Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரையில் 30 இடங்களில் நவீன பயணிகள் நிழற்குடை

Print PDF

தினமணி 19.08.2010

மதுரையில் 30 இடங்களில் நவீன பயணிகள் நிழற்குடை

மதுரை, ஆக. 18: மதுரை மாவட்ட மாநகர், புறநகர் பகுதிகளில் மொத்தம் 30 இடங்களில் நவீன பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு..அழகிரி தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் மாநகர் பகுதியில் 15 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 15 இடங்களிலும் நவீன பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும். சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் மும்பையிலுள்ள ராஷ்ட்ரீய கெமிக்கல்ஸ் நிறுவனம் இவற்றை அமைக்க உள்ளது. பதுதில்லியில் உள்ளது போல் முற்றிலும் தரமான முறையில் இந்த நவீன நிழற்குடைகள் அமைக்கப்படும்.

மதுரை மாநகர் பகுதியில் 1.அரசு ராஜாஜி மருத்துவமனை, 2. அழகர்கோவில் சாலை (தேவர் சிலை எதிரில்), 3. சிம்மக்கல், 4 & 5 பழங்காநத்தம் பேருந்து நிலையம் (இரண்டு இடங்களில்), 6. தேனி மெயின் ரோடு (ஜெயராம் பேக்கரி அருகில்), 7. பைபாஸ் ரோடு (குகு தியேட்டர் அருகில்), 8. விளாங்குடி (பாத்திமா கல்லூரி அருகில்), 9.மிஷன் ஆஸ்பத்திரி, 10. நெல்பேட்டை, 11. தினமணி தியேட்டர் சந்திப்பு, 12. தெப்பக்குளம் (மாரியம்மன் கோயில் அருகில்), 13. அண்ணா நகர் (சுகுணா ஸ்டோர் நிறுத்தம்), 14. ஆரப்பாளையும், 15. நரிமேடு ஆகிய இடங்களில் நவீன நிழற்குடை அமைய உள்ளது.

இதேபோல புறநகர் பகுதியில் 1. அய்யர்பங்களா (நத்தம் ரோடு), 2. ஊமச்சிகுளம், 3. சர்வேயர் காலனி (அழகர்கோவில் ரோடு), 4. கடச்சனேந்தல், 5. அழகர்கோவில், 6. கூடல் நகர், 7. விளாங்குடி, 8. பரவை, 9. ஆலமரம் (சமயநல்லூர் திண்டுக்கல் சாலை), 10. ஒத்தக்கடை, 11. பாண்டி கோயில், 12. கருப்பாயூரணி, 13. கருங்காலக்குடி, 14. கொட்டாம்பட்டி, 15. மேலூர் - சிவகங்கை ரோடு (கக்கன் சிலை அருகில்) ஆகிய இடங்களில் நவீன நிழற்குடை அமைய உள்ளது என்றார் மு..அழகிரி.