Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

மாநகரில் 100 இடங்களில் அமைகிறது ரூ 1 கோடியில் நவீன பஸ் ஸ்டாப் ஆட்டோ டிரைவர்களுக்கு

Print PDF

தினகரன் 20.08.2010

மாநகரில் 100 இடங்களில் அமைகிறது ரூ 1 கோடியில் நவீன பஸ் ஸ்டாப் ஆட்டோ டிரைவர்களுக்கு

லைசென்சு டிஸ்பிளே சிஸ்டம்

திருப்பூர் மாநகரில் சுமார் 1000 ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்து சாதனமாக ஆட்டோ உள்ள நிலையில், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு ஆட்டோ டிரைவரின் முழுவிவரங்கள் தெரியும் வகையில் ஆட்டோ டிரைவர்களுக்கு லைசென்சு டிஸ்பிளே சிஸ்டம் எனும் முறையை போலீசார் அமல்படுத்த உள்ளனர். இதன்படி, ஆட்டோவில் ஆட்டோ டிரை வரின் பெயர், முகவரி, லைசென்சு எண், ஆட்டோ எண், வயது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு போலீசாரிடம் ஒப்புதல் பெறப்பட்ட சிறப்பு உரி மத்தை ஆட்டோவில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஒட்டி வைக்க வேண்டும். இதன் மூலம் ஆட்டோ டிரைவர்கள் விதிமீறலில் ஈடுபடுவது தடுக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கும் பயனளிக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

திருப்பூர், ஆக. 20: திருப்பூர் மாநகரில் சுமார் 100 இடங்களில் `1 கோடியில் நவீன பஸ் ஸ்டாப்களை அமைக்க போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

திருப்பூர் மாநகரில் போக் குவரத்து நெரிசல் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்று பஸ் ஸ்டாப்கள் முறை யாக இல்லாதது. சாலையி லேயே நின்று செல்லும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரு கிறது.

இதனை தவிர்க்கும் வகையில் சாலையோரத்தில் நெரிசல் ஏற்படாத இடத்தில் பேருந்து நிறுத்தங்களை மாற்றி அமைக்க போலீசார் திட்டமிட்டனர். இதன் முதல் கட்டமாக அவிநாசி ரோட் டில் பேருந்து நிறுத்தங்கள் முறைப்படுத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக மாநகர் முழுவதும் சுமார் 100 இடங்களில் பேருந்து நிறுத்தத்தை நெரிசல் ஏற்படாத வகையில் அமைக்க போலீ சார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த இடங்களில் பொதுமக்கள் நின்று செல்ல வசதியாக நவீன வசதிகளு டன் கூடிய பேருந்து நிறுத்த நிழற்குடைகளை அமைக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

திருப்பூர் வடக்கு காவல்நிலைய பகுதியில் சுமார் 60 இடங்களிலும் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்துக்குட் பட்ட பகுதியில் 42 இடங்க ளிலும் என 100க்கும் அதிக மான இடங்களில் பேருந்து நிறுத்தம் சீரமைக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீ சார் கூறுகையில், "திருப்பூ ரில் நெரிசலை தவிர்க்க பல் வேறு திட்டங்கள் செயலாக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது பஸ் ஸ்டாப்கள் நவீனப்படுத்தப்பட உள்ளன. மும்பையில் உள்ளதை மாதிரியாக கொ ண்டு இந்த பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள் ளன.

தலா ரூ 1 லட்சம் என்ற அடிப்படையில், 100 பஸ் ஸ்டாப்கள் ரூ 1 கோடியில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்பான்சர் அடிப்படையில் இந்த பணிகள் விரைவில் மேற்கொள்ளப் பட உள்ளன," என்றார்.

புதியதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த நவீன பஸ் ஸ்டாப்களில், டிஜிட் டல் ஸ்கிரீனில் எந்தெந்த பகுதிகளுக்கு செல்ல வேண் டிய பஸ்கள், அதன் வழித் தட எண் ஆகியவை தெரியும்.

போக்குவரத்து போலீசார் திட்டம் புதியதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த நவீன பஸ் ஸ்டாப்களில், டிஜிட் டல் ஸ்கிரீனில் எந்தெந்த பகுதிகளுக்கு செல்ல வேண் டிய பஸ்கள், அதன் வழித் தட எண் ஆகியவை தெரியும்.

அதேபோன்று நேரத்தை காட்டும் கடிகாரம், பயணி கள் அமர இருக்கைகள் உள்ளிட்டவையும் இதில் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மாநகரம் சற்று பளிச் என காட்சியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Last Updated on Friday, 20 August 2010 08:40
 

