Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டிவனம் பஸ் நிலைய ஆரம்ப கட்ட பணி துவக்கம் : அரசு நிர்வாக அனுமதி

Print PDF

தினமலர் 09.03.2010

திண்டிவனம் பஸ் நிலைய ஆரம்ப கட்ட பணி துவக்கம் : அரசு நிர்வாக அனுமதி

திண்டிவனம் : திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு மண் பரிசோதனை பணி துவங்கியது. திணடிவனம் ஏரியில் புதிய பஸ் நிலையம் கட்ட அரசு முடிவு செய் தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் புதிய பஸ் நிலையம் அமைக்க கோர்ட் தடை விதித்தது. தற்போது தமிழக அரசு புதிய பஸ் நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி ஆணை வெளியிட்டுள்ளது.

அந்த ஆணையில் கூறியிருப்பதாவது: திண்டிவனம் ஏரியில் ஆறு ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட அரசு ஆணை வழங் கப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி நிர் வாக இயக்குனர், நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டது. மேற்படி ஆணையை எதிர்த்து கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் 12 ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. இதையடுத்து இடைக்கால தடை வழங்கப்பட்டது.
இந்த வழக்கு கடந்த ஜனவரி 21ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஐகோர்ட்டில் அந்த தடை உத்தரவை மாற்றம் செய்து, புதிய பஸ் நிலையம் கட்ட தேவையான நடவடிக்கைகள் மட்டும் தொடர அனுமதி வழங்கியுள்ளது. புதிய பஸ் நிலையம் கட்ட நகராட்சி நிர்வாக இயக்குனர் 6 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி ஆதாரம் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் திண்டிவனம் நகர மன்றத் தில் கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி, 8 கோடியே 20 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நகராட்சி நிர்வாக ஆணையர் ஒப்புதல் அளித்து, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி புதிய பஸ் நிலையம் கட்ட நிர்வாக அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது.

இந்த அரசு ஆணை கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து நேற்று(8ம் தேதி) பஸ் நிலையத்தில் கட்டடங்கள் கட்டும் பகுதியில் மண் பரிசோதனை செய்ய இடம் குறியீடு செய்யும் பணி நடந்தது. இந்த குறியீடுகளை நகராட்சி பணியாளர்கள் செய்தனர். இன்று(9ம் தேதி) புதுச்சேரியிலிருந்து மண் பரிசோதனைக்கு மண் எடுத்து செல்ல நிபுணர்கள் வருகின்றனர். நீண்ட கால இழுபறிக்குப் பின் திண்டிவனம் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளது.

Last Updated on Tuesday, 09 March 2010 06:19