Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியின் பெஸ்ட் கமிட்டி கூட்டத்தில் முடிவு மும்பையில் பஸ் கட்டணம் உயர்வு

Print PDF

தினகரன் 31.08.2010

மாநகராட்சியின் பெஸ்ட் கமிட்டி கூட்டத்தில் முடிவு மும்பையில் பஸ் கட்டணம் உயர்வு

மும்பை, ஆக. 31: மும்பையில் பெஸ்ட் பஸ் கட்டணம் ரூ2அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற மும்பை மாநகராட்சியின் பெஸ்ட் கமிட்டி கூட்டத்தில் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டது. கட்டண உயர்வு செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மும்பை பெஸ்ட் பஸ் களில் தினசரி 50 லட்சம் மக்கள் பயணம் செய்கின் றனர். சி.என்.ஜி. காஸ் விலை உயர்ந்ததை அடுத்து சமீபத்தில் ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணம் அதிகரிக்கப் பட்டது. குறைந்த பட்ச ஆட் டோ கட்டணம் ரூ11 ஆகவும். டாக்சி கட்டணம் ரூ14 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

இதைப் போல பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பெஸ்ட் நிர்வாகம் மாநகராட்சியிடம் வலியுறுத் தியது. "நகரில் ஓடும் பெரும் பாலான பஸ்கள் சி.என்.ஜி. காஸில் இயக்கப்படுகிறது. சி.என்.ஜி விலை உயர்வால் மாதந்தோறும் ரூ7 கோடி வரை இழப்பு ஏற்படுவதால், இழப்பை ஈடுகட்ட பஸ் கட் டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை" என்று தெரிவித்த பெஸ்ட் நிர்வாகம், "தற்போது

ரூ3 ஆக இருக்கும் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ5 ஆக அதிகரிக்க வேண்டும்" என்று கோரியது. கட்டண உயர்வு குறித்து முடிவு செய்வதற்காக மும்பை மாநகராட்சியின் பெஸ்ட் கமிட்டி கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை கூடி ஆலோசித்தது. கட்டண உயர்வுக்கு மாநகராட்சியில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங் கிரஸ் கடும் எதிர்ப்பு தெரி வித்து, இரண்டு முறையும் கூட்டத்தில் இருந்து அக்கட்சி வெளிநடப்பு செய்தது.

இதனால், பெஸ்ட் நிறுவனத்துக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மாநில அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று மாநக ராட்சியை ஆளும் சிவ சேனா, பாரதிய ஜனதா கூட்டணி கோரிக்கை விடுத்தது. ஆனால், "பெஸ்ட் நிறுவனம் தனக்கான நிதி ஆதாரங்களை தானே திரட்டிக் கொள்ள வேண்டும்" என்று கூறி சிவசேனா, பாரதிய ஜனதா கூட்டணியின் கோரிக்கையை முதல்வர் அசோக் சவான் நிராகரித்து விட்டார். இந்த நிலையில், நேற்று மாந கராட் சியின் பெஸ்ட் கமிட்டி கூட்டம் மீண்டும் நடந்தது. இதில், காங்கிரஸ் உறுப் பினர் களின் கடும் எதிர் ப்பை யும் மீறி, பஸ் கட்டண த்தை உயர் த்த முடிவு செய் யப் பட்டது.

தற் போது 3 கிலோ மீட்டர் தூரம் வரை ரூ3 குறைந்த பட்ச கட்ட ணமாக உள்ளது. இது ரூ4 ஆக அதி கரிக்கிறது. 3 கிலோ மீட்டருக்கு அப்பால் தற்போது வசூ லிக்கப் படும் கட்ட ணத்தில் ரூ2 அதிகரிக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று பெஸ்ட் நிறுவனம் அறி வித்துள்ளது.