Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவொற்றியூர் வரை நீடிப்பதால் மெட்ரோ ரெயிலுக்கு, மேலும் 7 ரெயில் நிலையங்கள்

Print PDF

மாலை மலர் 19.08.2010

திருவொற்றியூர் வரை நீடிப்பதால் மெட்ரோ ரெயிலுக்கு, மேலும் 7 ரெயில் நிலையங்கள்

திருவொற்றியூர் வரை நீடிப்பதால் மெட்ரோ ரெயிலுக்கு, மேலும்
 
 7 ரெயில் நிலையங்கள்

சென்னை, ஆக. 19- சென்னை நகரின் போக்கு வரத்து நெரிசலை சமாளிப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மொத்த செலவு ரூ.14,600 கோடி என்று திட்டமிட்டப்பட்டது.முதலில் தொடங்கப்பட்ட திட்டத்தின்படி வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை, கிண்டி, தாமஸ் மவுண்ட் வழியாக விமான நிலையம் வரை 23.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. மற்றொரு பாதை 22 கி.மீ. தூரம் கொண்டது. இது சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து எழும்பூர், அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, அசோக்நகர் வழியாக தாமஸ் மவுண்ட் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

2 பாதைகளின் மொத்த தூரம் 45 கி.மீ., இதில் 24 கி.மீ. சுரங்கப்பாதையாகவும், மீதம் உள்ள தூரம் உயர்த்தப்பட்ட பாதையாகவும் இருக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த திட்டம் மேலும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை அமைக்கப்பட இருந்த மெட்ரோ ரெயில் பாதை தற்போது, திருவொற்றியூர் விம்கோ நகர் வரை நீடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மூலம் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக இந்த பாதை 9 கிலோ மீட்டர் தூரம் அதிகரிக்கிறது. வண்ணாரப் பேட்டை ரெயில் நிலையத்துக்குப் பிறகு கொருக்குப் பேட்டை, தண்டையார் பேட்டை, டோல்கேட், தாங்கல், கவுரி ஆஸ்ரம், திருவொற்றியூர், விம்கோ நகர் ஆகிய 7 ரெயில் நிலை யங்கள் புதிதாக அமைக்கப்படுகின்றன.

வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 7 ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் பாதை அமைப்பதால் ரூ.2,200 கோடி கூடுதல் செலவு ஆகும். இதற்கான தொழில் நுட்ப அறிக்கையை டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கு தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தமிழக அமைச்சரவை இது குறித்து இறுதி முடிவை எடுக்கும் அதன் பிறகு மத்திய நகர்ப்புற அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு திருவொற்றியூர் வரை மெட்ரோ ரெயிலை நீடிக்கும் புதிய திட்டம் நிறைவேற்றப்படும். புதிய ரெயில் நிலையங்களை எவ்வாறு அமைப்பது என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. விரைவில் அறிக்கை தயார் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.