Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பதியை குடிசை இல்லாத நகரமாக மாற்ற ஹி2,223 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 13.08.2010

திருப்பதியை குடிசை இல்லாத நகரமாக மாற்ற ஹி2,223 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

திருப்பதி, ஆக.13: திருப்பதியை குடிசை இல்லாத நகரமாக மாற்ற மத்திய அரசு க்ஷீ2,223 கோடி ஒதுக்கி உள்ளதாக ஆந்திர மாநில ராஜிவ் ஆவாஸ் யோஜனா திட்ட அதிகாரி அபர்ணா தாஸ் தெரிவித்தார்.

திருப்பதி நகர வளர்ச்சி அலுவலகத்தில் நகராட்சி கமிஷனர் ஜானகி தலைமையில் ராஜூவ் ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆந்திர மாநில ராஜிவ் ஆவாஸ் யோஜனா திட்ட அதிகாரி அபர்ணா தாஸ் கலந்து கொண்டு பேசியது:

குடிசைகள், ஷெட்டுகள் இல்லாத நவீன நகரமாக திருப்பதியை மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி நவீன முறையில் புதிய கட்டிடங்கள் கட்ட ராஜிவ் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் க்ஷீ2,223 கோடியை மத்திய அரசு திருப்பதிக்கு ஒதுக்கியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக நேற்று க்ஷீ139 கோடி வந்துள்ளது.

இந்த நிதி மூலம் புதிய கட்டிடங்கள், சாலை, குடிநீர் வசதிகள், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்டவைகள் செய்து முடிக்கப்படும். இதற்காக குடிசைப்பகுதிகளில் வாழும் குடும்பங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு நடத்த பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் குடிசை வீடுகளில் வாழும் 13 ஆயிரம் குடும்பத்தினரை சந்தித்து பேசியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நகர வளர்ச்சி அலுவலக துணைத் தலைவர் பென்சல் ரெட்டி, நகராட்சி இணை கமிஷனர் கொண்டல் ராவ் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.