Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலாஸ் பகுதியில் விரைவில் புதிய நிழற்குடை பேரூராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன்                   01.11.2010

சேலாஸ் பகுதியில் விரைவில் புதிய நிழற்குடை பேரூராட்சி தலைவர் தகவல்

குன்னூர், நவ.1: சேலாஸ் பகுதியில் ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும் என்று மன்ற கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

உலிக்கல் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ஆல்துரை, துணை தலைவர் ராதா முன்னிலையில் வகித்தனர்.ஜோசப்(திமுக): சேலாஸ் பகுதியில் நெடுஞ்சாலை துறை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றும் போத அங்கிருந்த நிழற்குடையும் இடிக்கப்பட்டது. இதனால் பயணிகள் வெயில், மழை காலத்தில் ஒதுங்க இடமின்றி அவதியுறுகின்றனர். தலைவர்: சேலாஸ் பகுதியில் முதற்கட்டமாக ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் நிழற்குடை அமைக்கப்படும். இன்னொரு நிழற்குடை அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும். தமிழ்செல்வன்(திமுக): ட்ரூக் சாலை சீரமைப்பது எப்போது? குன்னூர்&மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி சந்திப்பில் பேரூராட்சி சார்பில் நுழைவு வாயில் ஏற்படுத்தும் திட்டம் என்னவானது?தலைவர்: ட்ரூக் சாலையை சீரமைக்க அரசு அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தனியார் எஸ்டேட் பகுதியில் சாலை அமைக்க நில அளவை செய்யப்பட்டு இதற்கான அறிக்கையும் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ள து. பேரூராட்சி சார்பில் ரூ.20 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டு இருப்பதால் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. காட்டேரி பகுதியில் நுழைவு வாயில் ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றி 2 ஆண்டுக்கு மேலாகிறது. ஆனால் அதிகாரிகளின் மெத்தன போக்கால் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. மீண்டும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்படும்.

பகவதி(திமுக): பில்லூர் மட்டத்தில் இருந்து ஆணைப்பள்ளம் செல்லும் சாலையில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி ரூ.4 லட்சம் செலவில் நடந்து வருகிறது. ஆனால் தரமான பணி மேற்கொள்ளப்படாததால் தற்போது மழைக்கு முழுமையாக இடிந்து விழும் நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரருக்கு உரிய பணம் வழங்க கூடாது.

தலைவர்: கண்டிக்கப்பாக பணியில் தரத்தை ஆய்வு செய்த பின்னர் தான் பணம் வழங்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.