Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

பாதாள சாக்கடைப் பணி: விழுப்புரத்தில் போக்குவரத்து மாற்றம்

Print PDF

தினமணி 10.06.2010

பாதாள சாக்கடைப் பணி: விழுப்புரத்தில் போக்குவரத்து மாற்றம்

விழுப்புரம், ஜூன் 9: விழுப்புரம் நகராட்சியில் தற்பொழுது நடைபெற்றுவரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணியில் 80 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள பணிகளில் தற்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அண்ணா சிலை முதல் காட்பாடி ரயில்வே கேட் வரை செய்யப்பட வேண்டிய பணிகள் வரும் 14-ம் தேதி முதல் துவக்கப்பட்டு 45 நாள்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளன. இப்பணிகளின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் மேற்கண்ட பணிகள் நடைபெறும் பகுதிகளில் கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, போக்குவரத்து வழிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இப்பாதையில் செல்லும் பஸ்கள், லாரிகள் வரும் 14-ம் தேதி முதல் 45 நாள்களுக்கு பை-பாஸ் சாலையில் சென்று எல்லீஸ் சத்திரம் வழியாக புதிய பஸ் நிலையத்துக்கும், அதே வழியாக மற்ற பகுதிக்கு செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

ரூ.57 லட்சத்தில் புது பஸ் ஸ்டாண்ட்

Print PDF

தினமலர் 10.06.2010

ரூ.57 லட்சத்தில் புது பஸ் ஸ்டாண்ட்

ஓசூர்: ஓசூர் அடுத்த ராயக்கோட்டையில் பொதுமக்களின் நீண்டநாள் கனவு நிறை வடையும் வகையில் 57 லட்சம் ரூபாயில் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது. ஓசூர் அடுத்த ராயக்கோட்டை முக்கிய வியாபார நகரமாக விளங்குகிறது. இங்கு தமிகத்திலே பெரிய தக்காளி சந்தை செயல்படுகிறது. இதுதவிர காய்கறிகள், பூக்கள் அதிகளவு உற்பத்தி செய்து வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மக்கள் நடமாட்டமும், போக்குவரத்தும் அதிகரித்து வந்தநிலையில், ராயக்கோட்டையில் தரமான பஸ்ஸ்டாண்ட் இல்லாமல் பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் கடும் அவதிய டைந்து வந்தனர். ராயக்கோட்டையில் இயங்கி வந்த பழைய பஸ்ஸ்டாண்ட் அடிப்படை கட்டமைப்பு வசதியில்லாமல் நீர் தேங்கி வந்ததால், மாவட்ட நிர்வாகம் இரு ஆண்டுக்கு முன் முள்வேலி போட்டு சீல் வைத்தது.

இதனால், பஸ்கள் சாலையோரம் நின்று பயணிகளை ஏற்றி, இறங்கி வந்தது. இதனால், கூடுதல் போக்குவரத்து நெருக்கெடி ஏற்பட்டது. நகரில் தரமான புதுபஸ்ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர். இதையடுத்து, தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் ராயக்கோட்டையில் 57 லட்சம் ரூபாயில் புதுபஸ்ஸ்டாண்ட் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, ராயக்கோட்டையில் புதுபஸ்ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜைவிழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் சரஸ்வதி, மாவட்ட கவுன்சிலர் சின்ராஜ், யூனியன் கவுன்சிலர்கள் சாந்தி, ராமி, கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிருஷ்ணகிரி எம்.பி., சுகவனம், எம்.எல்.., செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு புது பஸ்ஸ்டாண்ட் கட்டுமான பணியை துவக்கி வைத்தனர். கெலமங்கலம் தி.மு.., ஒன்றிய செயலாளர் அரியப்பன், பஞ்சாயத்து யூனியன் உதவி செயற்பொறியாளர் சண்முகம், வட்டர வளர்ச்சி அலுவலர் விஜயன், உதவி பொறியாளர் மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

விழுப்புரம் நகரில் போக்குவரத்து மாற்றம் நகராட்சி கமிஷனர் சிவக்குமார் தகவல்

Print PDF

தினமலர் 10.06.2010

விழுப்புரம் நகரில் போக்குவரத்து மாற்றம் நகராட்சி கமிஷனர் சிவக்குமார் தகவல்

விழுப்புரம் : விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணி காரணமாக வரும் 14ம் தேதி முதல் சென்னை - திருச்சி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து விழுப்புரம் நகராட்சி கமிஷனர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தற்போது 80 சதவீதம் முடிந்துள்ளன. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அண்ணாதுரை சிலை முதல் காட்பாடி ரயில்வே கேட் வரை முடிக்க வேண்டிய பணிகள் வரும் 14ம் தேதி முதல் 45 தினங்களுக்கு தொடர்ந்து நடக்கவுள்ளன.

இந்த பணிகளின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் பொறுத்துக் கொண்டு திட்ட பணிகளை விரைவில் முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கமிஷனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

 


Page 30 of 57