Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

, மேட்டுப்பாளையம் பஸ்கள் கோவை புது பஸ்ஸ்டாண்டில் நிறுத்தம்:மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

Print PDF

தினமலர் 30.04.2010

ஊட்டி, மேட்டுப்பாளையம் பஸ்கள் கோவை புது பஸ்ஸ்டாண்டில் நிறுத்தம்:மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

கோவை:'ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் வெளியூர் பஸ் அனைத்தும், மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள புது பஸ்ஸ்டாண்ட் வரை மட்டுமே இயக்கப்படும்' என்று, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார்:இது குறித்து மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்ட அறிக்கை:கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம் ரோட்டில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் எதிரில், புதிதாக பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த பஸ்ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.அவ்வாறு திறந்தவுடன், மேட்டுப்பாளையத்திலிருந்து வரும் வெளியூர் பஸ் அனைத்தும், புது பஸ்ஸ்டாண்ட் வரை மட்டுமே இயக்கப்படும். இப் போது இருப்பது போல், காந்திபுரம் வரை இயக் கப்படாது. கூடலூர், ஊட்டி, குந்தா, குன்னூர், மஞ்சூர், மேட்டுப்பாளையம், கெத்தை, பத்ரகாளியம்மன் கோவிலிலிருந்து வரும் பஸ்கள் அனைத்தும், மேட்டுப்பாளையம் ரோடு புது பஸ்ஸ்டாண்டிலேயே நிறுத்தப்படும்.மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்டிலிருந்து, காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டுக்கு பயணிகள் செல்வதற்கு வசதியாக, புதிதாக பஸ்கள் இயக்கப்படும்

Last Updated on Friday, 30 April 2010 05:57
 

'டிராபிக் ஐலண்ட்' திட்டம்: தேனி நகராட்சிக்கு மாற்றம்

Print PDF

தினமலர் 28.04.2010

'டிராபிக் ஐலண்ட்' திட்டம்: தேனி நகராட்சிக்கு மாற்றம்

கம்பம்: கம்பம் நகராட்சியில் 'டிராபிக் ஐலண்ட்' அமைக் கும் திட்டம் ரூ.25 லட்சத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந் தது. இது தற்போது தேனி நகராட்சியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து மேலாண்மை திட்டத் தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகளில் போக்குவரத்தை சரி செய்யும் நோக்கத்தில், நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும். முக்கிய சாலை சந்திப்புகளில் 'டிராபிக் ஐலண்ட்' அமைக்கப்படும். சிக்னல்கள் அமைக் கப்பட்டு, போக்குவரத்து சரி செய்யப்படும். கம்பம் நகராட்சியில் எம்.எல்.., அலுவலக சந்திப்பில் 'டிராபிக் ஐலண்ட்' அமைக்க நகராட்சி நிர்வாகம் மதிப்பீடுகள் தயார் செய்தது. இந்நிலையில் போக்குவரத்து மேலாண்மை அமைப்பின் சார்பில் வழங்கப்படும் 25 லட்ச ரூபாய் நிதி, தேனி நகராட்சிக்கு தரப்பட்டுறவிட் டது. கம்பத்திற்கு வரும் ஆண்டுகளில் நிதி ஒதுக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இத்திட் டம் கைவிட்டுப் போனதால், கம்பம் நகராட்சி நிர்வாகம் தயாரித்த மதிப் பீடு கிடப்பில் போடப்பட் டுள்ளது. தேனி நகராட்சி நிர்வாகம் 'டிராபிக் ஐலண்ட்' அமைக்கும் பணிக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணியில் ஈடுபட துவங்கியுள்ளனர். விரைவில் தேனி நகரில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது

Last Updated on Wednesday, 28 April 2010 06:36
 

புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட ரூ.4.5 கோடி நிதி

Print PDF

தினமலர் 22.04.2010

புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட ரூ.4.5 கோடி நிதி

சாத்தூர் : சாத்தூரில் மூன்றரை ஏக்கரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட அரசு 4.5 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. சாத்தூரில் தற்போதைய பஸ் ஸ்டாண்ட் 65 சென்ட் பரப்பில் அமைந்துள்ளது. அதிகரித்துவரும் வாகனங்களின் காரணமாக இடநெருக்கடியும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இப்பிரச்னை நகராட்சி மன்ற கூட்டத்திலும் எதிரொலித்து. இதையடுத்து மரியன்ஊரணியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து மரியஊரணியில் இருந்த தண்ணீர், மோட்டார் மூலம் வெளியேற்றபட்டது. பின் அங்கு சர்வே மற்றும் மண் பரிசோதனை செய்யப்பட் டது. மூன்றரை ஏக்கரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட அரசு 4.5 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது என நகராட்சி தலைவர் குருசாமி கூறினார்.

Last Updated on Thursday, 22 April 2010 07:13
 


Page 35 of 57