Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி குடிசைப் பகுதிகளில்அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட ஆய்வு

Print PDF

தினமணி 13.06.2010

மாநகராட்சி குடிசைப் பகுதிகளில்அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட ஆய்வு

திருச்சி, ஜூன் 12: திருச்சி மாநகராட்சி குடிசைப் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை மேயர் மற்றும் ஆணையர் சனிக்கிழûமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், திருச்சி மாநகராட்சியில் உள்ள குடிசைப் பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்களுக்கு அரசு மானிய உதவியுடன், அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தரப்பட உள்ளன.

இதன்படி அரியமங்கலம் கோட்டம், 19 -வது வார்டுக்குள்பட்ட ஜெயில்பேட்டையில் மதுரை சாலைக்கும்- துணை சிறைக்கும் இடையே அமைந்துள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ஒரு பகுதியில் 2.47 ஏக்கர் பரப்பளவில் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கான முதல் கட்டப் பணிகள் நடைபெற உள்ளன.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டடப்பட உள்ள இடத்தை மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம், மாநகராட்சி உறுப்பினர் எம். முகமது முஸ்தபா, தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய உதவிச் செயற்பொறியாளர் ஆர். ஜயபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.