஸ்டாண்டில் கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.