Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

கொடைக்கானலில் புதிய பஸ் நிலையத்தை 15-ம் தேதி துணை முதல்வர் திறந்து வைக்கிறார்

Print PDF

தினமணி 04.02.2010

கொடைக்கானலில் புதிய பஸ் நிலையத்தை 15-ம் தேதி துணை முதல்வர் திறந்து வைக்கிறார்

கொடைக்கானல்,பிப்.3: கொடைக்கானல் நகர்மன்றக் கூட்டம், அதன் தலைவர் முகமது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, நகராட்சிப் பொறியாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார். உறுப்பினர்களிடையே நடைபெற்ற விவாதம்:

சாம்பாபு: நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டு விட்டதா.? சுற்றுலா நிதியின் கீழ் அபிவிருத்தி பணிகள் தொடங்கப்பட்டு விட்டதா?

பொறியாளர்: இந்த ஆண்டிற்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படும். சுற்றுலா நிதியின் மூலம், கொடைக்கானல் நகராட்சிக்கு ரூ. 289 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான, பணிகள் தொடங்கப்பட உள்ளன.

சின்னு: கலையரங்கம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கழிப்பறை திறக்கப்படாமல் உள்ளது. நகராட்சிப் பணிக்கு படித்த பதிவுசெய்த இளைஞர்களை பணியில் அமர்த்த வேண்டும். கொடைக்கானல் ஏரியில் தனியார் துறையினர் படகுகளை விடுகின்றனர். இதனை முறைப்படுத்தி, ஏரியில் விடப்படும் அனைத்து படகுகளுக்கும் வரி விதிப்பு செய்ய வேண்டும்.

தலைவர்: கொடைக்கானலுக்கு, தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ந் தேதி வருகிறார் அப்போது ரூ. 5 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன பஸ் நிலையத்தை திறந்துவைத்து, வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தொடங்கிவைக்க உள்ளார். இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளையும் பயனாளிகளுக்கு வழங்குகிறார். அரசு வகுக்கும் திட்டத்தின்படி நகராட்சி செயல்படும்.

பொறியாளர்: நகராட்சிப் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆசா ரவீந்திரன்: கொடைக்கானலுக்கு புதிய குடிநீர்த் திட்டம் கொண்டு வரும் பணி என்ன ஆனது?

தலைவர்: குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 31.5 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நகரில் 83 கி.மீக்கு புதிய குழாய்கள் அமைத்து, பல்வேறு இடங்களில் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டு,தினசரி குடிநீர் வழங்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.

மேரி: கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில், பல இடங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. அதுபற்றி தகவல் கொடுத்தாலும் மின் பணியாளர்கள் உடனடியாகச் சரி செய்து கொடுப்பதில்லை.

பாலசுப்பிரமணி: கொடைக்கானல் பகுதிகளில் பல வீடுகளில் மின் இணைப்பு விண்ணப்பம் வழங்கி, பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், மீட்டர் இருப்பு இல்லை எனக் கூறி மின் இணைப்பு வழங்காமல் உள்ளனர்.

பொறியாளர்: மாநிலம் முழுவதும் இப்பிரச்னை உள்ளது. விரைவில் சரி செய்யப்படும் என்றார். நகரமைப்பு அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Last Updated on Thursday, 04 February 2010 11:16
 

புதிய பஸ் நிலைய கட்டடப் பணிகள் ஆய்வு

Print PDF

தினமணி 04.02.2010

புதிய பஸ் நிலைய கட்டடப் பணிகள் ஆய்வு

வந்தவாசி, பிப். 3:வந்தவாசியில் அமைக்கப்பட்டு வரும் புதிய பஸ் நிலைய கட்டடப் பணிகளை தமிழக நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் துரை. சந்திரசேகரன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

வந்தவாசி காமராஜர் நகர் அருகில் 5.38 ஏக்கரில் ரூ.4.11 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 29 பஸ் நிறுத்தும் இடங்கள், 31 கடைகள் உள்ளிட்டவை கட்டப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை தமிழக நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் துரை.சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கட்டட பணிகளை விரைந்து முடிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.

வந்தவாசி நகராட்சித் தலைவர் க. சீனுவாசன், ஆணையர் எஸ்.சசிகலா,துணைத் தலைவர் வாசுகி உள்ளிட்டோர் உடனிருந்தனர்

Last Updated on Thursday, 04 February 2010 11:14
 

மாட்டுத்தாவணிக்கு ஆம்னி பஸ்களை மாற்ற நடவடிக்கை: மேயர், மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினமலர் 03.02.2010

மாட்டுத்தாவணிக்கு ஆம்னி பஸ்களை மாற்ற நடவடிக்கை: மேயர், மாநகராட்சி கமிஷனர் தகவல்

மதுரை: ""மதுரை மாட்டுத்தாவணிக்கு ஆம்னி பஸ்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'' என மேயர் தேன்மொழி, மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் கூறினர்.

நேற்று நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது: மதுரையில் 22 ஆயிரம் குடிசை வீடுகளை மானியத்துடன் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பட்டா இடத்தில் வசிக்கும் அனைத்து குடிசைவாசிகளுக்கும் காங்கிரீட் வீடுகள் கிடைக்கும். புறம்போக்கு, ரயில் பாதை ஓரங்களில் குடியிருக்கும் குடிசைவாசிகளுக்கு அதே இடத்தில் கட்ட உதவி தரப்பட மாட்டாது. மாற்று இடம் தர தயாராக இருக்கிறோம். இதற்காக ராஜாக்கூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப் படுகின்றன. மாட்டுத்தாவணியில் 10 ஏக்கர் பரப்பளவில் லாரி ஸ்டாண்ட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு பாதியை ஆம்னி பஸ் ஸ்டாண்ட் ஆக மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும். அவர்கள், மொத்தமாக வந்தால் புக்கிங் ஆபீஸ்கள் கட்டித் தருவது பற்றி ஆலோசிக்கப்படும். மேலூர் ரோட்டில் நெரிசலை குறைக்க, புதிய சென்ட்ரல் மார்க்கெட் நுழைவு வாயில், லேக் ரோட்டில் அமைக்கப்படும். பிப்ரவரி மாத இறுதிக்குள் பணிகள் முடிந்து, மார்க்கெட் செயல்படத் துவங்கும். பெரும்பாலான வியாபாரிகள், இங்கு வர சம்மதித்துள்ளனர். கடைகள் இடம் மாறியதும், தற்போதுள்ள சென்ட்ரல் மார்க்கெட் இடிக்கப்படும். அந்த இடத்தில் ஐந்து கோடி ரூபாய் செலவில் பல மாடி கார் பார்க்கிங் அமைக்க, மத்திய சுற்றுலா துறை நிதி தரும் என எதிர்பார்க்கிறோம்.

சமீபத்தில் திறக்கப்பட்ட இலவச கழிப்பறைகளை நாங்கள் நேரில் ஆய்வு செய்தோம். அவை நன்கு பராமரிக்கப்படுகின்றன. மக்களிடம் வரவேற்பு இருக்கிறது. பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள கழிப்பறைகள், 24 மணி நேரமும் இயங்கும். மற்றவை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். போலி பென்ஷன்தாரர் பெயரில் மோசடி செய்யப்பட்ட 75 லட்சம் ரூபாயில் 10 லட்சம் ரூபாய் வசூலாகி விட்டது. ஆறாவது சம்பள கமிஷன் நிலுவையை வழங்கும்போது, மீதி தொகையும் பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்

Last Updated on Wednesday, 03 February 2010 07:48
 


Page 43 of 57