Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

பத்மநாபபுரத்தில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு

Print PDF

தினமணி 19.04.2010

பத்மநாபபுரத்தில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு

தக்கலை, ஏப். 18: பத்மநாபபுரம் நக ராட்சியில் ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம், கலையரங்கம், மழைநீர் வடிகால் ஆகியவற்றை ஹெலன் டேவிசன் எம்.பி. திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹெலன்டேவிட்சன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம், வாழவிளை காலனியில் அமைக்கப்பட்ட கலையரங்கம்,

இராமன்பரம்பு பகுதியில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் அ. ரேவன்கில் தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் இந்திரா முன்னிலை வகித்தார்.

சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் மோகன், உதவியாளர் மில்டன், பேராசிரியர் டால்பின்ராஜா, தக்கலை புனித எலியாசியார் ஆலய பங்குப் பேரவைச் செயலர் வின்சென்ட்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 19 April 2010 10:45
 

பொன்னேரிக் கரையில் புதிய பஸ் நிலையம்

Print PDF

தினமணி 19.04.2010

பொன்னேரிக் கரையில் புதிய பஸ் நிலையம்

காஞ்சிபுரம்
, ஏப். 18: காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் ஏற்படும் இட நெருக்கடியை சமாளிக்க பொன்னேரிக்கரை பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்த அறிக்கை மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

÷காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்துக்கு பஸ்கள் நகர்ப் பகுதிகளில் வர வேண்டியுள்ளது. இதனால் நகரில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டும் இப் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்குதான் குறைந்துள்ளது.

÷
மேலும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பஸ்களில் சில, இரவு நேரங்களில் காஞ்சிபுரம் பஸ் நிலையத்துக்கு வருவது கிடையாது. இதனால் இரவு நேரத்தில் சென்னை, வேலூர், ஒசூர் போன்ற பகுதிகளுக்கு செல்பவர்களும் போதிய பஸ் வசதி இல்லாமல் அவதியுறுகின்றனர்.

÷இந்நிலையில் நகருக்கு வெளியில் பொன்னேரிக்கரை பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைந்தால் பஸ்கள் நகருக்குள் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. விரைவில் அமையவுள்ள புறவழிச் சாலை வழியாக பொன்னேரிக்கரை பஸ் நிலையத்துக்கு பஸ்கள் எளிதில் செல்ல முடியும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

÷மேலும் பொன்னேரிக் கரை பகுதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. இதனால் இந்த நெடுஞ்சாலை வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்லும். இதனால் இரவு நேரங்களிலும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் கூடுதலாக கிடைக்கும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

÷இதுகுறித்து நாட்டுப் பற்றாளர் இயக்கத்தின் தலைவர் தமிழினியனின் கூறியது: காஞ்சிபுரத்தை சுற்றி பல்வேறு தொழில் நகரங்கள் உருவாகியுள்ளன. இதனால் காஞ்சிபுரம் பஸ் நிலையத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. அரசின் பரிசீலனையில் உள்ள பொன்னேரிக்கரை பஸ் நிலைய திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் செய்யார் பிரியும் சாலையில் இருந்து புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்தையும் துரிதப்படுத்த வேண்டும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியும் என்றார்.

÷பொன்னேரிக் கரை பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி குறித்து காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் மகாலட்சுமி தேவியிடம் கேட்டபோது அவர் கூறியது:

ஒரு நாளைக்கு 420 பஸ்கள் தற்போதுள்ள பஸ் நிலையத்துக்கு வந்து செல்வது கடினம். எனவே பொன்னேரிக்கரை பகுதியில் பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பொன்னேரிக் கரை பகுதியில் உள்ள கோனேரிக்குப்பம் கிராமத்தில் 20 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு பஸ் நிலையம் அமைப்பது குறித்து நீர்வள ஆதாரத் துறையிடம் கேட்டுள்ளோம். ஆட்சியர் மூலம் அரசுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

Last Updated on Monday, 19 April 2010 10:07
 

கரூர் நகர போக்குவரத்து மேம்பாடு கலந்தாய்வு கூட்டத்தில் எஸ்.பி., பங்கேற்பு

Print PDF

தினமலர் 15.04.2010

கரூர் நகர போக்குவரத்து மேம்பாடு கலந்தாய்வு கூட்டத்தில் எஸ்.பி., பங்கேற்பு

கரூர்: கரூர் நகர போக்குவரத்து மேம்பாடு பற்றிய கலந்தாய்வு கூட்டம் கரூரில் நடந்தது. கரூர் யூனிட், தமிழ்நாடு போலீஸ் டிராபிக் வார்டன் சங்கர் வரவேற்றார். எஸ்.பி., தினகரன் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., ஞானசிவக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமசாமி, கரூர் நகராட்சி கமிஷனர் உமாபதி, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் ஜவுளி ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் நாச்சிமுத்து, லாரி உரிமையாளர் சங்க தலைவர் ராஜு, ரோட்டரி அன்பொளி காளியப்பன், குளோபல் மனித உரிமைகள் சங்க தலைவர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் வைக்கப்பட்ட கருத்துகள்:

கரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக காலை எட்டு முதல் 11 மணி வரையும், மாலை நான்கு முதல் இரவு ஒன்பது மணி வரையும் சரக்கு ஏற்றி வரும் வாகனங்களை நகர் பகுதிக்குள் அனுமதிக்ககூடாது. இர வு ஒன்பது மணிக்கு மேல் கா லை ஆறு மணி வரை, காலை 11 மணி முதல் மாலை நான்கு மணி வரை மட்டும் சரக்கு வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கப்படும். இரவு 11 முதல் காலை ஐந் து மணிவரை தவிர, மற்ற நேரங்களில் டிரெய்லருடன் டிராக்டர் நகரில் வர அனுமதிக்க கூடாது. மினி பஸ்சுக்காக செயல்படும் பஸ் ஸ்டாண்ட் தற்போது செயல்படும் நகர பஸ் ஸ்டாண்டுடன் இணைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர், வெளியூரில் இருந்து வரும் பஸ் அனைத்தும் பஸ் ஸ்டாண்டின் பின்புறத்தில் உள்ள பழைய மார்க்கெட் வழியாக உள்ளே நுழைந்து, வழக்கமான வெளியேறும் வழியாக பஸ் செல்ல நகராட்சி நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும்.

மினிபஸ் அனைத்தும் வரையறுக்கப்படாத இடத்தில் பயணியை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. குறிப்பாக பஸ் ஸ்டாண்டில் இருந்து திண்ணப்பா தியேட்டர் வழியாக அரசு மருத்துவமனை வரை, மனோகரா கார்னம் வழியாக உழவர் சந்தை வரை ஏற்றி, இறக்க கூடாது. சாலையோரத்தில் திருவள்ளுவர் மைதானம் முன் உள்ள டிரான்ஸ்பார்மரை, மைதானத்துக்குள்ளும், கோவை சாலை மின் அலுவலகம் முன் உள்ளதை, அலுவலக வளாகம் உள்ளும், சி.எஸ்.., பெண்கள் பள்ளி அருகில் உள்ளதை மேலும் சிறிது தள்ளியும் அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவகர் பஜார் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அனைத்து மின்கம்பமும் ஓரமாக மாற்றப்பட வேண்டும்.

ஜவகர் பஜாருக்கு வரும் டூவீலர்கள் பசுபதீஸ்வரா பெண்கள் பள்ளி அருகிலும், நகராட்சி அருகே ஆசாத் சாலையிலும் நிறுத்தவும், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த ஐயப்பன் கோவில் முன் லாரிகளை அப்புறப்படுத்தியும் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது.

கோவை சாலையில் டூவீலர்கள், சம்மந்தப்பட்ட வியாபார நிறுவனம் முன் கயிறு அடித்து நிறுத்த நிறுவன உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு சக்கர வாகனங்கள் குறுக்கு சாலையில் நிறுத்திக்கொள்ள வேண்டும். கோவை சாலை மின்வாரியம் அருகே எந்த வாகனமும் நிறுத்தக்கூடாது. ஸ்டேட் பாங்க் அருகில் வரும் கார் அனைத்தும் ஜி.ஆர்., மண்டப சாலையில் நிறுத்தப்பட வேண்டும். பசுபதீஸ்வரர் கோவில், மருத்துவமனை முன் நிறுத்தப்பட்டுள்ள மேக்ஸி வாடகை வாகனங்கள், வெங்கமேடு பாலத்தின் கீழ் இடையூறு இல்லாமல் நிறுத்த வேண்டும்.

மகாத்மா காந்தி சாலை முதல் திண்ணப்பா தியேட்டர் வரை கிழக்கில் இருந்து மேற்காக மட்டும் அனுமதிக்க வேண்டும். ஜி.ஆர்., மண்டப சாலையை அறிவாலயம் வரை ஒருவழி பாதையாகவும் மாற்ற பரிந்துரைக்கப்பட்டது. போக்குவரத்து டிராபிக் வார்டன்கள், போலீஸார், ரோட்டரி, லயன்ஸ், வர்த்தகர்கள், பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 15 April 2010 07:49
 


Page 36 of 57