Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விழுப்புரத்தில் ரூ24லட்சம்மதிப்பில் புதியபேருந்துநிறுத்தம் துணை முதல்வர் திறந்து வைத்தார்

Print PDF

தினகரன்              07.12.2010

விழுப்புரத்தில் ரூ24லட்சம்மதிப்பில் புதியபேருந்துநிறுத்தம் துணை முதல்வர் திறந்து வைத்தார்

விழுப்புரம், டிச. 7: விழுப்புரத்தில் ரூ. 24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 24 லட்சம் மதிப்பில் பிர மாண்ட புதிய பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது. இதனை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து விழுப்புரம் நகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் கே.கே. ரோட்டில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட எரிவாயு தகன மேடையை துணை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது அவர், கந்தசாமி மரகதம் அறக்கட்டளை சார்பில் எரிவாயு தகன மேடைக்கு ஆம்புலன்சை அர்ப்பணித்து வைத்தார். அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் பழனிசாமி, நகர்மன்ற தலைவர் ஜனகராஜ், ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் கவுதமசிகாமணி, செயலாளர் செல்வராஜ், விழுப்புரம் கோபிசிகாமணி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன், எம்எல்ஏ சிவா, சிவக்குமார், நகர செயலாளர் பாலாஜி மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதையடுத்து, விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் முன்பு மாவட்ட திமுக சார்பில் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர். எம்எல்ஏக்கள் புஷ்பராஜ், கண்ணன், சபாராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி சம்பத், விழுப்புரம் சேர்மன் ஜனக ராஜ், மாவட்ட அவைத் தலைவர் மஸ்தான், திமுக பொருளாளர் புகழேந்தி, எக்ஸ்சலெண்ட் கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குனர் திருசங்கு, எலும்பு முறிவு சிறப்பு டாக்டர் முத்தையன், விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் அமீர்அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் மைதிலிராஜேந்திரன், அசோகன், ஒன்றிய தலைவர்கள் காணை கல்பட்டுராஜா, கோலியனூர் பிரசன்னதேவிசெல்வகுமார், மயிலம் மலர்மன்னன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேம்பிரவி, வளவனூர் சேர்மன் சம்பத், உட்பட பலர் வரவேற்றனர். இதேபோல் துணை முதல் வர் ஸ்டாலினை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் பழனிசாமி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடாசலம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், திண்டிவனம் சப்&கலெக்டர் பாஜிபாக்ரே ரோகிணிராம்தாஸ், விழுப்புரம் கோட்டாச்சியர் முத்துசாமி, தாசில்தார் சேதுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் வரவேற்றனர். டிஐஜி மாசானமுத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

 விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் ரூ.24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அருகில் அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் பழனிசாமி, சேர்மன் ஜனகராஜ், கோபிசிகாமணி.