Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

நாசரேத், கழுகுமலை உட்பட 22 பேரூராட்சி பஸ் நிலையங்களில் சிமென்ட் தளம் அமைக்க ரூ.3.50 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 01.06.2010

நாசரேத், கழுகுமலை உட்பட 22 பேரூராட்சி பஸ் நிலையங்களில் சிமென்ட் தளம் அமைக்க ரூ.3.50 கோடி ஒதுக்கீடு

நெல்லை, ஜூன். 1: தமிழகத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் இருக்கும் பஸ் நிலையங்களில் சிமென்ட் தளம் அமைக்க ரூ.3.50 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான பேரூராட்சி பஸ் நிலையங்களில் பஸ் நிற்கும் இடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இவற்றை சீரமைத்தால் பஸ்கள் மிக எளிதில் சென்று வர முடியும். குறிப்பாக மழைக்காலத்தில் பொதுமக்கள் சிரமப்படுவதை தவிர்க்கலாம் எனவும், இதற்கு ரூ.4 கோடியே 48 லட்சம் செலவாகும் என மதிப்பீடு தயாரித்து பேரூராட்சிகள் இயக்குனர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இந்த கருத்துருவை அரசு ஆய்வு செய்து 2010&11ம் ஆண்டிற்கான பகுதி 2 திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 22 பேரூராட்சிகளில் உள்ள பஸ் நிலையங்களில் சிமென்ட் தளம் அமைக்கும் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டது. இதற்கான நிதியையும் அரசு விடுவித்தது.

விரிவான திட்ட அறிக்கை தயாரித்து பேரூராட்சி மன்றத்தில் ஒப்புதல் பெற்றவுடன் அந்தந்த பேரூராட்சிக்கு நிதியை பகிர்ந்தளிக்குமாறு அரசு முதன்மை செயலாளர் நிரஞ்சன்மார்டி உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத், கயத்தாறு, கழுகுமலை ஆகிய பேரூராட்சிகளில் உள்ள பஸ் நிலையங்களில் தலா ரூ.15 லட்சம் செலவில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

 

ரயில் நிலையத்திற்கு தேவையான நிலத்தை வழங்க தூத்துக்குடி மாநகராட்சி முடிவு

Print PDF

தினமணி    28.05.2010

ரயில் நிலையத்திற்கு தேவையான நிலத்தை வழங்க தூத்துக்குடி மாநகராட்சி முடிவு

தூத்துக்குடி, மே 27: தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தை புதிய பஸ் நிலையம் அருகே இடமாற்றம் செய்ய தேவையான நிலத்தை ரயில்வே நிர்வாகத்திற்கு வழங்க தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஈடாக மேலூர் ரயில் நிலையத்தில் உள்ள இடத்தினை பெற்றுக்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற அவசர மற்றும் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை மேயர் இரா. கஸ்தூரி தங்கம் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் பெ. குபேந்திரன், துணை மேயர் ஜே. தொம்மை ஜேசுவடியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தை தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் எதிரில் உழவர் சந்தைக்கு தெற்கு பகுதிக்கு மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக அந்த பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 3241.5 சதுர மீட்டர் இடத்தை ரயில்வே நிர்வாகத்திற்கு இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் மூலம் கோரப்பட்டிருந்தது. பொதுமக்கள் நலன் கருதி இந்த இடத்தினை ரயில்வே நிர்வாகத்திற்கு வழங்க தூத்துக்குடி மாநகராட்சி ஏற்கெனவே முடிவு செய்திருந்தது. மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட இந்த 3241.5 சதுர மீட்டர் இடத்தின் மதிப்பு ரூ. 1,48,29,863 ஆகும். இந்த தொகையை ரயில்வே நிர்வாகம் தரவேண்டும் அல்லது கிரையத் தொகைக்கு ஈடாக ரயில்வே நிர்வாகத்தின் இடத்தினை வழங்க சம்மதம் தெரிவிக்குமாறு ரயில்வே நிர்வாகத்திடம் மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, கிரையத் தொகைக்கு ஈடாக ஆண்டாள் தெரு மேலூர் ரயில் நிலைய பிளாட்பாரம் அமைந்துள்ள இடத்தினை மாநகராட்சி நிர்வாகத்திற்கு வழங்க ரயில்வே நிர்வாகம் சம்மதம் தெரிவித்திருந்தது.

