Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

திருப்பூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க மேயர் கடிதம்

Print PDF

தினமலர் 13.04.2010

திருப்பூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க மேயர் கடிதம்

திருப்பூர் : 'திருப்பூருக்கு புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்க வேண் டும்' என, தமிழக போக்குவரத்து துறை அமைச்சருக்கு மேயர் செல்வராஜ் கடிதம் அனுப்பிஉள்ளார். கடித விபரம்: திருப்பூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. முக்கிய ரோடுகளில் இருந்து, மற்ற பகுதிகளுக்குச் செல்ல பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்டுக்கு மக்கள் செல் கின்றனர். இதனால், பஸ் ஸ்டாண்டுகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, திருப்பூர் நகர சுற்றுப் பகுதிகளில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பூரில் இருந்து தங்கம் மன் கோவில் கொடுமணல் (வழி: நல்லூர், சிட்கோ, முதலிபாளையம், மானூர், ரெட்டிபாளையம்). பல்லடம் ரோட்டில் இருந்து மங்கலம் ரோடு - திருப்பூர் (வழி: தென்னம்பாளையம், எல்.ஆர்.ஜி., கல்லூரி, வீரபாண்டி பிரிவு, குப்பாண்டம் பாளையம், முருகம்பாளையம், இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், குமரன் கல்லூரி, கருவம்பாளையம்) எதிர் எதிர் திசைகளில் இரு பஸ்கள் இயக்க வேண்டும்.பெருமாநல்லூர் ரோடு - அவிநாசி ரோடு, திருப்பூர். (வழி: ரயில்வே ஸ்டேஷன், கொங்கு நகர், திருநீலகண்டபுரம், எம்.எஸ்., நகர், புதிய பஸ் ஸ்டாண்ட், ஜீவா காலனி பிரிவு, அங்கேரிபாளையம், அனுப்பர் பாளையம் புதூர், காந்தி நகர், குமார் நகர், ரயில்வே ஸ்டேஷன்) இரு பஸ்கள் எதிர் எதிர் திசைகளில் இயக்க வேண்டும். தாராபுரம் ரோடு - பல்லடம் ரோடு, திருப்பூர் (வழி: பெரிச்சிபாளையம், சந்திராபுரம், செவந் தாம்பாளையம், முத்தணம் பாளையம், ரங்கேகவுண்டம் பாளையம், கோவில் வழி, செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், வீரபாண்டி, எல்.ஆர்.ஜி., கல்லூரி, தென்னம் பாளையம்) எதிர் எதிர் திசைகளில் இரு பஸ்கள் இயக்க வேண்டும். காங்கயம் ரோடு - ஊத்துக்குளி ரோடு, திருப்பூர் (வழி: நல்லூர், முதலிபாளையம் பிரிவு, வட்டக் காட்டுப்புதூர், சிட்கோ, கூலிபாளையம் நால் ரோடு, மண்ணரை, பாளையக்காடு, டி.எம்.எப்., மருத்துவமனை) எதிர் எதிர் திசைகளில் இரு பஸ்கள் இயக்க வேண்டும்.

காலேஜ் ரோடு - அவிநாசி ரோடு, திருப்பூர் (வழி: ரயில்வே ஸ்டேஷன், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, சிறுபூலுவப் பட்டி, 15 வேலம்பாளையம், அரசு பள்ளி தண்ணீர் பந்தல், அனுப்பர்பாளையம், காந்தி நகர், குமார் நகர், ரயில்வே ஸ்டேஷன்) திருப்பூரில் இருந்து கோவை செல்லும் பயணிகள் அதிகளவில் உள்ளனர். மருத்துவமனை, கல் லூரிகள் அதிகமாக உள்ள அவிநாசி ரோட்டில், கணியூர், கருமத்தம்பட்டி பகுதிகளில் தொழிற்சாலைகளும் உள்ளன. அவிநாசி வழித்தடத்தில், தற் போது உள்ள பஸ்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப்பிலேயே பயணிகள் கூட்டம் நிரம்பி விடுவதால், வழியில் ஏறும் பயணிகள் நெரிசலில் நின்று கொண்டு பயணிக்க அவதிப்படுகின்றனர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் நடக்க உள்ள நிலையில், திருப்பூர் - கோவை செல்லும் அவிநாசி வழித் தடத்தில் ஐந்து புதிய பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும். இவ்வாறு, மேயர் செல்வராஜ் கூறியுள்ளார்.

Last Updated on Tuesday, 13 April 2010 07:17
 

சென்னைக்கு 2 புதிய பஸ்கள்

Print PDF

தினமணி 07.04.2010

சென்னைக்கு 2 புதிய பஸ்கள்

கும்மிடிப்பூண்டி, ஏப்.6: கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி பேரூராட்சியில் இருந்து சென்னைக்கு 2 புதிய பஸ்கள் இயக்கப்படுவதை முன்னிட்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

÷கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி பேரூராட்சியில் 6 மாதத்துக்கு முன்பு ஆரணியில் இருந்து புதுவாயல் வழியாக சென்னை வள்ளலார் நகருக்கு பஸ் இயக்கப்பட்டு வந்த நிலையில் திடுமென நிறுத்தப்பட்டது.

