Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் டவுன் பஞ்.,பகுதிகளிலும் செயல்படுத்திட வேண்டும் : எம்..எல்.ஏ

Print PDF

தினமலர்   21.05.2010

குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் டவுன் பஞ்.,பகுதிகளிலும் செயல்படுத்திட வேண்டும் : எம்..எல்.

கடையநல்லூர் : தமிழகத்தில் உள்ள அனைத்து டவுன் பஞ்., பகுதிகளிலும் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டித்தர உள்ள திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளாதாக பீட்டர் அல்போனஸ் எம்.எல்.. தெரிவித்தார்.

ஆய்க்குடியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் சிமென்ட் தளம் 7.50 லட்ச ரூபாய் செலவிலும், அகரக்கட்டில் 19 லட்ச ரூபாய் செலவில் மேல்நிலை தொட்டி அமைக்கப்படுவதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. டவுன் பஞ்., தலைவர் வள்ளிமயில் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அந்தோணிவியாகப்பன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் காளியப்பன் வரவேற்றார்.

யூனியன் சேர்மன்கள் சட்டநாதன், காமராஜ், வட்டார காங்., தலைவர் கிளாங்காடு மணி, திமுக செயலாளர் ராமசுப்பிரமணியன், எம்.எல்.. அலுவலக மேலாளர் புலவர் செல்வராஜ், முன்னாள் வட்டார தலைவர் ஆய்க்குடி மணி, கவுன்சிலர் ராமசாமி உட்பட பலர் பேசினர்.

புதிய பணிகளுக்கான பூமி பூஜை விழாவினை துவக்கி வைத்து பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்..பேசியதாவது:- ஆய்க்குடி பகுதி மக்களுக்கு தேர்தல் நேரத்தில் தெரிவித்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்பதை என்னும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்தினை கருத்தில் கொண்டு தாமிரபரணி குடிநீர் திட்டம் மேற்கொள்ளபட்டது பெறும் மகிழ்ச்சியாகும்.

இப்பகுதியில் பிரசித்தி பெற்று விளங்கும் ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் பகுதியில் சிமென்ட் தளம் அமைத்திட வேண்டும் என திருப்பணிதாரர்கள், ஊர் பொதுமக்கள், கோயில் நிர்வாகத்தினர் சார்பில் வலியுறுத்தப்பட்டதை தொடர்ந்து சிமென்ட் தளம் அமைக்கும் பணிக்காக தொகுதி எம்.எல்.. மேம்பாட்டு நிதியில் இருந்து 7.50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அகரகட்டில் குடிநீர் சீராக கிடைத்திடும் வகையில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி 19 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பயனாளிகள் கிராம பஞ்.,களில் தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் இத்திட்டத்தினை டவுன் பஞ்., பகுதிகளில் அமைந்துள்ள குடிசைவாழ் மக்களுக்கும் செயல்படுத்திட வேண்டும் என தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விழாவில் மாவட்ட காங்., துணைத் தலைவர் சிவராமகிருஷ்ணன், மாரியப்பன், ஆலங்குளம் வட்டார காங்., தலைவர் ஆலங்குளம் செல்வராஜ், ஆய்க்குடி டவுன் பஞ்., இளைஞர் காங்., தலைவர் கார்வின், டவுன் பஞ்., இளநிலை பொறியாளர் அரிகரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.