Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

பொன்னேரிக்கரையில் புதிய பஸ் நிலையம்

Print PDF

தினமணி 20.02.2010

பொன்னேரிக்கரையில் புதிய பஸ் நிலையம்

காஞ்சிபுரம்
, பிப். 19: காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என்றும்,அதற்காக 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா (படம்) தெரிவித்தார். ÷மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா வெள்ளிக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

÷காஞ்சிபுரம் நகரை அழகுபடுத்தும் திட்டத்தின்கீழ் தமிழக அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இந் நிதியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் நகராட்சியில் புதுப்பாளையம், மண்டபம் தெரு ஆகிய இடங்களில் தார் சாலைகளும், வீரமாகாளியம்மன் தெரு, திருவேகம்பன் தெரு, சங்கூசாபேட்டை தெரு ஆகிய இடங்களில் சிமென்ட் சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. ÷காஞ்சிபுரம் நகரில் நவீன குப்பை தொட்டிகள் வைத்தல் போன்ற பணிகளும் நடைபெற உள்ளன. கச்சபேஸ்வர் நகர் பகுதியில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா ரூ.2.50 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதேபோல் கே.வி.எம். நகரில் ரூ.20 லட்சம் செலவிலும், பல்லவன் நகரில் ரூ.25 லட்சம் செலவிலும், எல்லப்பா நகரில் ரூ.15 லட்சத்திலும் பூங்கா அமைக்கப்பட உள்ளது. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.80 லட்சம் செலவிலும் நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது. இதுபோல் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

÷பின்னர் நிருபர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:

வாலாஜாபாத்தில் இருந்து பெங்களூர் செல்லும் வாகனங்கள் காஞ்சிபுரம் பகுதியில் வராமல் செல்வதற்கு பைபாஸ் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 128 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதுவரை 39 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. செவிலிமேட்டில் இருந்து கீழ்அம்பி வரை 10 கி.மீ. தொலைவில் இந்த பைபாஸ் சாலை அமைக்கப்படும். காஞ்சிபுரத்தில் புதிய பஸ் நிலையத்துக்கு 20 ஏக்கர் நிலம் பொன்னேரிக் கரைப் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. அப் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமையும் என்றார்.

Last Updated on Saturday, 20 February 2010 10:09
 

புதிய பஸ் நிலையம் அமைக்க மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் தீவிரம்

Print PDF

தினமணி 16.02.2010

புதிய பஸ் நிலையம் அமைக்க மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் தீவிரம்

தேனி, பிப்.15: தேனியில் புதிய பஸ் நிலையம் அமைக்க மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்டத் தலைமையிடமாக விளங்கும் தேனி நகரின் மையப் பகுதியில், சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் நகராட்சி பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து கேரளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வணிக வளாகக் கடைகள், நடைமேடை ஆகியவை தவிர, இந்த பஸ் நிலையம் ஒரு ஏக்கர் பரப்பளவிலேயே செயல்படுகிறது. இதனால் விழாக் காலங்களிலும், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக வேலை நாள்களிலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் உள்ளதால், பஸ் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்படுகிறது. பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பெரியகுளம், கம்பம், மதுரை சாலைகளில் அதிகளவில் கடைகள், வாரச் சந்தை, தினசரி சந்தை ஆகியவை இருப்பதால் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதையடுத்து, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு, தேனி - பெரியகுளம் புறவழிச்சாலையில் சிட்கோ வடபுறம் உள்ள வனத்துறைக்கு சொந்தான 7.5 ஏக்கர் இடத்தை தேர்வு செய்தது.

இந்த இடத்திற்குப் பதிலாக வனத்துறைக்கு கடமலைக்குண்டு வனச்சரகப் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் 15 ஏக்கர் மாற்று இடம் வழங்க, தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன் பேரில், நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையும் புதிய பஸ் நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

நகராட்சி நிர்வாகமும் வனத்துறைக்கு செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.21 லட்சத்தை கருவூலம் மூலம் செலுத்தியுள்ளது. பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை கையகப்படுத்த வாய்ப்பாக, வனத்துறை இடத்தைச் சுற்றி தூண்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் புதிய பஸ் நிலையத்தின் அமைப்பு, வணிக வளாகம் மற்றும் தேவையான வசதிகள் செய்ய ரூ.26 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உலக வங்கியில் கடனுதவி பெறுவதற்கு நகராட்சி நிர்வாகம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இந்த மதிப்பீட்டுத் தொகையை திருத்தம் செய்ய உலக வங்கி அறிவுரை வழங்கியுள்ளதையடுத்து, புதிதாக மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறன.

