Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

மேட்டுப்பாளையம் சாலை பஸ் நிலையம் இன்று திறப்பு: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Print PDF

தினமணி 15.06.2010

மேட்டுப்பாளையம் சாலை பஸ் நிலையம் இன்று திறப்பு: மு..ஸ்டாலின் பங்கேற்பு

கோவை, ஜூன் 14: கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை துணை முதல்வர் மு..ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கிறார்.

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாநகராட்சியின் பங்களிப்புடன் ரூ. 7 கோடியில் நவீன பஸ் நிலையம் மேட்டுப்பாளையம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக நவீன முறையில் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தரைத்தளம் மற்றும் இரு மாடிகளுடன் இந்த பஸ் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக காத்திருக்கும் அறைகளும், இளம் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலுட்டுவதற்காக தனிஅறையும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

÷மொத்தம் 3.89 ஏக்கர் பரப்பில் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் ஓய்வெடுக்க தனிஅறை கட்டப்பட்டுள்ளது. இரு தளங்களுக்கும் பயணிகள் எளிதில் ஏறி இறங்கும் வகையில் லிப்ட் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி லிப்ட் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பயணிகளின் வாகனங்களை முதல் தளத்தில் பார்க்கிங் செய்யலாம். இதில் 326 இரு சக்கர வாகனங்கள், 18 கார்கள், 64 சைக்கிள்கள் நிறுத்த முடியும். பயணிகளின் பொருட்களை எடுத்துச்செல்ல உதவும் டிராலிகள், வயதானவர்களை அழைத்துச்செல்ல சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட வசதியும் அமைக்கப்பட்டுள்ளன. ÷பஸ் நிலைய வளாகத்தில் 4 கழிப்பிடங்கள் உள்ளன. இவற்றில் 22 அறைகள் உள்ளன. இந்த பஸ் நிலையத்துக்கு ஐ.எஸ்.. தரச்சான்றிதழும் பெறப்பட்டுள்ளது. ÷கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், உதகை செல்லும் பஸ்கள் இதுவரை கோவை மத்திய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு வந்தன. இனிமேல் இந்த பஸ்கள் மேட்டுப்பாளையம் சாலை பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும்.

÷பஸ் நிலைய திறப்பு விழா நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஊரகத் தொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, கதர்வாரியத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம், துணை மேயர் நா.கார்த்திக், மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் வி.பி.செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

 

சென்ட்ரல் மார்க்கெட்டை தொடர்ந்து லாரி நிலையம், ஆம்னி பஸ்கள் மாட்டுத்தாவணிக்கு மாற்றம்

Print PDF

தினகரன் 10.06.2010

சென்ட்ரல் மார்க்கெட்டை தொடர்ந்து லாரி நிலையம், ஆம்னி பஸ்கள் மாட்டுத்தாவணிக்கு மாற்றம்

மதுரை, ஜூன் 10: சென்ட்ரல் மார்க்கெட்டை தொடர்ந்து லாரி நிலையங்களும், ஆம்னி பஸ்களும் இடம் மாற்ற கலெக்டரும், மாநகராட்சியும் அனுமதி அளித்துள்ளன.

மதுரை நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்ட்ரல் மார்க் கெட், மாட்டுத் தாவணிக்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக லாரி நிலையங்களும், ஆம்னி பஸ்களும் இட மாற்றம் செய்யப்படுகின்றன. இதற்காக மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதில் தலா 6 ஏக்கர் லாரி நிலையம், ஆம்னி பஸ்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

மதுரை நகருக்குள் அன்றாடம் ஓடும் ஆயிரம் சரக்கு லாரிகளில், 600 லாரிகள் வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றன. தவிர 500 மணல் லாரிகளும் ஓடுகின்றன. போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க, நகருக்குள் லாரிகள் நுழைய தடை விதிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

வடக்கு மாசி வீதி, கீழமாரட் வீதி, முனிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200 லாரி நிலையங்களை இடம் மாற்ற, மாட்டுத்தாவணியில் 100 லாரி நிலையங்களும், கோச்சடையில் 100 நிலையங்களும் அமைக்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

பெரியார் பஸ்நிலையம் அருகே ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவதால் நகரின் மைய பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் நிலையத்திற்குள் நகர பஸ்கள் இயங்க முடியாத அளவுக்கு ஆம்னி பஸ்கள் நிறைந்துள்ளன.

இதனை இடம்மாற்ற மாட்டுத்தாவணியில் 75 ஆம்னி பஸ்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்படுகிறது. இதோடு அங்கு ஆம்னி பஸ் அலுவலகத்திற்கும் இடம் அளிக்கப்படுகிறது. இங்கிருந்து ஆம்னி பஸ்களும், லாரிகளும் பின் பகுதி வழியாக ரிங் ரோட்டில் இணைய புதிய சாலை அமைக்கப்படும். இதற்கு கலெக்டர் காமராஜ் அனுமதி அளித்துள்ளார். மதுரை லாரி உரிமையாளர் சங்க தலைவர் சாத்தையா, செயலாளர் சாகுல்அமீது, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து விரைவாக இடத்தை ஒதுக்கி தரும்படி கோரினர்.

மாநகராட்சி இடம் ஒதுக்கீடு

மாட்டுத்தாவணியிலும், கோச்சடையிலும் லாரி நிலையங்களுக்காக 1000 சதுர அடி மற்றும் 500 சதுர அடி வீதமும், மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ் அலுவலகத்திற்கும் மாநகராட்சி இடம் ஒதுக்கி கொடுக்கிறது. இதற்காக மாநகராட்சிக்கு மாத வாடகை செலுத்த வேண்டும். அரசு விதிமுறைக்குட்பட்டு வாடகை நிர்ணயிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் அதன் உரிமையாளர்கள் சொந்த செலவில் கட்டிடம் கட்டிக் கொள்ள வேண்டும். விரைவில் கட்டுமான பணிகள் முடிவடைய வாய்ப்புள்ளது.

 

ஸ்டான்லி மருத்துவமனை அருகே போக்குவரத்து சிக்கல் தீர்க்க ரூ.15 கோடியில் சுரங்கப்பாதை செப்டம்பரில் திறப்பு

Print PDF

தினகரன் 10.06.2010

ஸ்டான்லி மருத்துவமனை அருகே போக்குவரத்து சிக்கல் தீர்க்க ரூ.15 கோடியில் சுரங்கப்பாதை செப்டம்பரில் திறப்பு

தண்டையார்பேட்டை, ஜூன் 10: ‘‘ஸ்டான்லி மருத்துவமனை அருகே ரூ.15.76 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை வரும் செப்டம்பர் மாதம் திறக்கப்படும்’’ என்று மேயர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி, தென்னக ரயில்வே ஆகியவை சார்பில், ரூ.15.76 கோடியில் ஸ்டான்லி மருத்துவமனை அருகேயுள்ள எம்.சி. சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வட சென்னை மக்களின் 40 ஆண்டு கால கனவான இந்த சுரங்கப்பாதை, துணை முதல்வர் மு..ஸ்டாலின் மேயராக இருந்தபோது கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கு பின் ஆட்சிக்கு வந்தவர்கள் கிடப்பில் போட்டனர்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க முதல்வரும், துணை முதல்வரும் உத்தரவிட்டனர். அதன்படி, ரூ.15.76 கோடியில் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் பணிகள் நிறைவு பெற்று, செப்டம்பரில் சுரங்கப்பாதை திறக்கப்படும்’’ என்றார்.

 


Page 29 of 57