Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

புதிய பஸ் ஸ்டாண்ட்: இன்று முதல் அனுமதி

Print PDF

தினமலர் 17.06.2010

புதிய பஸ் ஸ்டாண்ட்: இன்று முதல் அனுமதி

கோவை : மேட்டுப்பாளையம் ரோடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் எதிரே அமைந்துள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் பொதுமக்கள் பயன் பாட்டுக்கு இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது. கோவை - மேட்டுப்பாளையம் ரோடு அரசு போக்குவரத்து கழகத்திற் எதிரே உள்ள பகுதியில் ஏழு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டட திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. துணை முதல்வர் ஸ்டாலின் புதிய பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தார். பஸ் ஸ்டாண்ட் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. ஊட்டி, குன்னூர், குந்தா, பில்லூர், மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து வரும் அனைத்து பஸ்களும் முன்பு காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் வரை இயங்கி வந்தன. தற்போது இந்த பஸ்கள் அனைத்தும், புதிய பஸ்ஸ்டாண்ட் வரை இயங்கும். கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ்ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டு செல்லும். இங்கு வரும் பொதுமக்களுக்கு வசதியாக உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் பகுதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், "புதிய பஸ்ஸ்டாண்ட் வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்துதரப்பட்டுள்ளது. குடிநீர், கழிப்பிடம், ஓய்வறை, பயணிகள் அமருவதற்காக இருக்கைகள் என்று அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன' என்றார்.

 

பளபளக்கும் பஸ் ஸ்டாண்ட்; திறந்து வைத்தார் ஸ்டாலின் இன்று முதல் பஸ் இயக்க ஏற்பாடு

Print PDF

தினமலர்   16.06.2010

பளபளக்கும் பஸ் ஸ்டாண்ட்; திறந்து வைத்தார் ஸ்டாலின் இன்று முதல் பஸ் இயக்க ஏற்பாடு

கோவை : கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பளபளக்கும் பஸ் ஸ்டாண்டை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், மாநகராட்சி சார்பில் ஏழு கோடி ரூபாய் செலவில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் செல்லும் அனைத்து பஸ்களும் இன்று முதல் இங்கிருந்து இயக்கப்படவுள்ளன.

தினமும் 119 அரசு பஸ், 33 தனியார் பஸ், 22 டவுன் பஸ்கள் இங்கிருந்து இயக்கும் வகையில் பஸ் ஸ்டாண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக ஏ.சி., வசதியுடன் கூடிய ஓய்வு அறை, டிரைவர்களுக்கான ஓய்வு அறை, குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கான தனி அறையுடன் புது பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. 25 பஸ்கள், தரை தளத்தில் 64 டூ வீலர்கள், 20 ஆட்டோக்கள், முதல் தளத்தில் 18 கார்கள், 361 டூவீலர்கள் நிறுத்துவதற்கு இங்கு வசதி உள்ளது. தரை தளத்தில் பஸ் ஸ்டாண்டும், முதல் தளத்தில் "பார்க்கிங்' வசதிகளும் அமைந்திருப்பது இந்த பஸ் ஸ்டாண்டின் சிறப்பம்சம். டிக்கெட் ரிசர்வேசன் கவுன்டர், அலுவலக அறைகள் இரண்டு, பொருள் பாதுகாப்பு அறை, ரெஸ்டாரண்ட், மணிக்கூண்டு, பத்திரிகை, பால் விற்பனைக் கடைகள் ஆறு, மின் அறை ஆகியவை தரை தளத்தில் உள்ளன. துர்நாற்றம் ஏற்படுத்தாத, "ஓசோனேட்டடு' முறைப்படி நான்கு கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேறெந்த பஸ் ஸ்டாண்டுக்கும் இல்லாத வகையில், "அல்பா பேனலிங்' முறையில் அமைக்கப்பட்டுள்ள முகப்புப் பகுதி, "கார்ப்பரேட்' நிறுவனங்களின் கட்டடம் போல வசீகரிக்கிறது. மின் சேமிப்பைக் கருத்தில்கொண்டு, 3.2 கிலோ வாட்ஸ் மின் உற்பத்தி செய்யும் காற்றாலை, சூரியஒளி சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. காவல் கட்டுப்பாட்டு அறை, சமூக விரோதிகள் நடமாட்டம் கண்காணிக்க காமிரா வசதி, பயணிகளுக்கான நவீன இருக்கை வசதி, வண்ண மீன் காட்சியகம், பளபளக்கும் தரை தளம் என நம்மூர் பஸ் ஸ்டாண்ட்களுக்குரிய எந்த அடையாளமும் இல்லாமல் இந்த புதிய பஸ் ஸ்டாண்ட் ஜொலிக்கிறது.