Last Updated on Tuesday, 16 February 2010 05:46
 

பழனியில் ரூ.6.6 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையம் திறப்பு

Print PDF

தினமணி 16.02.2010

பழனியில் ரூ.6.6 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையம் திறப்பு


பழனி, பிப். 15: பழனியில் ரூ.6.6 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார். பழனிக்கு வரும் பக்தர்கள் நலனை முன்னிட்டு பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பழனி நகராட்சி முயற்சியால், தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் ரூ.6.6 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டது பஸ் நிலையம்.

திறப்பு விழா நிகழ்ச்சியில், நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் வரவேற்றார். அமைச்சர் பெரியசாமி தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன், அரசு தலைமைக் கொறடா சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், துணைத் தலைவர் ஹக்கீம், திண்டுக்கல் எம்.பி. சித்தன், பழனி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் பேசுகையில், குழந்தை இல்லாத தாய் குழந்தை பெற்றது போல, பழனி நகர மக்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையம் கிடைத்துள்ளது. தற்போதைய துணை முதல்வர், உள்துறை அமைச்சராக இருந்த போது முதல்வர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பொதுப்பணித் துறை, அறநிலையத் துறை அமைச்சர்கள் மேற்கொண்ட முயற்சியின் பேரில் 26 நாள்களில் திட்டம் ஒப்புதல் பெற்றதோடு, திருக்கோயிலில் இருந்தும் 50 சதம் பங்காக நிதி பெறப்பட்டுள்ளது என்றார்.

பழனி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பேசும் போது,

பழனிக்கு பல நல்ல திட்டங்களை திமுக அரசு வழங்கியுள்ளது. அதேபோல பாதாள சாக்கடை திட்டம், பச்சையாறு திட்டம் நிறைவேற உதவ வேண்டும் என்றார். திண்டுக்கல் எம்.பி. சித்தன் பேசும்போது, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள இடத்தை பெற்றுத்தரும் பட்சத்தில் நகர மக்களுக்கும், பக்தர்களுக்கும் வேண்டிய வசதிகள் செய்து தர வாய்ப்புள்ளது என்றார்.

துணை முதல்வர் ஸ்டாலின் பேசியது:

பழனிக்கு சராசரியாக சாதாரண நாள்களில் 400, திருவிழா நாள்களில் 500 பஸ்கள் வந்து செல்கின்றன. பல மாநிலங்கள், பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

20 ஆண்டு கால கோரிக்கை தற்போது நிறைவு பெற்றுள்ளது. இங்கு முருகனுக்கு விழா நடப்பது போல தற்போது நடப்பது மு.க. விழா ஆகும். பெயர் அழைப்பிதழில் இருந்தும் எதிர்க்கட்சியினர் யாரும் வரவில்லை. திண்டுக்கல் எம்.எல்.ஏ. பாலபாரதி வேண்டுமென்றே தற்போது உண்ணாவிரதம் இருக்கிறார்.

ஒரு ரூபாய் அரிசி, இலவச டிவி, விவசாயிகள் கடன் தள்ளுபடி என பலவற்றிலும் எல்லா கட்சியினரும் பயனடைந்துள்ளனர். அதிமுக, பாமக, தேமுதிக என பாராமல் அனைவரையும் தமிழர்களாக பாவிக்கிறார் முதல்வர் என்றார். மாவட்ட ஊராட்சித் தலைவர் கவிதா பார்த்திபன், பழனி ஒன்றியத் தலைவர் வனிதா நவராசு, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் வள்ளலார் நன்றி கூறினார்.

Last Updated on Tuesday, 16 February 2010 05:42
 


Page 41 of 57