அந்த பகுதியில் 1 சதுர மீட்டருக்கு மதிப்பு ரூ. 3780 ஆக உள்ளது. அதன்படி மாநகராட்சி நிலம் 3241.5 சதுர மீட்டருக்கு ஆண்டாள் தெருவில் 3923.5 சதூர மீட்டர் பரப்பளவுள்ள இடத்தை ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து பெறுவது என புதன்கிழமை நடைபெற்ற மாநகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சிக்கு சொந்தமான 3241.5 சதுர மீட்டர் நிலத்தை ரயில்வே நிர்வாகத்திற்கு நில உரிமை மாற்றம் செய்வது தொடர்பாகவும், ரயில்வே நிர்வாகம் மாநகராட்சிக்கு வழங்கப்படவுள்ள 3923.5 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடத்தினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் அரசின் பரிசீலனைக்கும், தக்க உத்தரவுக்கும் நகராட்சி நிர்வாக இயக்குநர் மூலமாக கருத்துரு அனுப்புவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

மேலூர் ரயில்வே ஸ்டேஷனை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகில் மாற்ற மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி

Print PDF

தினமலர்      28.05.2010

மேலூர் ரயில்வே ஸ்டேஷனை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகில் மாற்ற மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி

தூத்துக்குடி : தூத்துக்குடி மேலூர் ரயில்வே ஸ்டேசனை புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றம் செய்வதற்கு தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் கஸ்தூரி தங்கம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாநகராட்சி எல்கைக்குட்பட்ட மேலூர் ரயில்வே ஸ்டேசனை புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாற்றம் செய்து கொள்ள கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. ரயில்வே நிர்வாகம் தற்போது மேலூர் ரயில்வே ஸ்டேசன் 2 மற்றும் 3வது கேட் இடைப்பட்ட பகுதியிலுள்ள காரணத்தினால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே ரயில்வே நிர்வாகம் தற்போது மேற்கண்ட ரயில்வே நிலையத்தை புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் மாற்றம் செய்ய உத்தேசித்துள்ளது.

தற்போது உத்தேசிக்கப்பட்ட இடத்தில் மேலூர் ரயில்வே ஸ்டேசனை மாற்றினால் போக்குவரத்து நெரிசல் மிகவும் குறையும். எனவே ஆண்டாள் தெருவிலுள்ள மேலூர் ரயில்வே பிளாட்பாம் அமைந்துள்ள 3923.5 சதுரமீட்டர் பரப்பளவுள்ள ரயில்வே இடத்தினை மாநகராட்சிக்கு பெற்றுக் கொண்டு, புதிய பஸ் ஸ்டாண்ட் தெற்கு பகுதியுள்ள மாநகராட்சி சாலை இடமான 3241.5 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இடத்தினை ரயில்வே நிர்வாகத்திற்கு நில உரிமை மாற்றம் செய்ய அரசின் சிறப்பு அனுமதி பெற்று ரயில்வே நிர்வாகத்திற்கு வழங்கலாம் என்று கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி பாளை ரோடு வட்டத்தெப்பம் குளியலறை அமைந்துள்ள இடத்தில் மாநகராட்சி வருவாயை பெருக்கும் நோக்கத்தில் வணிக வளாக கட்டடம் கட்ட தீர்மானித்துள்ளதால் மேற்படி குளியலறை ஏல இனத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி இடத்தில் வணிக வளாகம் கட்டும் பட்சத்தில் கடந்த காலங்களில் மேற்படி குளியலறை மூலமாக வரப்பெற்ற வருவாயைவிட கூடுதல் வருவாய் கிடைக்கும் என மன்றம் கருதியதின் அடிப்படையில் புதிதாக வணிக வளாக கட்டடம் கட்டத் தீர்மானிக்கப்பட்டது. மேற்கண்ட இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து 23மீ நீளம் 5 மீ அகலம் கொண்ட இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான ரோச் பூங்காவில் உபயோகம் இல்லாமல் உள்ள கட்டடத்தில் ரோச் பார்க் வாக்கர்ஸ் கிளப் மூலமாக ஜிம் வைப்பதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. இதற்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கலாம் என்று கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

 


Page 32 of 57