÷பொதுமக்களுக்கு பெரிதும் பயன்பாட்டில் இருந்த இந்த பஸ் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ஆரணி நகர திமுக செயலர் கண்ணதாசன் மற்றும் திமுகவினர் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என். நேருவை சந்தித்து மேற்கண்ட தடத்தில் பஸ் வசதியை மீண்டும் ஏற்படுத்தித் தர கோரிக்கை வைத்தனர்.

÷அதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் ஆரணி பேரூராட்சியில் இருந்து தடம் எண் 532 என்ற 2 புதிய பஸ்கள் சென்னை வள்ளலார் நகருக்கு இயக்கப்பட்டது.

÷இதையொட்டி தொடக்க விழா ஆரணி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் கோ.வெற்றிவீரன் பஸ்ûஸ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

÷இந்த விழாவில் ஆரணி நகர தி.மு.க. செயலர் கண்ணதாசன், தி.மு.க. வழக்கறிஞர்கள் அன்புவாணன், கரிகாலன், முஸ்தபா, முனீர் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 07 April 2010 09:22
 

திண்டிவனம் பஸ் நிலையத்தை... அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நகராட்சியின் நடவடிக்கை அவசியம்

Print PDF

தினமலர் 07.04.2010

திண்டிவனம் பஸ் நிலையத்தை... அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நகராட்சியின் நடவடிக்கை அவசியம்

திண்டிவனம்: திண்டிவனம் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் திண்டிவனம் மேம்பாலத்திற்கு அருகில் நகராட்சி பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து புதுச்சேரி,கடலூர், வந்தவாசி, காஞ்சிபுரம், திருவண் ணாமலை, செஞ்சி, விழுப்புரம் உட்பட பல வெளியூர்களுக் கும், மயிலம், பொம்பூர், திருவக்கரை, ரெட்டணை உட்பட பல சிறிய ஊர்களுக்கும் தினமும் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் நிலையத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் பயணிகள், பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களும் பெரிதும் பாதிக்கின்றனர். பஸ் நிலைய கட்டடம் இடிந்து விழும் நிலையில் காரை பெயர்ந்து, ஒட்டடை படிந்து, துர்நாற்றம் வீசுகிறது. பயணிகள் உட்கார போதிய இருக்கை வசதி இல்லை. முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் தரையிலும் உட்கார முடியாமல் சுகாதார சீர்கேடுடன் அப்பகுதி அமைந்துள்ளது.கட்டடத்தில் மின்சார ஒயர் கள் பெயர்ந்து பாதுகாப்பற்ற நிலையில் பயணிகளை அச்சுறுத்துகிறது. பஸ் நிலைய நுழைவு வாயில் எங்கும் பார்க்க முடியாத அளவிற்கு படுமோசமாக மேடு பள்ளமாக உள்ளது. பஸ்கள் நிற்கும் வளாகம் முழுவதும் பெயர்ந்து கருங்கல் ஜல்லிகள் சிதறிக் கிடக்கின்றன.

சுகாதாரமற்ற பஸ் நிலைய வளாகத்திற்குள் பயணிகள் காத் திருக்காமல் பஸ் நிலையத் திற்கு வெளியே உள்ள கடையோரங்களில் காத்திருந்து தங்கள் பஸ் வந்ததும் பயணிக்கிறார்கள். பஸ் நிலையத்திற்குள் பயணிகள் வரத்து குறைவால் கடைகளில் வியாபாரம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. பஸ் நிலையம் ஆந்தை, வவ் வால் மற்றும் ஆடு, மாடுகள் ஓய்வெடுக்கும் வளாகமாக மாறி உள்ளது. பஸ் நிலைய நுழைவு வாயிலில் கிடங்கல் ஏரி வாய்க்காலையொட்டி கட்டியுள்ள தடுப்புச் சுவர் இடிந்து கிடக்கிறது. நெடுஞ்சாலையில் திண்டிவனம் ஏரி அருகே புதிய பஸ் நிலையம் அமைக்க நகராட்சி முயற்சி மேற்கொண்டது.

ஏரி பகுதியில் பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் புதிய பஸ் நிலையம் அமைக்கும் முயற் சிக்கு 5 ஆண்டுகளாக பின்னடைவு ஏற்பட்டது. இதனிடையே புதிய பஸ் நிலைய கட்டுமான பணிக்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. நகராட்சி சார்பில் 6.75 கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் துவங்கினாலும் பஸ் நிலையம் கட்டி முடிக்க குறைந்தது ஒரு ஆண்டு காலம் தேவைப்படும். அது வரை தற்போதுள்ள நகராட்சி பஸ் நிலையம்தான் பயன்பாட்டில் இருக்கும். எனவே பயன் பாட்டில் உள்ள பஸ் நிலையத்தில் தற்காலிக அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Last Updated on Wednesday, 07 April 2010 06:21
 


Page 37 of 57