Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

சேவையை மேம்படுத்த மாநகராட்சி போக்குவரத்து நிர்வாக முறையில் மாற்றம்

Print PDF

தினகரன் 21.06.2010

சேவையை மேம்படுத்த மாநகராட்சி போக்குவரத்து நிர்வாக முறையில் மாற்றம்

பெங்களூர், ஜூன் 21:சேவையை மேம்படுத்துவதற்காக மூன்றடுக்கு நிர்வாகமுறையை கொண்டுவர பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட் டுள்ளது.

மழைவந்தால் போதும் சில பஸ்களில் ஒழுகும். சில பஸ்கள் துருப்பிடித்துவிடும். இது பயணிகளுக்கு தொந்தரவாக இருந்துவருகிறது. மோசமான பஸ் பராமரிப்பே இதற்கு முக்கிய காரணம். பஸ் மேலாண்மையை மேம்படுத்த நிர்வாகமுறையில் மாற்றத்தை கொண்டு வர பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம்(பி.எம்.டி.சி.) திட்டமிட்டுள்ளது.

கே.எஸ்.ஆர்.டி.சி., என்..கே.ஆர்.டி.சி., என்.டபிள்யூ.கே.ஆர்.எஸ்.டி.சி. ஆகிய நிறுவனங்களில் இருப்பது போன்ற மூன்றடுக்கு நிர்வாகமுறையை கொண்டுவர பி.எம்.டி.சி. திட்டமிட்டுள்ளது. தற்போ தைய நிர்வாக கட்டமைப் பில், பி.எம்.டி.சி.யின் மத்திய அலுவலகமே பணிமனை யின் செயல்பாட்டை நேரடி யாக கண்காணித்து வருகி றது. இதனால் பஸ்களைசரிவர பராமரிக்க இயலாத சூழ்நிலை உருவாகிவிடுகிறது. 1997ல் பி.எம்.டி.சி. ஆரம்பித்தபோது 2500 பஸ்கள் இருந்தன. இப்போது 6 ஆயிரம் பஸ்கள் இருக்கின்றன. 13 பணிமனைகள் இன்று 34 ஆகியுள்ளது. டிசம்பருக்குள் இது 40 ஆகும்.பணிமனையை நிர்வகிக்க மத்திய அலுவலகத்திற்கு அடுத்தப் படியாக மண்டல அலுவலகத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து பி.எம் .டி.சி. மேலாண் இயக்குநர் சை யத் ஜமீர்பாஷா கூறுகை யில்,‘பஸ் பராமரிப்பு சரிவர கவனிக்கப்படவில்லை என்பதை அறிவோம். எனவே, மத்திய அலுவலகம் மற்றும் பணிமனைகளுக்கு இடையே மண்டல அலுவலகத்தை கொண்டுவந்தால், முடிவுகளை விரைவாக மேற்கொள்ளப்படும். பஸ் பராமரிப்பு மற்றும் உரிய சேவை வழங்க தொடர்கண்காணிப்பு அவசியம்.’ என்றார்.

 

மேட்டுப்பாளையம் சாலை புதிய பஸ் நிலையம் செயல்பட துவங்கியது

Print PDF

தினமணி 18.06.2010

மேட்டுப்பாளையம் சாலை புதிய பஸ் நிலையம் செயல்பட துவங்கியது

கோவை, ஜூன் 17: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அமைக்கப்பட்ட புதிய பஸ் நிலையம் வியாழக்கிழமை முதல் செயல்படத் துவங்கியது.

கோவை- மேட்டுப்பாளையம் சாலை பஸ் நிலையத்தை துணை முதல்வர் மு..ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தார். இந்தப் பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது:

கோவை - மேட்டுப்பாளையம் இடையே 65 அரசு பஸ்களும், 23 தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்தப் பஸ்கள் அனைத்தும் வியாழக்கிழமை முதல் மேட்டுப்பாளையம் சாலை பஸ் நிலையத்தில் இருந்து இயங்கி துவங்கியுள்ளன. பஸ் நிலையத்தில் இருந்து உதகை செல்லும் பஸ்கள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படும்.

உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு 20 இணைப்பு நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தப் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிள்ளோம், என்றனர்.

 

 

மேட்டுப்பாளையம் சாலை புதிய பஸ் நிலையம் இன்று முதல் இயங்கும்

Print PDF

தினமணி 17.06.2010

மேட்டுப்பாளையம் சாலை புதிய பஸ் நிலையம் இன்று முதல் இயங்கும்

கோவை, ஜூன் 16: புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேட்டுப்பாளையம் சாலை பஸ் நிலையம் வியாழக்கிழமை முதல் இயங்கும் என்று, கோவை மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில் 3 ஏக்கரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தை தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தபடி இதுவரை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து உதகை, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள், வியாழக்கிழமை முதல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.மக்களுக்கு வசதியாக உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்களுக்கு நகர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 


Page 27 of 57