Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

மேட்டுப்பாளையம் சாலை நவீன பஸ் நிலைய பணி

Print PDF

தினமணி          24.05.2010

மேட்டுப்பாளையம் சாலை நவீன பஸ் நிலைய பணி

கோவை, மே 23: நவீன முறையில் கட்டப்பட்டு வரும் மேட்டுப்பாளையம் சாலை பஸ் நிலையத்தை தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

÷மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் ரூ.8 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. ஜவஹர்லால் நேரு தேசிய புனரரமைப்புத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் இப் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தை ஸ்டாலின் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

÷இரண்டு தளங்கள் கொண்ட இந்த பஸ் நிலையத்தில் குளிரூட்டப்பட்ட பயணிகள் அமரும் அறைகள், பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை, அலுவலக அறைகள் உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார்.÷பஸ் நிலைய பணிகள் ஜூன் முதல் வாரத்தில் முடிவடைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம், நகராட்சி நிர்வாக ஆணையர் நிரஞ்சன் மார்டி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் இயக்குநர் செந்தில், மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத், மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Last Updated on Tuesday, 25 May 2010 04:22
 

மேட்டுப்பாளையம் ரோட்டில் ரூ.8 கோடியில் பஸ் நிலையம் துணை முதல்வர் திருப்தி

Print PDF

தினகரன்      24.05.2010

மேட்டுப்பாளையம் ரோட்டில் ரூ.8 கோடியில் பஸ் நிலையம் துணை முதல்வர் திருப்தி

கோவை, மே 24: கோவை மேட்டுப்பாளையம் ரோட் டில் ஜவகர்லால் நேரு நகர்ப் புற புனரமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.8 கோடி செல வில் அமைக்கப்பட்டுள்ள நவீன பேருந்து நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதி களை ஆய்வு செய்த துணை முதல்வர் ஸ்டாலின் திருப்தி தெரிவித்தார்.

கோவையில் அடுத்த மாதம் நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பணி களை ஆய்வு செய்வதற்காக துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை கோவை வந்தார். காலையில் அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வு க்கு பின்னர் கொடிசியா வளாகம், வஉசி பூங்கா ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் மாநகராட்சி மற்றும் மற்ற துறைகள் சார்பில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை மதியம் ஆய்வு செய்தார்.

உள்ளூர் திட்டக்குழுமம் சார்பில் பீளமேடு நவ இந்தி யா அருகில் எஸ்என்ஆர் கல் லூரி அருகே திட்டச்சாலை அமைக்கப்படுகிறது. இதில் சங்கனூர் ஓடையின் குறுக் கே ரூ.25 லட்சம் செலவில் பாலம் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் சுணக்கமாக இருப்பதை சுட்டிக்காட்டிய துணை முதல்வர், ஜூன் முதல் வாரத்திற்குள் பணிகள் முடிக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து ரங்கவிலாஸ் மில் அருகில் அமைக்கப்படும் திட்டச்சாலையை ஆய்வு செய்து விட்டு திருச்சி ரோடு விரிவாக்க பணிகளை பார்வையிட்டார்.

ஒண்டிப்புதூர் அருகே தரைவழிப்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருச்சி ரோட்டில் ரூ.16 கோடி செலவில் விரிவாக்க பணி கள் நடந்து வருவது குறித்து முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி, கலெக்டர் உமா நாத் ஆகியோர் விளக்கினர்.

"ஏற்கனவே இந்த சாலை யில் போக்குவரத்து நெரிசல் உள்ள சூழலில் காலதாமதமின்றி பணிகள் முடிக்கவேண்டும்," என அப்போது அதிகாரிகளிடம் கூறினார். சாலையின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

பின்னர், இருகூர், பள்ளபாளையம், சூலூர் வழியாக சோமனூரில் நடந்து வரும் ரயில்வே மேம்பால பணியை பார்வையிட்ட பின்னர் கருமத்தம்பட்டி, அவிநாசி ரோடு வழியாக கோவை மேட்டுப்பாளையம் ரோடு பேருந்து நிலையத்திற்கு சென்றார்.