திருவொற்றியூர் வரை நீடிப்பதால் மெட்ரோ ரெயிலுக்கு, மேலும் 7 ரெயில் நிலையங்கள்

Print PDF

மாலை மலர் 19.08.2010

திருவொற்றியூர் வரை நீடிப்பதால் மெட்ரோ ரெயிலுக்கு, மேலும் 7 ரெயில் நிலையங்கள்

திருவொற்றியூர் வரை நீடிப்பதால் மெட்ரோ ரெயிலுக்கு, மேலும்
 
 7 ரெயில் நிலையங்கள்

சென்னை, ஆக. 19- சென்னை நகரின் போக்கு வரத்து நெரிசலை சமாளிப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மொத்த செலவு ரூ.14,600 கோடி என்று திட்டமிட்டப்பட்டது.முதலில் தொடங்கப்பட்ட திட்டத்தின்படி வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை, கிண்டி, தாமஸ் மவுண்ட் வழியாக விமான நிலையம் வரை 23.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. மற்றொரு பாதை 22 கி.மீ. தூரம் கொண்டது. இது சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து எழும்பூர், அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, அசோக்நகர் வழியாக தாமஸ் மவுண்ட் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

2 பாதைகளின் மொத்த தூரம் 45 கி.மீ., இதில் 24 கி.மீ. சுரங்கப்பாதையாகவும், மீதம் உள்ள தூரம் உயர்த்தப்பட்ட பாதையாகவும் இருக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த திட்டம் மேலும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை அமைக்கப்பட இருந்த மெட்ரோ ரெயில் பாதை தற்போது, திருவொற்றியூர் விம்கோ நகர் வரை நீடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மூலம் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக இந்த பாதை 9 கிலோ மீட்டர் தூரம் அதிகரிக்கிறது. வண்ணாரப் பேட்டை ரெயில் நிலையத்துக்குப் பிறகு கொருக்குப் பேட்டை, தண்டையார் பேட்டை, டோல்கேட், தாங்கல், கவுரி ஆஸ்ரம், திருவொற்றியூர், விம்கோ நகர் ஆகிய 7 ரெயில் நிலை யங்கள் புதிதாக அமைக்கப்படுகின்றன.

வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 7 ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் பாதை அமைப்பதால் ரூ.2,200 கோடி கூடுதல் செலவு ஆகும். இதற்கான தொழில் நுட்ப அறிக்கையை டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கு தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தமிழக அமைச்சரவை இது குறித்து இறுதி முடிவை எடுக்கும் அதன் பிறகு மத்திய நகர்ப்புற அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு திருவொற்றியூர் வரை மெட்ரோ ரெயிலை நீடிக்கும் புதிய திட்டம் நிறைவேற்றப்படும். புதிய ரெயில் நிலையங்களை எவ்வாறு அமைப்பது என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. விரைவில் அறிக்கை தயார் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மதுரையில் 30 இடங்களில் நவீன பயணிகள் நிழற்குடை

Print PDF

தினமணி 19.08.2010

மதுரையில் 30 இடங்களில் நவீன பயணிகள் நிழற்குடை

மதுரை, ஆக. 18: மதுரை மாவட்ட மாநகர், புறநகர் பகுதிகளில் மொத்தம் 30 இடங்களில் நவீன பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு..அழகிரி தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் மாநகர் பகுதியில் 15 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 15 இடங்களிலும் நவீன பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும். சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் மும்பையிலுள்ள ராஷ்ட்ரீய கெமிக்கல்ஸ் நிறுவனம் இவற்றை அமைக்க உள்ளது. பதுதில்லியில் உள்ளது போல் முற்றிலும் தரமான முறையில் இந்த நவீன நிழற்குடைகள் அமைக்கப்படும்.

மதுரை மாநகர் பகுதியில் 1.அரசு ராஜாஜி மருத்துவமனை, 2. அழகர்கோவில் சாலை (தேவர் சிலை எதிரில்), 3. சிம்மக்கல், 4 & 5 பழங்காநத்தம் பேருந்து நிலையம் (இரண்டு இடங்களில்), 6. தேனி மெயின் ரோடு (ஜெயராம் பேக்கரி அருகில்), 7. பைபாஸ் ரோடு (குகு தியேட்டர் அருகில்), 8. விளாங்குடி (பாத்திமா கல்லூரி அருகில்), 9.மிஷன் ஆஸ்பத்திரி, 10. நெல்பேட்டை, 11. தினமணி தியேட்டர் சந்திப்பு, 12. தெப்பக்குளம் (மாரியம்மன் கோயில் அருகில்), 13. அண்ணா நகர் (சுகுணா ஸ்டோர் நிறுத்தம்), 14. ஆரப்பாளையும், 15. நரிமேடு ஆகிய இடங்களில் நவீன நிழற்குடை அமைய உள்ளது.

இதேபோல புறநகர் பகுதியில் 1. அய்யர்பங்களா (நத்தம் ரோடு), 2. ஊமச்சிகுளம், 3. சர்வேயர் காலனி (அழகர்கோவில் ரோடு), 4. கடச்சனேந்தல், 5. அழகர்கோவில், 6. கூடல் நகர், 7. விளாங்குடி, 8. பரவை, 9. ஆலமரம் (சமயநல்லூர் திண்டுக்கல் சாலை), 10. ஒத்தக்கடை, 11. பாண்டி கோயில், 12. கருப்பாயூரணி, 13. கருங்காலக்குடி, 14. கொட்டாம்பட்டி, 15. மேலூர் - சிவகங்கை ரோடு (கக்கன் சிலை அருகில்) ஆகிய இடங்களில் நவீன நிழற்குடை அமைய உள்ளது என்றார் மு..அழகிரி.

 


Page 22 of 57