பஸ் ஸ்டாண்டை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை 10 மணிக்கு திறந்து வைத்தார். அதன்பின், குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. பஸ்ஸ்டாண்டை பார்வையிட்ட துணை முதல்வர், சிறப்பாக இருப்பதாகப் பாராட்டுத் தெரிவித்தார். போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு, ஊரக தொழில் துறை அமைச்சர் பழனிச்சாமி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், கதர்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மேயர் வெங்கடாசலம் ஆகியோர் உடனிருந்தனர்.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், கலெக்டர் உமாநாத், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் கார்த்திக், மண்டலத் தலைவர்கள் செல்வராஜ், பைந்தமிழ், சாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில்,""பஸ் ஸ்டாண்ட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 6 கோடியே 25 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 75 லட்ச ரூபாய் மதிப்பில், சுரங்க நடைபாதை அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் ரோடு அகலப்படுத்தும் பணி முடிந்த பின் இந்தப் பணி துவங்கும்,'' என்றார்.

""இந்த பஸ் ஸ்டாண்டுக்கு 50 கிலோ வாட்ஸ் மின்சாரம் தேவை; காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலமாக 3.2 கிலோ வாட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும். இதைக் கொண்டு தினமும் 80 விளக்குகளை எரிய வைக்க முடியும். பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளையிலிருந்து (ஜூன்16) இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படும். பஸ் ஸ்டாண்ட் முகப்பின் மேற்புறம் "தமிழ் வாழ்க' என்ற வாசகத்தை பெரிதாக வைக்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த பணி விரைவில் மேற்கொள்ளப்படும்,'' என்று கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.

 

மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் கவுண்டம்பாளையம் குடிநீர் திட்டம்

Print PDF

தினகரன் 15.06.2010

மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் கவுண்டம்பாளையம் குடிநீர் திட்டம்

கோவை, ஜூன் 15: கவுண்டம்பாளையம் குடிநீர் திட்டம், மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா இன்று நடக்கிறது. துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்.

தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின் இன்று கோவை வருகிறார். காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையம் ரோடு புதிய பஸ் ஸ்டாண்டை துவக்கி வைக்கிறார். இந்த பஸ் ஸ்டாண்டிற்கு உலக தமிழ் செம்மொழி மாநாடு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். புதிய பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி பொது நிதி மூலமாக 7 கோடி ரூபாய் செலவில் நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது. பஸ் நிறுத்துமிடம், பயணிகள் தங்கும் கூடம், ஓய்வறை, முதியோர் தங்கும் அறை, தாய்மார் பாலூட்டும் அறை, சாய்தளம், லிப்ட், வாகன நிறுத்துமிடம் என 24 அறை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் கட்டுபாட்டு அறையும், 8 இடத்தில் நவீன ரக கேமராவும் அமைக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் இன்று துவக்குகிறார்

தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின் இன்று கோவை வருகிறார். காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையம் ரோடு புதிய பஸ் ஸ்டாண்டை துவக்கி வைக்கிறார். இந்த பஸ் ஸ்டாண்டிற்கு உலக தமிழ் செம்மொழி மாநாடு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். புதிய பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி பொது நிதி மூலமாக 7 கோடி ரூபாய் செலவில் நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது. பஸ் நிறுத்துமிடம், பயணிகள் தங்கும் கூடம், ஓய்வறை, முதியோர் தங்கும் அறை, தாய்மார் பாலூட்டும் அறை, சாய்தளம், லிப்ட், வாகன நிறுத்துமிடம் என 24 அறை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் கட்டுபாட்டு அறையும், 8 இடத்தில் நவீன ரக கேமராவும் அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகள், வாகனங்கள், வந்து செல்லும் பஸ்கள் போன்றவற்றின் நடமாட்டத்தை கட்டுபாட்டு அறையிலிருந்து கண்காணிக்க முடியும். புகை காற்றை சுத்தம் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடம், கழிப்பிடம், பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு என அனைத்து பொறுப்புகளும் ஒரே ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் முகப்பு பகுதி வணிக வளாக தோற்றத்தில் காணப்படுகிறது. மேட்டுப்பாளையம் மார்க்கத்தில் செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்படும். ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், குந்தா, மேட்டுப்பாளையம், பத்ரகாளியம்மன் கோயில், காரமடை, பில்லூர், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படும். காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட்களிலிருந்து சுற்று பஸ்களும் இயக்கப்படும். காந்திபுரத்திலிருந்து மேட்டுப்பாளையம் மார்க்கத்தில் இயங்கிய பெரும்பாலான மேட்டுப்பாளையம் ரோடு... பஸ்கள் இனி, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்படும்.

பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவை தொடர்ந்து, துணை முதல்வர் ஸ்டாலின், கவுண்டம்பாளையம் வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

30.18 கோடி ரூபாய் செலவில் பவானி ஆற்றின் நீராதாரத்தில் இந்த குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. விரைவாக முடிக்கப்பட்ட, இந்த குடிநீர் திட்டம் இன்று பயன்பாட்டிற்கு வரவுள்ளது. பவானி ஆற்றிலிருந்து 37 கி.மீ தூரம், 600 மி.மீ விட்டம் கொண்ட குழாய் குடிநீர் கொண்டு வரப்படவுள்ளது. தினமும் 1.1 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படவுள்ளது.

கவுண்டம்பாளையம், வடவள்ளி பகுதியில் கூட்டு குடிநீர் கனவு பல ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறவுள்ளது. இதர வழியோர கிராமங்கள் இந்த குடிநீர் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி அறிக்கை:

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட், கவுண்டம்பாளையம்& வட வள்ளி கூட்டு குடிநீர் திட்டம் துவக்க விழாவில் பங்கேற்க துணை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 7 மணிக்கு விமானத்தில் கோவை வருகிறார். அவரை வரவேற்கவும், விழாவில் பங்கேற்கவும் திமுக அனைத்து பிரிவு நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

அதிகாரிகள் தீவிர ஆய்வு

கவுண்டம்பாளையம் குடிநீர் திட்ட பணிகளை குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் ககன்தீப்சிங்பேடி நேற்று ஆய்வு செய்தார். குடிநீர் குழாய், நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டார். குடிநீர் தடையின்றி விநியோகிக்க முடியுமா என ஆய்வு செய்தார். இதேபோல் மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா மற்றும் பொறியாளர்கள் மேட்டுப்பாளையம் புதிய பஸ் ஸ்டாண்ட் இறுதி கட்ட பணிகளை நேற்று பார்வையிட்டனர். பணிகளை விரைவாக முடித்து திறப்பு விழாவிற்கு தயார் செய்ய உத்தரவிட்டனர்.

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட், கவுண்டம்பாளையம்& வட வள்ளி கூட்டு குடிநீர் திட்டம் துவக்க விழாவில் பங்கேற்க துணை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 7 மணிக்கு விமானத்தில் கோவை வருகிறார். அவரை வரவேற்கவும், விழாவில் பங்கேற்கவும் திமுக அனைத்து பிரிவு நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

 


Page 28 of 57