Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

தேனி புதிய பஸ் நிலையத்துக்கு தொழில்நுட்ப அனுமதி

Print PDF

தினமணி 17.08.2010

தேனி புதிய பஸ் நிலையத்துக்கு தொழில்நுட்ப அனுமதி

தேனி, ஆக. 16: தேனியில் அமையவுள்ள புதிய பஸ் நிலையக் கட்டுமானப் பணிகளுக்கு அரசு தொழில்நுட்ப அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து நகராட்சித் தலைவர் பழனிச்சாமி கூறியது: தேனி-பெரியகுளம் புறவழிச் சாலையில் சிட்கோ வளாகம் அருகில் உள்ள 7.5 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள நகராட்சி புதிய பஸ் நிலையத்துக்கு, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி வசதிக் கழகம் மூலம் அரசு ரூ.11.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது பஸ் நிலையக் கட்டுமானப் பணிகளைத் துவக்க அரசு தொழில்நுட்ப அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு மூலம் டெண்டர் கோரப்பட்டு, திட்டப் பணிகள் விரைவில் துவங்க உள்ளன என்றார் அவர்.

 

வந்தவாசி புதிய பஸ் நிலையப் பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை

Print PDF

தினமணி 10.08.2010

வந்தவாசி புதிய பஸ் நிலையப் பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை

வந்தவாசி, ஆக. 9: வந்தவாசி புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வந்தவாசி நகராட்சி ஆணையராக புதிதாக பொறுப்பேற்ற என்.உசேன் பாரூக் மன்னர் (படம்) கூறினார்.

திங்கள்கிழமை ஆணையராக பொறுப்பேற்ற அவர் நிருபர்களிடம் கூறியது:

வந்தவாசி நகரில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க செய்யாற்றில் |10 லட்சம் செலவில் புதிய குடிநீர் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றிலிருந்து அனக்காவூர் நீரேற்று நிலையத்திற்கு குடிநீர் குழாய்கள் புதைக்கப்பட்டவுடன் இக்கிணறு பயன்பாட்டுக்கு வரும்.

வந்தவாசி 5 கண் பாலம் அருகிலிருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்ல அணுகுச் சாலை அமைப்பதற்காக அரசு புறம்போக்கு, இந்து அறநிலையத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணி முடிந்தவுடன் சாலை அமைக்கும் பணி தொடங்கும் என்றார்.

 

பயன்பாட்டுக்கு வந்தது ஒசூர் புதிய பேருந்து நிலையம்

Print PDF

தினமணி 06.08.2010

பயன்பாட்டுக்கு வந்தது ஒசூர் புதிய பேருந்து நிலையம்

ஒசூர், ஆக.5: ஒசூரில் கட்டப்பட்ட அப்பாவு பிள்ளை பேருந்து நிலையம் வியாழக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

இப்பேருந்து நிலையத்துக்கு அப்போது தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு..ஸ்டாலின் 30.08.2007-ம் தேதி அடிக்கல் நாட்டினார். ரூ.11 லட்சத்தில் 3 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டன. கடந்த

ஜூலை 18-ம் தேதி திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின் பங்கேற்று பேருந்து நிலையத்தைத் தொடங்கி வைத்தார்.

ஆனால் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வர காலதாமதமானது. இதனால் ஒசூர் நகர மக்கள் அதிருப்திக்கு உள்ளாயினர். இந்நிலையில் வியாழக்கிழமை முதல் முறைப்படி பேருந்து நிலையம் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வரும் பேருந்துகள் பேருந்து நிலையத்தின் பின் பகுதியில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. பெங்களூர் செல்லும் பேருந்துகள் முன்புற வழியாகச் செல்கின்றன. நகரப் பேருந்துகள் பின்னால் சென்று வெளியில் வரும் வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து சென்னத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வந்த தாற்காலிக பேருந்து நிலையம் அகற்றப்பட்டது.

 


Page 23 of 57