Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பழநியில் ரூ.6.60 கோடியில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம்:பிப்.15ல் பயன்பாட்டிற்கு வருகை

Print PDF

தினமலர் 05.02.2010

பழநியில் ரூ.6.60 கோடியில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம்:பிப்.15ல் பயன்பாட்டிற்கு வருகை

பழநி:பழநியில் ரூ. 6.60 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ்ஸ்டாண்ட் வரும் பிப். 15ல் பயன் பாட்டிற்கு வருகிறது.பழநியில் 2 ஏக்கரில் தற்போது வ..சி. பஸ் ஸ்டாண்ட் இயங்குகிறது. விழாக்காலங்களில் பக்தர்கள் பழநியிலிருந்து வெளியூர் செல்ல சிரமம் அதிகமாக உள்ளது. இதைப் போக்கும் வகையில் பஸ் ஸ்டாண்டை ஒட் டிய 5 ஏக்கரில் ரூ.6.60 கோடியில் விரிவாக்கப் பணி கடந்த மார்ச் 2008ல் துவங்கியது.

தேவஸ்தானம் சார்பில் 50 சதவீத தொகை தரப்பட்டது. இப்பஸ்ஸ்டாண்ட்டை பிப். 15ல் துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.வசதிகள்: பழைய,விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ்ஸ்டாண்டில் ஒரே நேரத்தில் 52 ரேக்குகளில் பஸ்கள் நிறுத்தலாம். விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் ஸ்டாண்டில் 51 கடைகள் கட்டப்பட்டுள் ளன. 24 மணி நேர குடிநீர், கழிப் பறை வசதி செய்யப் பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 200 பயணிகள் ஓய்வெடுக்கலாம். நேரக் காப்பாளர், நிர்வாக அலுவலக அறைகள் உள்ளன.

மலைக்கோயிலை காணும் வகையில் பஸ் ஸ்டாண்ட் மேல்தளத்தில் டெலஸ் கோப் வசதி செய்யப்படுகிறது. தேவஸ்தானம் சார்பில் தகவல் மையமும் அமைக்கப்படுகிறது. நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம் கூறுகையில்,"சமீபத்தில் கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட்களில் பழநி பஸ்ஸ்டாண்ட் அளவில் பெரியதாகும். பக்தர்கள், பயணிகள் வசதிக்காக கட் டண முறையில் ஏ/சி ஹால் கட்ட திட்டமிட் டுள்ளோம்.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க 8 இடங்களில் நிரந்தர குடிநீர் தொட்டி வைக்கப் படும். பஸ்ஸ்டாண்ட் பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்க ஆலோசித்து வருகிறோம். இயற்கை சூழலை ஏற்படுத்தும் வகையில் புல்வெளி அமைத்துள்ளோம்,' என்றார்.

Last Updated on Friday, 05 February 2010 06:41