Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மானியத்துடன் கூடிய கடனுதவி: வீட்டுவசதி வாரியம் அழைப்பு

Print PDF

தினமலர்       21.05.2010

மானியத்துடன் கூடிய கடனுதவி: வீட்டுவசதி வாரியம் அழைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்பகுதிகளில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீடு கட்ட விரும்புவோர் வீட்டுவசதி வாரிய அலுவலகங்களை தொடர்புகொள்ளலாம். இதுகுறித்து வீட்டுவசதி வாரியம் சார்பில் வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு வீடுகள் கட்ட மானிய வட்டியில் கடன் வழங்கும் திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயன்பெறலாம்.விண்ணப்பத்தாரர், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பெயரில் சொந்தமாக வீடுகள் இருத்தல் கூடாது. வீட்டுமனை பட்டா உள்ளவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படும். மாத வருமானம் ஐந்தாயிரம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் 25 சதுர மீட்டர் அளவில் வீடுகள் கட்டுவதென்றால் ஒரு லட்சம் ரூபாய் வரை 5 சதவீத மானிய வட்டியில் கடன் வழங்கப்படும். இதற்கு மேல் மாத வருமானம் உள்ளவர்கள் குறைந்த வருவாய் பிரிவினராக கருதப்பட்டு அவர்களுக்கு 40 .மீட்டர் அளவில் வீடுகள் கட்டுவதற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும்.

இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வட்டி மானியம் வழங்கப்படும். கடன் தொகையை 20 ஆண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். கூடுதல் கடன்தொகை தேவைப் படுபவர்களுக்கு மானிய உதவியின்றி வங்கிகள் மூலம் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனடிப்படையில் புதிய வீடுகள் கட்ட கடனுதவி பெற விரும்பும் புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த தகுதியுடைய நபர்கள் புதுக்கோட்டை வீட்டுவசதி வாரிய அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.