Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க மேயர் கடிதம்

Print PDF

தினமலர் 13.04.2010

திருப்பூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க மேயர் கடிதம்

திருப்பூர் : 'திருப்பூருக்கு புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்க வேண் டும்' என, தமிழக போக்குவரத்து துறை அமைச்சருக்கு மேயர் செல்வராஜ் கடிதம் அனுப்பிஉள்ளார். கடித விபரம்: திருப்பூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. முக்கிய ரோடுகளில் இருந்து, மற்ற பகுதிகளுக்குச் செல்ல பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்டுக்கு மக்கள் செல் கின்றனர். இதனால், பஸ் ஸ்டாண்டுகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, திருப்பூர் நகர சுற்றுப் பகுதிகளில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பூரில் இருந்து தங்கம் மன் கோவில் கொடுமணல் (வழி: நல்லூர், சிட்கோ, முதலிபாளையம், மானூர், ரெட்டிபாளையம்). பல்லடம் ரோட்டில் இருந்து மங்கலம் ரோடு - திருப்பூர் (வழி: தென்னம்பாளையம், எல்.ஆர்.ஜி., கல்லூரி, வீரபாண்டி பிரிவு, குப்பாண்டம் பாளையம், முருகம்பாளையம், இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், குமரன் கல்லூரி, கருவம்பாளையம்) எதிர் எதிர் திசைகளில் இரு பஸ்கள் இயக்க வேண்டும்.பெருமாநல்லூர் ரோடு - அவிநாசி ரோடு, திருப்பூர். (வழி: ரயில்வே ஸ்டேஷன், கொங்கு நகர், திருநீலகண்டபுரம், எம்.எஸ்., நகர், புதிய பஸ் ஸ்டாண்ட், ஜீவா காலனி பிரிவு, அங்கேரிபாளையம், அனுப்பர் பாளையம் புதூர், காந்தி நகர், குமார் நகர், ரயில்வே ஸ்டேஷன்) இரு பஸ்கள் எதிர் எதிர் திசைகளில் இயக்க வேண்டும். தாராபுரம் ரோடு - பல்லடம் ரோடு, திருப்பூர் (வழி: பெரிச்சிபாளையம், சந்திராபுரம், செவந் தாம்பாளையம், முத்தணம் பாளையம், ரங்கேகவுண்டம் பாளையம், கோவில் வழி, செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், வீரபாண்டி, எல்.ஆர்.ஜி., கல்லூரி, தென்னம் பாளையம்) எதிர் எதிர் திசைகளில் இரு பஸ்கள் இயக்க வேண்டும். காங்கயம் ரோடு - ஊத்துக்குளி ரோடு, திருப்பூர் (வழி: நல்லூர், முதலிபாளையம் பிரிவு, வட்டக் காட்டுப்புதூர், சிட்கோ, கூலிபாளையம் நால் ரோடு, மண்ணரை, பாளையக்காடு, டி.எம்.எப்., மருத்துவமனை) எதிர் எதிர் திசைகளில் இரு பஸ்கள் இயக்க வேண்டும்.

காலேஜ் ரோடு - அவிநாசி ரோடு, திருப்பூர் (வழி: ரயில்வே ஸ்டேஷன், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, சிறுபூலுவப் பட்டி, 15 வேலம்பாளையம், அரசு பள்ளி தண்ணீர் பந்தல், அனுப்பர்பாளையம், காந்தி நகர், குமார் நகர், ரயில்வே ஸ்டேஷன்) திருப்பூரில் இருந்து கோவை செல்லும் பயணிகள் அதிகளவில் உள்ளனர். மருத்துவமனை, கல் லூரிகள் அதிகமாக உள்ள அவிநாசி ரோட்டில், கணியூர், கருமத்தம்பட்டி பகுதிகளில் தொழிற்சாலைகளும் உள்ளன. அவிநாசி வழித்தடத்தில், தற் போது உள்ள பஸ்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப்பிலேயே பயணிகள் கூட்டம் நிரம்பி விடுவதால், வழியில் ஏறும் பயணிகள் நெரிசலில் நின்று கொண்டு பயணிக்க அவதிப்படுகின்றனர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் நடக்க உள்ள நிலையில், திருப்பூர் - கோவை செல்லும் அவிநாசி வழித் தடத்தில் ஐந்து புதிய பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும். இவ்வாறு, மேயர் செல்வராஜ் கூறியுள்ளார்.

Last Updated on Tuesday, 13 April 2010 07:17