Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேனியில் குடிசை மாற்று வாரிய வீடுகட்டும் திட்டம்

Print PDF

தினமலர் 26.08.2010

தேனியில் குடிசை மாற்று வாரிய வீடுகட்டும் திட்டம்

தேனி:தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் நகர்ப்புற ஏழை மக்களுக்கு மானியத்துடன் கூடிய வட்டியில் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகர வீடு, ஓலை வீடு, ஓட்டு வீடுகளில் வசிக்கும் ஏழைகளும், காலி மனை வைத் துள்ளவர்களும் கான்கிரீட் வீடு கட்ட கடன் வழங்கப் படுகிறது. 270 சதுர அடி வரை ஒரு லட்சம் ரூபாயும், 400 சதுர அடி வரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் கடன் வழங்கப்படுகிறது.

15 முதல் 20 ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்த வேண்டும். விண் ணப்பிக்க விரும்புவோர் இடத்திற்கான பட்டா அல்லது பத்திரம், வருமானச்சான்றுடன்(ஒரு லட்சம் கடனுக்கு 50 முதல் 60 ஆயிரம் வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும், 1.60 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு ஆண்டு வருமானம் ஒரு லட்சம் இருக்க வேண்டும்) மதுரையில் உள்ள குடிசை மாற்று அலுவலகத்துக்கு விண்ணப் பிக்கலாம். தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம். கடன் வட்டி ஒன்பது சதவீதத்தில் ஐந்து சதவீதம் வட்டியை அரசே ஏற்கும். மீதமுள்ள நான்கு சதவீதம் வட்டியை கடன் பெற் றோர் கட்ட வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நகராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Last Updated on Friday, 27 August 2010 05:14