Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் சீரமைப்பு பஸ் போக்குவரத்தில் மாற்றம்

Print PDF

தினகரன்                02.11.2010

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் சீரமைப்பு பஸ் போக்குவரத்தில் மாற்றம்

நாகர்கோவில், நவ.2: நாகர்கோவில், மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் நிலையம் சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியு மாக மாறிவிட்டது.

பஸ் ஸ்டாண்டை சீர மைக்க நாகர்கோவில் நகராட்சியால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அரசால் ரூ1.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலைய சீரமைப்புக்கு தொழில்நுட்ப அனுமதி, நிர்வாக அனுமதி கிடைக்கப் பெற்றுவிட்ட நிலையில், டெண்டர் பிறப்பிக்கப்பட்டு பணி தொடங்குவதற்கான ஆணையும் வழங்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்ற அரசு போக்குவரத்து கழக பஸ்கள், மினி பஸ்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்வது குறித்து நாகர்கோவில் நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து போலீசார், அதிகாரிகள் மற்றும் தன் னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது. இதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு விபரங்கள் கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர் ந்து இன்று மாலை 5 மணிக்கு கலெக்டர் ராஜேந் திர ரத்னூ தலைமை யில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

மாவட்ட வருவாய் அலு வலர் கலைச்செல்வன், நகராட்சி சேர்மன் அசோ கன் சாலமன், ஆணையர் ஜானகி ரவீந்திரன், போக்குவரத்து கழக பொதுமேலாளர் ரவிவர்மா மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். கூட்டத்தில் பஸ் போக்குவரத்தில் செய்யப்பட வேண் டிய மாற்றங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக நாகர்கோவில் நகராட்சி சேர்மன் அசோகன் சாலமன் கூறியதாவது: நாகர்கோவில் அண்ணா பஸ் நிலைய சீரமைப்புக்கு முன்னதாக பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதில் ஏற்கனவே நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கலெக்டருக்கு கடிதம் எழுதியிருந்தோம். அதில் அண்ணா பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்ற பஸ்களின் ஒரு பகுதியை வடசேரியில் உள்ள கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்குவது, இதர பஸ்களை இந்து கல் லூரி அருகே உள்ள பொருட்காட்சி திடல் பகுதியில் இருந்து இயக்குவது அல்லது நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷன் பகுதியில் வந்து திரும்பி செல்லச்செய்வது உள்ளிட்ட முடிவு கள் தெரிவிக்கப்பட்டன. கலெக்டர் தலைமையில் நடைபெறுகின்ற கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.