Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

செங்கம் பஸ் நிலையத்துக்கு சிமென்ட் தளம் அமைக்க நிதி தமிழக அரசு ஒதுக்கியது

Print PDF

தினகரன் 08.06.2010

செங்கம் பஸ் நிலையத்துக்கு சிமென்ட் தளம் அமைக்க நிதி தமிழக அரசு ஒதுக்கியது

வேலூர், ஜூன் 8: தமிழகத்தில் பேரூராட்சிகளில் உள்ள பஸ் நிலையங்கள் பெரும்பாலும் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் இருப்பதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு சென்றன. வாகனங்கள் எளிதில் பஸ் நிலையங்களுக்குள் சென்று வர முடியாத நிலை இருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து மிகவும் மோசமாக உள்ள பேரூராட்சி பஸ் நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் தி.மலை மாவட்டம் செங்கம், சேலம் மாவட்டம் மேச்சேரி, சங்ககிரி, கொளத்தூர், இடங்கணா சாலை, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம், தர்மபுரி மாவட்டம் பொ.மல்லபுரம், பெண்ணாகரம், கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, ஈரோடு மாவட்டம் கொடுமுடி, திருப்பூர் மாவட்டம் முத்தூர், திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை, காட்டுப்புத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி, தேனி மாவட்டம் உத்தமபாளையம், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், கயத்தாறு, கழுகுமலை ஆகிய 22 பேரூராட்சிகளின் பஸ் நிலையங்கள் மிக மோசமாக இருப்பதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து 2010&11ம் ஆண்டு பகுதி&2 திட்டத்தின் கீழ் மேற்கண்ட பேரூராட்சி பஸ் நிலையங்கள் அனைத்தும் சிமென்ட் தளங்களாக மாற்ற ரூ.3 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

 

நாசரேத், கயத்தாறு, கழுகுமலை பஸ்ஸ்டாண்டுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 03.06.2010

நாசரேத், கயத்தாறு, கழுகுமலை பஸ்ஸ்டாண்டுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

தூத்துக்குடி: தமிழகத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் உள்ள பஸ் ஸ்டாண்ட் ஓடுபாதைகளை சரி செய்ய 3 கோடியே 50 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத், கயத்தாறு மற்றும் கழுகுமலை டவுன் பஞ்.,களில் உள்ள பஸ் ஸ்டாண்டுகள் 45 லட்சம் ரூபாய் நிதியில் சீர் செய்யப்படவுள்ளது.

2010-2011 டவுன் பஞ்.,கள்-பகுதி2 திட்டங்களின் கீழ் தமிழகத்தில் உள்ள 22 டவுன் பஞ்., களில் உள்ள பஸ் ஸ்டாண்ட் உட்பகுதியில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சிமெண்ட் தளம் அமைக்க அரசின் சார்பில் நிர்வாக ஒப்பளிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு முதன்மை செயலாளர் நிரஞ்சன்மாடி வெளியிட்டுள்ள அரசாணை (2) எண்.33, தேதி28-5-2010ல் கூறியுள்ளதாவது;

டவுன் பஞ்., களின் இயக்குநர் பெரும்பான்மையான டவுன் பஞ்., களில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள ஓடுதளங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன எனவும், அவற்றை சரி செய்தால் பஸ்கள் மிக எளிதாக சென்று வர ஏதுவாகும் என்றும், பொதுமக்கள் குறிப்பாக மழை காலத்தில் சிரமமின்றி இப்பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வர இயலும் என்பதால் 14 மாவட்டங்களில் உள்ள 22 டவுன் பஞ்., களில் உள்ள பஸ் ஸ்டாண்ட் ஓடு தளங்களை சரி செய்ய 3 கோடியே 50 லட்சம் ரூபாய் தேவை என்று கோரி இருந்தார். இதனை பரிசீலனை செய்து நிதி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 22 டவுன் பஞ்., களும் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து டவுன் பஞ்., மன்றத்தில் ஒப்புதல் பெற்று உடன் பகிர்ந்தளிக்குமாறு டவுன் பஞ்., இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் டவுன் பஞ்.,க்கு 15 லட்சம் ரூபாய், சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரிக்கு ரூ.15 லட்சம், சங்ககிரி-ரூ.20 லட்சம், கொளத்தூர்-ரூ.15 லட்சம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மல்லசமுத்திரம்-ரூ.15 லட்சம், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ.மல்லபுரம்-ரூ.15 லட்சம், பொன்னகரம்-ரூ.15 லட்சம், வேலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி-ரூ.15 லட்சம், ஸ்ரீமுஷ்ணம்-ரூ.25 லட்சம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி-ரூ.20 லட்சம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி-ரூ.20 லட்சம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர்-ரூ.20 லட்சம், திருச் சி மாவட்டத்தில் உள்ள தாத்தையங்கார்பேட் டை-ரூ.10 லட்சம், காட்டுபுத்தூர்-ரூ.15 லட்சம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர்-ரூ.10 லட்சம், மதுரை மாவட்டத்தில் உள்ள டி.கல்லுப்பட்டி -ரூ.10 லட்சம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம்- ரூ.20 லட்சம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத்-ரூ.15 லட்சம், கயத்தாறு-ரூ.15 லட்சம், கழுகுமலை-ரூ.15 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட்களில் சிமென்ட் ஓடுதளம் அமைக்க ரூ.3.50 கோடி நிதி விடுவிப்பு

Print PDF

தினகரன் 02.06.2010

பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட்களில் சிமென்ட் ஓடுதளம் அமைக்க ரூ.3.50 கோடி நிதி விடுவிப்பு

சிவகங்கை, ஜூன் 2: தமிழகத்தில் பெரும்பாலான பேரூராட்சிகளில் உள்ள பஸ் ஸ்டாண்ட் மிகவும் மோசமாக உள்ளதால், மழை காலங்களில் மக்கள் பெரிதும் சிரமம் அடைகின்றனர். மிகவும் மோசமாக உள்ள 22 பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட்களில் சிமெண்ட் ஓடுதளம் அமைக்க ரூ.3.50 கோடி விடுவிக்கவேண்டுமென அரசுக்கு பேரூராட்சி நிர்வாக இயக்குநர் கருத்துரு அனுப்பினார்.

இதையடுத்து 2010&11ம் ஆண்டிற்கான பகுதி&2 திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடியை விடுவித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் நிரஞ்சன்மார்டி உத்தரவிட்டார்.

பயன்பெறும் பேரூராட்சிகளின் விவரம்:

திருவண்ணாமலை&செங்கம், சேலம்& மேச்சேரி, சங்ககிரி, கொளத்தூர், இடங்கணாசாலை, நாமக்கல்&மல்லசமுத்திரம், தர்மபுரி&பொ.மல்லபுரம், பெண்ணகரம், கடலூர்&திட்டக்குடி, ஸ்ரீமுஸ்ணம், நீலகிரி&கோத்தகிரி, ஈரோடு&கொடுமுடி, திருப்பூர்&முத்தூர், திருச்சி&தாத்தையங்கார்பேட்டை, காட்டுபுத்தூர், புதுக்கோட்டை&கீரனூர், மதுரை&டி.கல்லுப்பட்டி, தேனி&உத்தமபாளையம், திண்டுக்கல்&ஒட்டன்சத்திரம் (வெளியூர் பஸ்நிலையம்), தூத்துக்குடி&நாசரேத், கயத்தாறு, கழுகுமலை.

 


Page 31 of 57