Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புறவழிச்சாலை முழுமையானால் நகரில் வாகன நெரிசல் குறையும் நகரமைப்பு அலுவலர் தகவல்

Print PDF

தினகரன்                   29.11.2010

புறவழிச்சாலை முழுமையானால் நகரில் வாகன நெரிசல் குறையும் நகரமைப்பு அலுவலர் தகவல்

பொள்ளாச்சி. நவ 29: பொள்ளாச்சி நகரத்தை ஒட்டிய புறவழிச்சாலை திட்டம் முழுமையடைந்தால் நகரில் வாகன போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறை யும் என்று நகரமைப்பு அலு வலர் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப வாகன பயன்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக நகரில் வாகன போக்குவரத்து அதிகரித்து பெரும்பாலான ரோடுகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது கோட்டூர் ரோடு ரயில்வே மேம்பாலம் பணி நடைபெற்று வருவதால் வாகனங்கள் மாற்றுபாதையில் திருப்பிவிடப்பட்டு போக்குவரத்து மேலும் ஸ்தம்பித்து வருகிறது. இனிவரும் காலங்களிலும் வாகனங் களின் எண்ணி க்கை அதிகரித்து மேலும் போக்குவரத்து ஸ்தம்பிக் கும் சூழல் ஏற்பட்டுள்ளது. புறவழிச்சாலை திட்டத்தை முழுமைப்படுத்தினால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று நகரமைப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நகராட்சியின் நகரமைப்பு அலுவலர் வரதராஜன் கூறியதாவது:

நகரில் மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரோடுகளின் அகலம் போதுமானதாக இல்லை. ஆகவே இப்பிரச்னைக்கு தீர்வு காண பல ஆண்டுகளுக்கு முன்பு புறவழிச்சாலை திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதில் கோவை ரோட்டை பாலக்காடு ரோட்டுடன் இணைத்தல், பல்லடம் ரோட்டை உடுமலை ரோட்டுடன் இணைத்தல் ஆகிய இரு பணிகள் மட்டும் நகராட்சி வசம் உள்ளது.

கோவை ரோட்டில் மகாலிங்கபுரம் ஆர்ச் எதிரே இருந்து 80 அடி அகல சாலை ஒன்று சுமார் 1.2 கி.மீட்டர் தூரம் சென்று வடுகபாளையம் பிரிவு வழியாக பாலக்காடு ரோட்டை அடையும். இந்த இடைப்பட்ட தூரத்தில் சுமார் 6.52 ஏக்கர் நிலம் தனியார் பட்டா நிலங்களுக்குள் வருகிறது. இவை முழுக்க முழுக்க ரோடு பயன்பாட்டுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளதால் தனியார் இதில் கட்டடங்களை கட்டுதல் உள்ளி ட்ட எதற்கும் பயன்படுத்த முடியாது. தற்போது மேற்படி இடத்தில் 121 மீட்டர் மட்டும் நகராட்சி வசம் உள்ளது. மீதமுள்ள 1.08 கி.மீட்டர் தூர இடத்தினை தனியார்கள் நகராட்சிக்கு ஒப்படைக்க தாங்களாக முன்வர வேண்டும்.

அதேபோல் பல்லடம் ரோட்டில் இருந்து உடுமலை ரோட்டை அடைய .75 கி.மீட்டர் தூரத்தில் சிலர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதில் நகராட்சிக்கு சாதகமான தீர்ப்பு வரும்பட்சத்தில் மேற்படி இடத்தை கையகப்படுத்தி ரோடு போடப்படும். கோவை ரோட்டையும் பாலக்காடு ரோட்டையும் இணைக்கும் திட்டத்திற்கு ரூ. ஒரு கோடியே 25 லட்சத்தை வழங்க அரசு தயாராக உள்ளது. தனியார்கள் முன்வந்து இடத்தை ஒப்படைத்தால் மேற்படி ரோடு வழியாக கனரக வாகனங்கள் திருப்பி விடப்பட்டு நகருக்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை வெகுவாகக் குறைக்கலாம்.

மேலும் பாலக்காடு ரோட்டில் இருந்து திருச்சூர் ரோட்டையும், திருச்சூர் ரோட்டில் இருந்து வால்பாறை ரோடு வழியாக உடுமலை ரோட்டையும் இணைக்கும் பணிகள் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் வசம் உள்ளது. இவ்வாறு உள்ளாட்சி அமைப்புகள் முனைப்புடன் செயல்பட்டு புறவழிச்சாலை திட்டத்தை முழுமைப்படுத்தினால் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.