Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் ரூ. 1ஒரு கோடியில் நிழற்குடை

Print PDF

தினமலர் 25.01.2010

ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் ரூ. 1ஒரு கோடியில் நிழற்குடை

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் நிழற்குடை அமைக்கப்படும் என, எம்.பி., டி.ஆர்.பாலு தெரிவித்தார்.ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் முழுவதும் பேரூராட்சி சார்பில் சிமென்ட் தரை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றி 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பொதுமக்கள் வசதிக்காக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில், கடந்த 2007ம் ஆண்டிலிருந்து மாநகர சொகுசு பஸ் இயக்கப்படுகிறது.பயணிகள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பஸ் நிலையத்தில் பஸ்சுக் காக காத்திருப்பவர்கள் நிழற் குடை இல் லாமல் அவதிப்படுகின்றனர்.

பஸ் நிலையத்தை சுற்றி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் நிற்பதற்காக அமைக்கப் பட்ட பிளாட்பாரத்தை வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.எனவே, பயணிகள் நிற்பதற்கு வசதியாக நிழற் குடை அமைக்கும்படி தொகுதி எம்.பி., யான டி.ஆர்.பாலு அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதை ஏற்று மாநகரப் போக்குவரத்துக் கழக இணை மேலாண்மை இயக்குனர் சுப்பாராஜ் தலைமையில் திட்ட மேலாளர்கள், பேரூராட்சி நிர்வாகிகள், தாசில்தார் கந்தசாமி, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சித்தலைவர் துரைசாமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் மேற்கூரை அமைக்க கள ஆய்வு செய்தனர்.பஸ் நிலையத்தில் நிழற்குடை அமைக்க ஒரு கோடி ரூபாய், அங்கன் வாடி மையம் கட்ட 20 லட்சம் ரூபாய், குன்றத்தூர் ஒன்றியத்தில் சமுதாய நலக் கூடம் அமைக்க 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, எம்.பி., பாலு தெரிவித்தார

Last Updated on Monday, 25 January 2010 06:29