Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் ஆய்வறிக்கை: ஸ்டாலினிடம் அளிப்பு

Print PDF

தினமணி 12.11.2009

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் ஆய்வறிக்கை: ஸ்டாலினிடம் அளிப்பு

சென்னை, நவ. 12: போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் அறிக்கை துணை முதல்வர் மு..ஸ்டாலினிடம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

"அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் விரைவில் அமலாக்கப்படும்' என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்தைச் சீரமைக்கவும், சாலைகளை மேம்படுத்தவும் ஆலோசனைகள் வழங்க அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

போக்குவரத்துத் துறை சிறப்பு ஆணையாளர் மச்சேந்திரநாதன், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் அந்தக் குழுவில் இடம்பெற்று இருந்தனர்.

அறிக்கை அளிப்பு... இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான ஆலோசனைக் குழுவின் கூட்டம், தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் மு..ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, பொதுத்துறை செயலாளர் தேவ ஜோதி ஜெகராஜன், போக்குவரத்துத் துறை ஆணையாளர் மச்சேந்திரநாதன், செனனை மாநகர போலீஸ் ஆணையாளர் டி.ராஜேந்திரன், புறநகர் போலீஸ் ஆணையாளர் ஜாங்கிட், ஊழல் தடுப்பு இணை இயக்குநர் சுனில்குமார், சென்னை மாநகராட்சி ஆணையாளர் லக்கானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை, துணை முதல்வர் மு..ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் கூறப்பட்ட ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டு, விரைவில் அமல்படுத்தப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Last Updated on Friday, 13 November 2009 09:36
 

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் திட்டத்துக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 12.11.2009

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் திட்டத்துக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு

பெங்களூர், நவ. 12: பெங்களூரில் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேற்கொள்ளும் திட்டங்களுக்கு ரூ.40 கோடியை ஒதுக்க கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

பெங்களூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பி-டிராக் என்ற முன்னோடித் திட்டத்தை போக்குவரத்து போலீஸôர் அமல்படுத்தி வருகின்றனர்.

இந்த திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென காவல்துறை கோரியிருந்தது. இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பெங்களூர் நகரில் வாகனங்களின் சீரான போக்குவரத்துக்கான பி-டிராக் திட்டத்துக்கு ரூ.40 கோடியை ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இந்த திட்டப்படி, ஊழியர்களின் மாத சம்பளத்தில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான தொகையை ஓய்வூதிய நிதிக்கு வழங்க வேண்டும். அதே அளவு தொகையை அரசும் வழங்கும்.

ஊழியர்கள் ஓய்வுபெறும்போது அவர்களது கணக்கில் சேமிக்கப்பட்ட ஓய்வூதியம் மாதாமாதம் வழங்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 6.7 லட்சம் சைக்கிள்களை 3 மாதங்களில் வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்தது.

மேலும், மாநிலத்தில் ரூ.40 கோடி செலவில் 1082 அங்கன்வாடி மையங்களை கட்டவும், மாதேஸ்வரன் மலைப் பகுதி மக்களுக்கு காவேரி குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ரூ.24 கோடி ஒதுக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

Last Updated on Friday, 13 November 2009 09:24
 

146 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 07.11.2009

146 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

திருச்சி, நவ. 6: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு காவல் மற்றும் போக்குவரத்துத் துறையினர் இணைந்து நடத்திய சோதனையில் பேருந்துகளிலிருந்து 146 காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) ரூபேஷ்குமார் மீனா, திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் திருச்சி முனுசாமி, ஸ்ரீரங்கம் ரவிச்சந்திரன், உதவி ஆணையர் தங்கவேலு மற்றும் அதிகாரிகள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தடை விதித்தும் பேருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வந்த 146 காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் எனபோக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 


Page 49 of 57