Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேனி புறவழிச் சாலையில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் துவக்கம்

Print PDF

தினமணி 6.11.2009

தேனி புறவழிச் சாலையில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் துவக்கம்

தேனி
, நவ.5: தேனி புறவழிச் சாலையில் வனத் துறை இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான முதற் கட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

÷மாவட்டத் தலைநகரான தேனியில் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிóக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, புதிய பஸ் நிலையம் அமைக்க தேனி-பெரியகுளம் புறவழிச் சாலையில் சிட்கோவிற்கு வடபுறமுள்ள வனத் துறைக்குச் சொந்தமான 7.35 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரைத்தது. ÷

மேலும் இந்த இடத்திற்குப் பதிலாக கடமலைக்குண்டு பகுதியில் இரண்டு மடங்கு அரசு புறம்போக்கு நிலத்தை வனத் துறைக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, வனத் துறை இடத்தில் பஸ் நிலையம் அமைக்க மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் வழங்கியது.

÷இதன் பேரில் பஸ் நிலையம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் உள்ள மரங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.21 லட்சம் வழங்க நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. ÷

இந் நிலையில் வனத் துறை இடத்தில் பஸ் நிலையம் அமைக்கத் தனியார் தொண்டு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் கடந்த வாரம் தள்ளுபடி செய்தனர்.

÷வனத் துறை வழிகாட்டுதலின்படி பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தின் நான்கு புறமும் தூண்கள் அமைக்க நகராட்சித் தலைவர் பழனிச்சாமி தலைமையில் பூஜைகள் செய்யப்பட்டு வியாழக்கிழமை பணிகள் தொடங்கின.

Last Updated on Friday, 06 November 2009 06:15