Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

மாநகராட்சியின் பெஸ்ட் கமிட்டி கூட்டத்தில் முடிவு மும்பையில் பஸ் கட்டணம் உயர்வு

Print PDF

தினகரன் 31.08.2010

மாநகராட்சியின் பெஸ்ட் கமிட்டி கூட்டத்தில் முடிவு மும்பையில் பஸ் கட்டணம் உயர்வு

மும்பை, ஆக. 31: மும்பையில் பெஸ்ட் பஸ் கட்டணம் ரூ2அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற மும்பை மாநகராட்சியின் பெஸ்ட் கமிட்டி கூட்டத்தில் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டது. கட்டண உயர்வு செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மும்பை பெஸ்ட் பஸ் களில் தினசரி 50 லட்சம் மக்கள் பயணம் செய்கின் றனர். சி.என்.ஜி. காஸ் விலை உயர்ந்ததை அடுத்து சமீபத்தில் ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணம் அதிகரிக்கப் பட்டது. குறைந்த பட்ச ஆட் டோ கட்டணம் ரூ11 ஆகவும். டாக்சி கட்டணம் ரூ14 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

இதைப் போல பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பெஸ்ட் நிர்வாகம் மாநகராட்சியிடம் வலியுறுத் தியது. "நகரில் ஓடும் பெரும் பாலான பஸ்கள் சி.என்.ஜி. காஸில் இயக்கப்படுகிறது. சி.என்.ஜி விலை உயர்வால் மாதந்தோறும் ரூ7 கோடி வரை இழப்பு ஏற்படுவதால், இழப்பை ஈடுகட்ட பஸ் கட் டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை" என்று தெரிவித்த பெஸ்ட் நிர்வாகம், "தற்போது

ரூ3 ஆக இருக்கும் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ5 ஆக அதிகரிக்க வேண்டும்" என்று கோரியது. கட்டண உயர்வு குறித்து முடிவு செய்வதற்காக மும்பை மாநகராட்சியின் பெஸ்ட் கமிட்டி கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை கூடி ஆலோசித்தது. கட்டண உயர்வுக்கு மாநகராட்சியில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங் கிரஸ் கடும் எதிர்ப்பு தெரி வித்து, இரண்டு முறையும் கூட்டத்தில் இருந்து அக்கட்சி வெளிநடப்பு செய்தது.

இதனால், பெஸ்ட் நிறுவனத்துக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மாநில அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று மாநக ராட்சியை ஆளும் சிவ சேனா, பாரதிய ஜனதா கூட்டணி கோரிக்கை விடுத்தது. ஆனால், "பெஸ்ட் நிறுவனம் தனக்கான நிதி ஆதாரங்களை தானே திரட்டிக் கொள்ள வேண்டும்" என்று கூறி சிவசேனா, பாரதிய ஜனதா கூட்டணியின் கோரிக்கையை முதல்வர் அசோக் சவான் நிராகரித்து விட்டார். இந்த நிலையில், நேற்று மாந கராட் சியின் பெஸ்ட் கமிட்டி கூட்டம் மீண்டும் நடந்தது. இதில், காங்கிரஸ் உறுப் பினர் களின் கடும் எதிர் ப்பை யும் மீறி, பஸ் கட்டண த்தை உயர் த்த முடிவு செய் யப் பட்டது.

தற் போது 3 கிலோ மீட்டர் தூரம் வரை ரூ3 குறைந்த பட்ச கட்ட ணமாக உள்ளது. இது ரூ4 ஆக அதி கரிக்கிறது. 3 கிலோ மீட்டருக்கு அப்பால் தற்போது வசூ லிக்கப் படும் கட்ட ணத்தில் ரூ2 அதிகரிக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று பெஸ்ட் நிறுவனம் அறி வித்துள்ளது.

 

ரூ23 லட்சம் செலவில் வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் கூரை

Print PDF

தினகரன் 27.08.2010

ரூ23 லட்சம் செலவில் வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் கூரை

வாலாஜாபாத், ஆக.27: வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் ரூ23 லட்சம் செலவில் கூரை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் வாலாஜாபாத் பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னை, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், தாம்பரம் உட்பட பல பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் இடத்தில் கூரை அமைக்க பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக, காஞ்சிபுரம் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ13 லட்சம், உத்திரமேரூர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பஸ் நிலையத்தில் கூரை அமைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் பணிகள் 2 மாதத்தில் முடியும் என பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராசன் தெரிவித்துள்ளார். பணி தொடங்கியது

 

தாம்பரம் வரை மெட்ரோ ரயில் : நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமலர் 26.08.2010

தாம்பரம் வரை மெட்ரோ ரயில் : நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

தாம்பரம் : வண்ணாரப்பேட்டையில் இருந்து ஏர்போர்ட் வரை அமையவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை தாம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் என, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தாம்பரம் நகராட்சி கூட்டம், தலைவர் மணி தலைமையில் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், மெட்ரோ ரயில் திட்டத்தை தாம்பரம் வரை நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்த தீர்மானத்தில், "சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகளின் முயற்சியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வண்ணாரப்பேட்டையில் துவங்கி ஐகோர்ட், சென்னை சென்ட்ரல், புதிய தலைமைச் செயலகம், அண்ணா மேம்பாலம், சைதாப்பேட்டை, பரங்கிமலை வழியாக சென்னை விமான நிலையத்தை வந்தடையும் வகையில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில், தாம்பரம் நகரம் சென்னையின் நுழைவாயிலாக உள்ளது. சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், தாம்பரம் வழியாக தினமும் ரயில், பஸ்கள் மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இங்கிருந்து தினசரி 300க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரத்தை, மூன்றாவது டெர்மினலாக மாற்ற திட்டமிடப்பட்டுள் ளது.

இந்நிலையில், தாம்பரம் மக்களின் வசதிக்காகவும், சுற்றுப்புற பகுதி மக்களின் வசதிக்காகவும் விமான நிலையம் வரை அமைக்கப்படவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை, தாம்பரம் வரை நீட்டிப்பதற்கு, மாநில அரசின் மூலமாக, மத்திய அரசிடம் வலியுறுத்த தாம்பரம் எம்.எல்..,வை கேட்டுக்கொள்வது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Page 21 of 57