Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒட்டன்சத்திரத்தில் ரூ.10 லட்சத்தில் நிழற்குடை

Print PDF

தினமலர்        30.12.2010

ஒட்டன்சத்திரத்தில் ரூ.10 லட்சத்தில் நிழற்குடை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட்டில் ரூ.10 லட்சம் செலவில் குடிநீர், பயணிகள் நிழற்குடை, இலவச சிறுநீர் கழிப்பிடம், பயணிகள் உட்கார இருக்கை வசதி செய்து கொடுக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒட்டன்சத்திரம் நகராட்சி முதல் கூட்டம் தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. துணை தலைவர் வனிதா முன்னிலை வகித்தார். நகராட்சி கமிஷனர் மூர்த்தி வரவேற்றார். தலைமை எழுத்தர் கிருஷ்ணன் தீர்மானங்களை வாசித்தார். அரசு தலைமை கொறடா சக்கரபாணி, அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை கொட்ட காவேரியம்மாபட்டி ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தை விலைக்கு வாங்கி அங்கு குப்பைகளை கொட்டுவதற்கும், பத்து லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் நிழற்குடை, இலவச சிறுநீர் கழிப்பிடம், பயணிகள் உட்காருவதற்கு இருக்கை வசதிகள் மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கவும் அனுமதி அளித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Wednesday, 01 December 2010 07:24