Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

1,500 மாநகர பஸ்களில் விரைவில் ஜிபிஎஸ் வசதி

Print PDF

தினமணி 21.12.2009

1,500 மாநகர பஸ்களில் விரைவில் ஜிபிஎஸ் வசதி

சென்னை, டிச. 20: மேலும் 1,500 மாநகர பஸ்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்ப வழிகாட்டும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

÷சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் 3,257 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் தினமும் இயக்கப்படுகின்றன.

÷சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயக்கப்படும் இந்த மாநகர பஸ்களில் தினமும் சராசரியாக 50.35 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

இந்த வழித்தடங்களில் மாநகர பஸ்கள் எங்கே சென்று கொண்டிருக்கின்றன என்பதை செயற்கைக்கோள் உதவியுடன் அறிந்து பொதுமக்களுக்கு உடனுக்குடன் அறிவிக்கும் ஜி.பி.எஸ். வசதி கடந்த 2007}ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

÷திட்டத்தின் தொடக்கமாக 55 பஸ்களில் ஜிபிஎஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அண்ணாசாலை, பூந்தமல்லி சாலை மற்றும் அடையாறு உள்ளிட்ட குறிப்பிட்ட சில வழித்தடங்களில் முக்கிய பஸ் நிறுத்தங்களில் மட்டும் டிஜிட்டல் முறையில் ஒளிரும் எழுத்துகள் கொண்ட மின் பலகையில் பஸ்கள் வரும் நேரம், எண் ஆகியவை குறித்து அறிவிக்கப்பட்டது.

÷பொதுமக்களுக்கு தகவல் அளிக்கும் (பி.ஐ.எஸ்.) திட்டத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து, வரும் பிப்ரவரி மாதத்துக்குள் மேலும் 1,500 மாநகர பஸ்களில் ஜிபிஎஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ÷இந்தத் திட்டத்துக்காக முதற்கட்டமாக ரூ.15 கோடி நிதி அனுமதிக்கப்பட்டது.

இதற்காக மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைமையகமான பல்லவன் இல்லத்தில் நவீன தகவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. ÷கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு இருவழி மைக் சாதனம் மூலம் பஸ்ஸின் ஓட்டுநருடன் தொடர்பு கொண்டு அனைத்து தகவல்களையும் ஜிபிஎஸ் வசதி மூலம் பெறலாம். ÷"அசோக் லேலாண்ட் டெலிமாட்டிக்ஸ் பிசினஸ் யூனிட்' என்ற நிறுவனம் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

÷வருங்காலத்தில் எஸ்எம்எஸ் மூலம் தொடர்பு கொள்ளும் பயணிகளுக்கு குறிப்பிட்ட எண்ணுள்ள மாநகர பஸ் வந்து கொண்டிருக்கும் இடம், அந்த பஸ் வந்து சேரும் உத்தேச நேரம் குறித்து அறியும் வசதியையும் அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. விழுப்புரம் கோட்டத்துக்கு ஏ.சி. பஸ்கள்: மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 10 ஏ.சி. பஸ்கள் இப்போது விழுப்புரம் கோட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் தியாகராய நகர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.

÷விரைவில் விழுப்புரம் கோட்டத்துக்கு மேலும் 40 ஏ.சி. பஸ்கள் மாற்றப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.