Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசைப்பகுதி மேம்பாடு பணி மாநகராட்சி மேயர், கமிஷனர் நேரில் ஆய்வு

Print PDF

தினமலர் 07.06.2010

குடிசைப்பகுதி மேம்பாடு பணி மாநகராட்சி மேயர், கமிஷனர் நேரில் ஆய்வு

திருச்சி: ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாடுத் திட்டத்தின் கீழ் 19.96 கோடி ரூபாய் செலவில் திருச்சி மாநகர் பகுதியில் 1,208 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாடுத் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட நான்கு கோட்டங்களிலும் 36 அங்கீகரக்டக்கப்பட்ட குடிசைப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், 19.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1208 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், 1147 குடிசை வீடுகளுக்கு பதிலாக ஆர்.சி.சி., கூரையிலான வீடுகளும், 61 ஓடு, கல்நார் கூரையிலான வீடுகளில் அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றுக்கு மத்திய, மாநில அரசு மான்யம், மாநகராட்சி பொதுநிதி பயனாளிகள் பங்களிப்பு போன்ற நிதியாதாரத்துடன் தலா ஒரு லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் 1,147 வீடுகள் 14.91 கோடி மதிப்பீட்டிலும், மேலும் அபிவிருத்துடப் பணிகள் நடைபெற்று வரும் வீடு ஒன்றுக்கு மத்திய, மாநில அரசு மான்யம் மாநகராட்சி பொதுநிதி பயனாளிகள் பங்களிப்பு போன்ற நிதியாதாரத்துடன் தலா 40 ஆயிரம் மதிப்பீட்டில் 61 வீடுகள் 24.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 15.15 கோடி மதிப்பீட்டில் 1208 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதுதவிர மேற்குறிப்பிட்ட குடிசைப் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்வதற்கு 4.8 கோடி மதிப்பீட்டிலும் சேர்த்து 19.96 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது.அதன்படி, கோ.அபிஷேகபுரம் கோட்டம் அங்கீகரிக்கப்பட்ட குடிசைப் பகுதியான கல்நாயக்கன் தெருவில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியினை மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி ஆகியோர் நேற்று முன்தினம் பார்வையிட்டனர். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

பாண்டமங்கலம் பகுதியில் 8.85 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் உடற்பயிற்சி மையம், மழைநீர்வடிகாலுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, புதியகாலனி பகுதியில் 3.15 லட்சத்தில் மழைநீர்வடிகாலுடன் கூடிய கான்கிரீட் சாலை அஐமக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

குழுமணி சாலையில் 75 லட்சம் செலவில் காசிவிளங்கி பாலம் விரிவாக்கப்பணி, லிங்கநகரில் 55 லட்சம் ரூபாயில் 360 மீட்டர் தூரம் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர்வடிகால் மற்றும் குடிநீர் குழாய் விநியோக இணைப்புகள் செல்ல ஏதுவாக தனித்தனி கால்வாய் அமைக்கும் பணியை பார்வையிட்டனர்.ஆய்வின்போது, செயற்பொறியாளர் சந்திரன், கோட்டத்தலைவர் அறிவுடைநம்பி, கவுன்சிலர் தங்கராஜ், திருநாவுக்கரசு, உதவி செயற்பொறியாளர் நாகேஷ் உள்பட பலர் உடனிருந்தனர