Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அலுவலகம் அருகில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல் உதவி மையம் துவக்கம்

Print PDF

தினமணி 29.09.2010

மாநகராட்சி அலுவலகம் அருகில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல் உதவி மையம் துவக்கம்

திருப்பூர், செப்.28: சாலை நெருக்கடியை சீர்செய்யவும், வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு காவல் உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது.

÷திருப்பூர் பழைய பஸ் நிலையம், காமராஜர் சாலை, மாநகராட்சி சாலை என 4 பகுதிகளில் இருந்தும் வரும் வாகனங்கள் சந்திக்கும் மாநகராட்சி பகுதியில் போ க்குவரத்து நெருக்கடி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முக்கிய நாட்களில் மேலும் நெரிசல் அதிகரித்து வாகனங்கள் தொடர்ந்து செல்வதில் சிக்கல் நிலவுகிறது.

÷தவிர, ஜவுளி மற்றும் நகைக் கடைகள் நிறைந்த அப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் வழிப்பறி, திருட்டுச் சம்பவங்கள் குறித்து பாதிக்கப்படுவோர் உடனுக்குடன் போலீஸôரிடம் தெரிவித்து உதவி பெற மாவட்ட காவல்துறை சார்பில் மாநகராட்சி முன்பு காவல் உதவி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

÷அதனடிப்படையில், அப்பகுதியில் காவல் உதவி மையம் செவ்வாய்க்கிழமை துவங்க ப்பட்டது. மாவட்ட எஸ்பி ஏ.அருண் இக்காவல் உதவி மையத்தை துவங்கி வைத்தார். மேலும், அப்பகுதிகளிலுள்ள 4 சாலைகளிலும் ஒலி பெருக்கி வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து குறித்த ஆலோசனைகளை போலீஸôர் காவல் உதவி மையத்தில் அமர் ந்தபடியே தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

÷போக்குவரத்து பிரச்னையை தீர்ப்பதோடு மட்டுமின்றி பொதுமக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தெரிவித்து போலீஸôரின் உதவியை பெறவும் இந்த காவல் உதவி மையம் வழிவகை செய்யும். இதேபோல், நகரின் பல பகுதிகளில் காவல் உதவி மையங்கள் திறக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.