Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவு ஊழியர்களுக்கு ரூ.75 லட்சத்தில் குடியிருப்பு

Print PDF

தினகரன் 14.06.2010

துப்புரவு ஊழியர்களுக்கு ரூ.75 லட்சத்தில் குடியிருப்பு

ஈரோடு, ஜூன் 14:ஈரோடு மாநகராட்சியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவானந்தம் ரோட் டில் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு கட்டப்பட்டது. 50 ஆண்டு ஆன தால் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதற்காக துப்புரவு பணியாளர்களுக்கு புதிதாக குடியிருப்பு கட்டித் தர மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

இங்கு வசித்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு 400 சதுர அடி பரப்பளவில் புதியதாக குடியிருப்பு கட்டப்படவுள்ளது. தற்போதுள்ள பழைய குடியிருப்பு கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு இதே இடத்தில் புதிதாக 12 குடியிருப்புகள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக இடை வெளி நிரப்புதல் திட்ட நிதி மற்றும் மாநகராட்சி நிதி மூலம் ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதால் ஏற்கனவே இங்கு வசித்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு புதிய கட்டிடம் கட்டும் வரை மாற்று இருப்பிட வசதி ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான ஹெம்மிங்வே மார்க்கெட் வணிக வளாக கட்டிடத்தின் தரை தளத்தில் காலியாக உள்ள இடத்தில் தடுப்புகள் அமைத்து துப்புரவு பணியாளர்களுக்கென தற்காலிக குடியிருப்புகள், குடிநீர் வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.முதற்கட்டமாக துப்புரவு பணியாளர் களுக்கு தற் காலிக குடியிருப்பு அமைத்து கொடுத்த பிறகு புதிய குடியிருப்பு பணிகள் தொடங் கும். இந்த ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.