Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டாண்டில் பஸ் நிற்கும் இடத்தில் அதிரடி மாற்றம் : பெரிய மாற்றத்திற்கு முன்னோட்டம்

Print PDF

தினமலர் 12.03.2010

தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டாண்டில் பஸ் நிற்கும் இடத்தில் அதிரடி மாற்றம் : பெரிய மாற்றத்திற்கு முன்னோட்டம்

தூத்துக்குடி : தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில் நெல்லை பஸ்கள் நிறுத்தம் செய்யும் இடங்களில் திருச்செந்தூர் பஸ்களும், திருச்செந்தூர் பஸ்கள் நிற்கும் இடத்தில் நெல்லை செல்லும் பஸ்களும் மிக விரைவில் மாறுகிறது. இதற்கான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகிய இரண்டு பஸ்ஸ்டாண்ட்கள் செயல்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் பஸ்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை கருத்தில் கொ ண்டு ரூட் பஸ்கள் (புறநகர்பஸ்கள்) அனைத்தையும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்தும், டவுன்பஸ்கள் மற்றும் மினிபஸ்கள் அனத்தும் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்குவதற்கும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுபோன்றவற்றை உடனடியாக அமல்படுத்தினால் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு எதிர்ப்பு வரும் என்பதால் இதனை படிப்படியாக செயல்படுத்த தற்போது நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் முதல் கட்டமாக தற்போது பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் ஒரு மாற்றம் செய்ய தற்காலிக சோதனை முறை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் கூறியதாவது; தூத்துக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து அனைத்து புறநகர் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக புதிய பஸ் ஸ்டாண்டில் சில வசதிகள் செய்ய வேண்டும் என்று மாநகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பணிகளும் செய்யப்பட உள்ளன. திடீரென இதில் மாற்றம் செய்தால் ஏதாவது எதிர்ப்பு போன்றவை ஏற்படும் என்பதால் சிறிது, சிறிதாக அவை மாற்றம் செய்யப்பட உள்ளது. முதல் கட்டமாக ஒரிரு நாளில் பழைய பஸ் ஸ்டாண்டில் நெல் லை, திருச்செந்தூர் பஸ்கள் நிறுத்தம் செய்யும் இடம் மாற்றப்படும். அதன் பிறகு திருச்செந்தூர் பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டிற்கும், பின்னர் நெல்லை பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டிற்கும் மாற்றம் செய்யப்பட உள் ளது. இந்த பணிகள் மிக விரைவில் நடக்கும். ரூட் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்தும், டவுன் பஸ்கள் அனத்தும் பழைய ஸ்டாண்டில் இருந்தும் நெல்லை போன்ற இடங்களில் இயங்குவது போன்று இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர.

Last Updated on Friday, 12 March 2010 06:36