கோவை மாநகராட்சி யில் ஜவகர்லால் நேரு நகர்ப் புற புனரமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் மேட்டுப்பாளை யம் ரோட்டில் ரூ.8 கோடி செலவில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள் ளது. இதில் பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு குளிர் சாதன வசதியுடன் கூடிய அறைகள், பேருந்து ஓட்டுநர்கள் ஓய்வெடுக்க தனி அறைகள், பாலூட் டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் என பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள் ளன. மின் செலவை கட்டுப்படுத்த சோலார் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வசதிகளை நேரில் பார்வையிட்ட துணை முதல்வர், இவ்வளவு வசதி கள் செய்யப்பட்டுள்ளதா என வியப்பு தெரிவித்தார். அருகில் இருந்த கலெக்டர் உமாநாத் மற்றும் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ராவுடன் தனது மகிழ்ச் சியை பகிர்ந்து கொண் டார்.

பணிகள் குறித்து ஆணையர் அன்சுல் மிஸ்ரா, "தற்போது மின் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் அடுத்த சில தினங்களில் முழுமையாக முடிந்து ஜூன் முதல் வாரத் தில் தயாராகி விடும். மேட்டுப்பாளையம், ஊட்டியில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் இங்கிருந்து இயக்கப்படுவதால் காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும்," என்று துணை முதல்வரிடம் தெரிவித்தார். அடுக்கடுக்கான வசதிகளை கொண்ட இந்த பேருந்து நிலையம் தரமான முறையில் பராமரிப்பது அவசியம். அதில் கவனம் செலுத்தவேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

துணை முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் பொங் கலூர் பழனிச்சாமி, மாநா ட்டு தனி அதிகாரி அலாவு தீன் உட்பட அதிகாரிகள் சென்றனர்.

 

ரூ.ஒரு கோடியில் பஸ் ஸ்டாண்ட், நகராட்சி அலுவலகம்: அனகாபுத்தூரில் நாளை திறப்பு விழா

Print PDF

தினமலர்        15.05.2010

ரூ.ஒரு கோடியில் பஸ் ஸ்டாண்ட், நகராட்சி அலுவலகம்: அனகாபுத்தூரில் நாளை திறப்பு விழா

பல்லாவரம்: அனகாபுத்தூர் நகராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்டமான நகராட்சி அலுவலக கட்டடமும், நவீன வசதிகளுடன் பஸ் ஸ்டாண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதை, நாளை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி., டி.ஆர்.பாலு திறந்து வைக்கிறார்.

அனகாபுத்தூர் நகராட்சி அலுவலகம் தற்போது வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பகுதி-2 திட்டம் மற்றும் நகராட்சி பொது நிதி உட்பட 50 லட்சம் ரூபாய் மதிப்பில், 2,453 சதுர அடியில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் பல்வேறு அறை கள், பொதுமக்கள் அமரும் வசதி உட்பட நவீன வசதிகளுடன் 2009ம் ஆண்டு, புதிய நகராட்சி அலுவலக கட்டடம் கட்டும் பணி துவங்கியது. மார்பிள் கற்கள் பதிப்பது, சுற்றுச் சுவர் அமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. அதேபோல, அனகாபுத் தூரில் 18 ஆயிரத்து 753 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா பஸ் ஸ்டாண்ட், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி., டி.ஆர்.பாலு தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 58 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது.

பஸ் ஸ்டாண்ட் முழுவதும் சிமென்ட் சாலை, பயணிகள் அமரும் இருக்கை, மேற்கூரை, நுழைவாயில், கிரில் கேட் என பல்வேறு வசதிகள் செய்யப்பட் டுள்ளன. இதற்கான பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி., டி.ஆர்.பாலு நாளை, இந்த புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் நகராட்சி அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறார். விழாவில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன், நகராட்சித் தலைவர் பாரதிகுமார், செயல் அலுவலர் முனியாண்டி, பொறியாளர் சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

 


Page 33 of 57